இல்லாத விட்டில் பூச்சியை இருப்பதாக நினைத்து மிதித்த போது தெறித்த தண்ணீர்த்துளியின்சப்தமும்அதன்ஓடித்தெரிந்த சிதறல்களும் பார்க்க நன்றாக
-வேயிருக்கிறது.
-வேயிருக்கிறது.
விழிபடர்ந்தபார்வைக்கும்பார்வைபடர்ந்தபரப்பிற்குமாய்நன்றாகத்தானேயிருக்கிறது என நினைத்து துளித்துளியாய் தண்ணீரை விட்டு வலது பாதத்தாலும் இடது பாதத்தாலும் மிதித்து,மிதித்துப் பார்க்கிறேன்.
அரையங்குல நீளத்திற்கும் குறைவாய் இருந்த விட்டில் பூச்சி தாவித்தாவி அமர்ந்து கண்ணாமூச்சி காட்டியது.
கழியவறையிலிருந்து இறங்கி பாத்ரூமில் காலடி எடுத்து வைத்த வேளை முதலாவதாய் ஓரிடத்தில், இரண்டாவதாய் தாவி அமர்ந்தது மற்றோரிடத்தில் மூன்றாவதாய்,நான்காவதாய் வேறோர்,வேறோர் இடம் ,,,,,,,,,,,,,என தாவித்தாவி அமர்ந்த இடங்கள் அனைத்தும் நான் நின்றிருந்த இடத்தை அன்மித்தும் எனது காலடியைச் சுற்றியுமே/அதுவலதா, இடதா என சொல்லத் தெரியவில்லை சரியாக .சமயத்தில் இரண்டிற்கும் மத்தியிலுமாக தாவிப்
படர்ந்து அமர்ந்து கொள்கிறது.
மஞ்சள்கலர் பக்கெட்டிலிருந்த தண்ணீர் என் கையிலிருக்கிற ஊதாக்கலர் கப்பைஅரைபாதியாய்நிரப்பிநிற்கிறது.அதைக்கொண்டு கைகளிரண்டையும்,
பாதங்களையும் நனைத்த வேளையில் பட்டுத்தெரித்ததாகவே இருந்தது அந்த விட்டில் பூச்சி.
அவரசமாக பார்த்த அரைக்கண நேரத்தில் அதன் கலர் அடர் மஞ்சள் என தெரிந்து கொள்ள முடிந்தது.அப்படியே இருக்கட்டுமே பரவாயில்லை.
தண்ணீரின் நிறத்திலிருந்தும்,தண்ணீர் சிந்திய தரையின் நிறத்திலிருந்துமாய் வேறுபட்டு தெரிந்த அதை அப்படியே விரைந்து நசுக்கி விடலாம் என விரைவாய் எடுத்துவைத்தமிதியிலிருந்துதப்பித்தப்பி ஒவ்வோர் இடமாய் பறந்தமர்கிறது.
தரை,அதில் பரவி நின்ற தண்ணீர் ,அதன் மீது படர்ந்து நின்ற மென் வெளிச்சம் என்கிற கலவையுடனுமாய் தண்ணீரை துளித்துளியாய் தரையில் விட்டு மிதித்துப் பார்க்கிறேன்.விட்டில் பறந்து போன பின்புமாக/
இப்போது விட்டில் இருந்த இடத்தில் என் கால்கள் இரண்டும் விளையாட்டை பதிவு செய்கிறது, தாளலயத்துடனும்,சுருதி சேர்த்துமாய்/
எவ்வளவுதான் ஓசையின்றி மிதித்த போதும் கூட டப்,டப் என அது ஒலி எழுப்பி ஊராரை அழைத்து வந்து காட்டிக்கொடுத்து விடுகிறது.
இரவு 12 மணிக்கு நின்று போன மின்சாரம் திரும்பவுமாய் வருகைதந்த நேரம் ஒன்றுஐந்து.அதென்னஐந்துநிமிடம்அப்படிஒருதாமதம்எனத் தெரியவில்லை.
கொஞ்சம் தூக்கமினமையினாலும்,அதீத கொசுக்கடியினாலும், புழுக்கத்தின்
காரணமாகவும் தூக்கம் திரும்பவும் ஒட்டாமல் போனது. உடலிலும்,
விழிகளிலுமாக சேர்த்து/
சரி வெறுமனே படுத்துக்கொண்டு தூக்கம் வருவது போல பாசாங்காவது செய்யலாம் என நினைத்து பாத்ரூமில் பிரவேசித்த வேளையில் செய்த அதி முக்கியமான பணியாய் இருக்கிறது இது.
“இது நல்லாயிருக்கே என்னடா இது இந்த நேரத்துல டப்பு,டப்புன்னு சத்தம் வருதே சம்மந்தமில்லாமையின்னு பாத்தா நீங்கதானா அது,ஒங்க கைவரிசையில உருவெடுத்து நிக்கிற சில்மிஷம்தானா அது”? என இடுப்பில் கைவைத்து நிற்கிறாள் மனைவி/
ஊதாக்கலர் புடவையிலும்,கருப்புக்கலர் ஜாக்கெட்டிலுமாய் பார்க்க அழகாய்த் தெரிகிறாள்.அந்த இரவின் ஆழ்ந்த மௌனத்திலும் நிசப்தலுமாக/
“என்னாதிது இந்த 49 வயசில இப்பிடி நடுராத்திரியில லைட்டப்போட்டுட்டு வந்துரோதனபண்ணிக்கிட்டுநிக்கிறீங்கஒங்களோடபெரிய இம்சையப்போச்சே
"ராத்திரிதூங்கப்போறவரைக்கும்நல்லாத்தானேஇருந்தீங்க? இப்ப தீடீர்ன்னு
இந்த மாதிரி பண்ணுனா ஐயோ கொடுமையே விடிஞ்செந்டுரிச்சு மொத
வேலையாஎங்கயாவதுபோயி திருநீருபோட்டுமந்திரிக்கணும்,இல்லைன்னா
நல்லடாக்டராப்பாத்தாவது கூட்டிட்டுப்போகணும்.அதுக்கெல்லாம் முன்னாடி
மொத வேலையா எங்க அத்தைக்கு போன் பண்ணி கேக்கணும்,இந்த மாதிரி அடிக்கடிநட்டு கழண்டுக்கிறது கல்யாணத்துக்கு முன்னாடியேஇருந்ததுதானா?இல்ல இப்பத்தான் இப்பிடியான்னு கேக்கணும்.இனிமேயாவது இந்த மாதிரி
சுழிசேட்டபண்ணாமஒழுக்கமா இருக்கச்சொல்லுங்க. சின்னப் புள்ளைங்க
பாத்தாமேலுக்கு சௌள்க்கியமில்லாம போயிரும்ன்னு சொல்லணும்”
அடப்பாவி மனுசா,ஆரம்பத்துலேயே ஒன்னைய கழிச்சுக்கட்டீருப்பேனேய்யா?இப்பிடி மாலையப்போட்டு மஞ்சத்தண்ணிய ஊத்துன ஆடு மாதிரி ஒங்ககிட்ட பட்டுக்கிட்டு முழிக்கிறேனே”,என கையைப்பிடித்து இழுத்து என்னை பாத்ரூமிலிருந்து கூட்டி வருகிறாள்.
எரிந்துகொண்டிருந்தட்யூப்லைட்,நிறைந்துதென்பட்டசமயலறை,பொருட்கள் அடங்கிமின்விசிறிசுழன்றுகொண்டிருந்தஹால்,விரிக்கப்பட்டிருந்தபாய்,அதில்தூங்கிகொண்டிருந்தகல்லூரிஇளங்கலைமூண்றாமாண்டுபடிக்கிறமூத்த மகள்.தாழிடப்பட்டிருக்கிற கதவு.பூக்கள் சிரித்த ஜன்னலின் கம்பிக்க்கிராதிகள்,
வீட்டிற்கு வெளியே படர்ந்திருந்த நிசப்ததை கிழித்த கூர்க்காவின் விசில் சப்தம்.உடன் பாத்ருமில் நானே மிதிப்பதற்காய் நான் சொட்டு விட்டு நின்ற துளி நீர், என எனக்காக கைகட்டி காத்து நிற்க என்கரம் பற்றி இழுத்து வந்து என்னை தூங்கிப்போகச்சொன்னவள் பாத்ரூம் சென்றாள்.
அவள் போன சிறிது நேரத்தில் டப்,டப்,டப்,,,,,,,என பாத்ரூமிலிருந்து சப்தம் வருகிறது தாள லயத்துடனும்,சுருதி சேர்த்துமாய்/
8 comments:
கவிதை போன்றே அழகிய கதை.
(கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகியும் பெண்களுக்கு அந்தக் குசும்புத்தனம் போவதில்லை....)
ரசித்துப் படித்தேன் விமலன் ஐயா.
வணக்கம் அருணா செல்வம் அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சகோ மிகவும் அருமை
அருமை
வணக்கம் மோகன் சார்,நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/
வித்தியாசமான எழுத்து நடை... ரசித்துப் படித்தேன்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அன்பான தாம்பத்யத்தில் இப்படி ஒரு கட்டம் வருமோ !
Post a Comment