5 Sep 2012

நூழிலை,,,,,

                                      


“ஒரு டம்ளர் தண்ணி குடிச்சிகங்க தோழர்” என்பார் அவர்.

டீயின் எண்ணிகை அதிகமாகிக்கொண்டே போகிறது அலசர் வயிறு தாங்கவில்லை தோழா என்றால் அதற்கு அவரது சொல் பிரயோகம் இதுவாகத்தான் உள்ளது.

டீகுடிக்கிறதுக்கு முன்னால ஒரு டம்ளர் தண்ணி குடிச்சிங்கின்னா ஒண்ணும் தெரியாது தோழர் என்பார்.

கோழிக்கறிக்கடைவைத்திருக்கிறார்.பகலில்கோழிக்கறிவியாபாரம்,மாலை மற்றும் இரவும் கைகோர்த்துள்ள நேரங்களில் சில்லிச் சிக்கன் வியாபாரம்.

அவரது கடையில் எஞ்சியவைகளை பொடிப்பொடியாக நறுக்கி பொடியுடன் கலந்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சில்லிச்சிக்கன் ஆகி விடுகிறது.

சூப்பர், நல்ல ஐடியாஇது.யாருடைய கண்டுபிடிப்புஎனத் தெரியவில்லை.இதன் ஆரம்பப்
புள்ளியும்,இதன்முதல்முடிச்சும்எங்குஎந்தப்புள்ளியில்விழுத்ததுஎனத் தெரியவில்லை.
வேறுஎங்குஇருக்கும்? உழைப்பாகளின் வேர்வைவாசம் எங்கு அதிகமாய் முளைத்து குடிகொண்டுள்ளதோ,அங்குதானே இவற்றிற்கான ஆரம்பப்புள்ளியும் துவக்கமும் இருக்க முடிந்திருக்கும்?

நூறு மில்லிக்கும் குறைவாக கண்ணாடிக்கிளாஸில் குடிகொண்டுள்ள டீயில் விரிகிற அல்லது நெசவிடுகிற உழைப்பாளிகளின் உலகம் மிகவும் பெர்யதாகவே உள்ளது ,அவர்களின் அன்றாடப்பாடு சுகம்,துக்கம்,குடும்பம்,பிள்ளைகள்,அவர்களது படிப்பு ,வேலை,கல்யாணம்,சடங்கு,நல்லது,பொல்லது,அக்கம்,பக்கம்,வீதி,நாடு,உலகம்,,,,,,,,,,என இன்னும் இன்னுமாக நிறைந்திருக்கிறவைகளை விரித்துக் காண்பிக்கிற உலகமாய் டீக்கடைகளும்,அங்கு பேசுகிற பேச்சுக்களை தெம்புடன் கொண்டு வருகிற திரவமாய் டீயின் மிடறுகளும் உள்ளது என்பார்.கூடவே வடையும்,சிகரெட்டும்.அது அவரவர் வசதி வாய்ப்ப்பையும் கையிருப்பையும் பொறுத்தது என்பார்.

ஒரு கடி ,ஒரு குடி,ஆற்றிய டீயை கிளாஸீடன் கையில் வாங்கிய அடுத்த கணம் அதை வாங்கி கிளாஸின் அடியில் ஒட்டியிருக்கிற டீயின் சொட்டுக்களை துடைத்து விட்டு (டீப்பட்டரைமேஜைமேல்,தரையில்அல்லதுதோதுப்படுகிறஎதன் மீதாவது)

கைபொறுத்துக் கொள்கிற இளஞ்ச்சூட்டுடனான டீயை வாய் திறந்து நாவின் சுவையறும்புகளில் படரச்செய்து ஒவ்வொரு மிடராக விழுங்கும் போது ஏற்படுகிற சுகமே தனிதான்.

ஒரு கடிக்கான்,ஒரு குடிக்கான்.அது முடிந்ததும் சிகரெட் புகையை ஊதியவாறு கலைகிற உழைப்பாளிகளின் அன்றாட நகர்வில் இந்த நிகழ்வு  முக்கியப் பங்கு  வகிக்கிறது.தோழர் என்பார்.

வீதிகளில் மூட்டை தூக்கியும்,பாரம் சுமந்தும் வேர்வை விற்கிற தொழிலாளிகளின் உறவிடம் வேறு எதுவாய் இருக்க முடியும் சொல்லுங்கள்?

அம்மாதியான டீக்கடைக்கு அடுத்து கூட்டம் கூடுவதும்,கொஞ்சம் பேசுவதும் எனது சில்லிச்சிக்கன் கடையில்தான்.

இப்படி பார்க்கிற கணங்களிலெல்லாம் மிகவும் பிரியமாகவும், ஒட்டுதலாகவும் பேசுகிற அவர்தான் சொல்கிறார், எங்க டீக்குடிச்சாலும் சரி,டீக்குடிக்கிறதுக்கு முன்னால ஒரு டம்ளர் தண்ணி குடிச்சிக்கங்க தோழர் என்கிறார்.

நல்ல விஷயம்தான்,ஆனால் சில சமயங்களில் சாத்தியப்படுகிறது,,பலசமயங்களில் சாத்தியப்படவில்லை.இனிமுடிந்தவரைசாத்தியப்படுத்தமுயல வேண்டும்.

சிலவுக்கும்,பலவுக்கும் இடையிலான வித்தியாசங்கள் எதுவாக இருந்த போதும் இங்கு ஒரு டம்ளர் தண்ணி அவசியமாகிப்போகிறது.  


18 comments:

 1. நல்லா சொனீங்க போங்க

  ReplyDelete
 2. பல நண்பர்கள் "டீ அல்லது காபி குடிக்கிறதுக்கு முன்னால் ஒரு டம்ளர் தண்ணி குடிங்க" என்று சொன்னதுண்டு...

  ReplyDelete
 3. தண்ணிர் என்பது அவசியமான ஒன்றுதான். சிலர் வீட்டிற்கு செல்லும்போது எதுவும் வேண்டாம் என்று சொன்னாலும் ஒரு டம்ளர் தண்ணீராவது குடிங்க என்று சொல்வதை பார்க்கிறோம்.அது உறவையும் சேர்க்கிறது.

  ReplyDelete
 4. அவசியமான ஒன்று தான் மிகவும் சரியே.

  ReplyDelete
 5. வணக்கம் செய்தாலி சார்,நலம்தானே?தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாய் நன்றி/

  ReplyDelete
 6. வணக்கம் சசிகலா மேடம்,நன்றி தக்னளது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. வணக்கம் விச்சு சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 8. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. எளிய டீக்கடை நிகழ்வை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 10. ஒருவர் வீட்டுக்குச் சென்றால் முதலில் தண்ணீர்தான் தருவார்கள் வட இந்தியாவில்

  நல்லபகிர்வு

  ReplyDelete
 11. கிராமங்களில் இன்றும் ஒரு சொம்பு தண்ணீர் குடித்து விட்டு போங்கள் என்று கூறுவது உண்டு.  ReplyDelete
 12. நோய் வ‌ராம‌ல் பாதுகாக்க‌ இப்ப‌டி எளிய‌ வ‌ழிக‌ள் தெரியும்போது க‌டைபிடிப்ப‌து ந‌ம் க‌ட‌மை.

  ReplyDelete
 13. வணக்கம் tn முரளிதரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 14. வணக்கம் குட்டன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 15. வணக்கம் ரேசன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 16. வணக்கம் நிலா மகள் மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 17. thanniku pathilaga tea sapirukira mathiri. irruku enna seirathu

  ReplyDelete
 18. வணக்கம் செழியன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete