சாவுக்கொட்டு,,,,,,
ஞாபகங்களே பலருக்கு வரமாயும், சாபமாயும் ஆகி விடுகிறதைப் போலத்தான் எனக்கும்.
அன்று சனிக்கிழமை. இரவு ஏழு மணிக்கு பஜாரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். பலசரக்கும் பையுமாய் எனது இருசக்கர வாகனத்தில்/
பஜார்பலசரக்குக்கடைஇருசக்கரவாகனப்பயணம்,இடையில்நிறுத்தி ஒரு ஸ்டார்ங்க் டீ, பின் திரும்பவுமாய் இரு சக்கரவாகன பவனியில் பால மூர்த்தி ரோடு ,ரயில்வே கேட்,EB ஆபீஸ், அரசி ஹோட்டல் என கடந்து அந்த சந்தில் நுழைகிறேன்.
சந்தென்ன சந்து. தெருதான் அது.பட்டேல் ரோட்டுக்கு அடுத்ததாய் அமைந்திருந்த T.T.R தெரு அது.வசதியுள்ளவர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய பங்களா+பெரிய ஏரியா அது.
நான் அந்த தெருவில் வண்டியடி எடுத்து வைத்த நேரம் தமிழக அரசின் பவர்கட் நேரமாய்/
இன்னும் மின்சாரம் வர அரைமணி நேரம் ஆகலாம். சாலையும், சாலைமீது எனது இருசக்கர வாகனம் சிந்தி உமிழ்ந்த வெளிச்சமும் வீட்டினுள் எரிந்த எமெர்ஜன்சி விளக்குகளின் ஒளியும் லேசாக அங்கங்கே திட்டுத் திட்டாய் சிந்தியிருந்ததையும் தவிர்த்து வேறெது -துவும் இல்லை.
எனது வாகனம் உமிழ்ந்த ஒளியும் தெருவில் சிந்தி படர்ந்தவயும் கைகோர்த்துக்கொண்டதாய்.அது என்னவென்று தெரியவில்லை. ஏதென புரியவில்லை இரண்டும் சந்தித்தபோது அப்படி ஒரு கை கோர்ப்பு/
அவைகளின் கைகோர்ப்பில் சிமெண்டால் வார்க்கப்பட்டிருந்த தெருவின் மேடு பள்ளமும் பாதாள சாக்கடைக்காய் தோண்டி மூடப்பட்ட இடங்களின் தடங்களும் அவற்றின் மேல் மூடிகளும் தெளிவாய் தெரிந்தன பளிச்சிட்டு/
கிட்டத்தட்டஇருபதுஇருபத்தியோருவருடங்கள்இருக்கலாம். இன்றி இருந்து பின்னோக்கி/
ஒரு பின் மதிய நேரத்தில் சைக்கிளை மிதித்தவனாய் இதே சாலையில் வந்து கொண்டிருந்தேன்.அப்போது இந்த சிமெண்ட் பூச்சு, பாதாளசாக்கடை மூடி,மேடு பள்ளம் எதுவும் கிடையாது.ஒரே சமதள தார் ரோடுதான்.அதில் ஆங்காங்கே பள்ளங்கள் இருக்கும்.அது சாலையின் இயல்பு.மனிதர்களுக்கு தலைவலி,காய்ச்சல் போல அதற்கு பள்ளம்,மேடுகள் போலும்.
நான்போய்க்கொண்டிருக்கிறேன்பள்ளம்மேடுகளைவிலக்கி. எனக்கு முன்னால் ஒரு பத்தடி அல்லது அதற்கு குறைவான தூரத்தில் இடைவெளி விட்டு ஒரு சைக்கிள் போய்க்கொண்டிருந்தது.
ஒரு திடகாத்திரமான மனிதர்.உடலில் சட்டையில்லாமல் வேர்வை வழியவழியசைக்கிளைகஷ்டப்பட்டுமிதித்துச்சென்றுகொண்டிருந்தார்.
சைக்கிளும் இரண்டு மிதிக்கு ஒரு மிதிக்கான ஓட்டத்தைக் கொடுத்தவாறும், கிரீச்சிட்டவாறுமாய் சென்று கொண்டிருந்தது.
சைக்கிளை அவர் ஓட்டுகிறாரா இல்லை சைக்கிள்தான் அவரை முன் நகர்த்திச்சென்றதா என பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு இயைந்ததாய் இருந்தது அது.
சைக்கிளின் பின் கேரியரில் நீளவாக்கில் ஏதோ துணி வைத்து சுத்தி கட்டப்பட்டிருந்தது.சரி ஏதாவது விறகுக்கட்டாய் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனுமாகக்கூட இருக்கலாம் என நினைத்தவனாய் அந்த சைக்கிளை பின் தொடர்கிறேன்.
விறகுக்கட்டோ அல்லது வேறு ஏதானுமாகவோ இருக்கிற ஒன்றை ஏன் துணி வைத்து சுத்திக்கட்டி மூட வேண்டும்?அதுவும் வெள்ளை வேஷ்டியுடன்/
எனக்கு ஆர்வம் மேலிடவும்,உந்தித்தள்ளவும் அந்த சைக்கிளை நெருங்கி விட வேகமெடுத்து மிதிக்கிறேன்.எனக்கு முன்னால் செல்வதும் வேகமெடுத்துச் செல்வதாய்/
நான் வேகமெடுக்க அவர் இன்னும் முன்னகர்ந்து கொண்டு செல்ல எங்களிருவருக்கும்இடையே இருந்த பத்தடி இடைவெளி நூறடியாய் உருமாறித்தெரிந்தது.
நான் அவரை நெருங்க,நெருங்க அவர் என்னை விட்டு முன்னகர்ந்து விலகி செல்லச்செல்ல,,,,,,,,லேசாக வீசிய பலமற்ற காற்று எங்களிருவருர் ஊடாலுமாய் புகுந்து முன்னால் சென்ற சைக்கிள் கேரியரில் மூடியிருந்த துணியின் பின் முனையை விலக்கிவிட்டுச்செல்கிறது.
விலகிய துணியின் வழியாக கறுத்து சூம்பித்தெரிந்த கால் விரல்களும்,விரல் தாங்கிய பாதமும் வெளித்தெரிந்தது.சடக்கென சைக்கிளை நிறுத்தியவனாய் இறங்கி விடுகிறேன்.
அப்படியானால்இது?,,,,,,,,,,,பின் மதிமானாலும் வெயில் சுள்ளிட்டுக் கொண்டிருந்தது.
தெருவின் வீடுகள் எல்லாமும் பூட்டியிருந்தனவீடுகளின்முன் வாரா -ண் டாக்கள் சிலவற்றில் முளைத்து தொங்கியகாகிதப்பூமரங்களும், முல்லை கொடிகளும் கவனம் ஈர்த்ததாய்/
என்னையும் எனக்கு முன் சென்ற சைக்கிளையும் தவிர்த்து மனித நடமாட்டம் ஏதும் இல்லை. ஒன்றிரண்டு நாய்கள் அழுக்காய் ஓடியதை தவிர்த்து/
சைக்கிளை விட்டு இறங்கியவன் திரும்பவும் என்ன அது என தெரிந்து கொள்ள சைக்கிளில் ஏறுகிறேன்.
சைக்கிள்,நான்,வீதி எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த சைக்கிள் என எங்களுக்குள் ஒரு நெசவு கொண்டிருந்ததைப்போல ஒரே நேர்கோட்டுப் பார்வையில் நெருங்கிச்சென்று கொண்டிருக்கி ---றேன் முன் போன சைக்கிளை நோக்கி/
நான் செல்லச் செல்ல முன் சென்ற சைக்கிளின் பின்னால் இருந்தது என்ன என தெளிவாக புலனாகிறது.ஓலைப்பாயில் சுற்றிக் கட்டப் பட்டு அதன் மேல் வெள்ளைத் துணியால் இறுகப் போர்த்தப் பட்டி -ருந்தது இறந்து போன மனித உடலென்பது.
இப்போது வெள்ளைத்துணி விலகி கணுக்கால்வரை தெளிவாகத் தெரிந்தது.
அடப்பாவிகளா,ஒருமனிதனின்இறுதிநகர்வுஇப்படியாஇருக்கவேண்-டும்?ஒருதாய்க்குமகனாக,மனைவிக்குகணவனாக,தன்பிள்ளைகளுக்கு தகப்பனாகஇப்பூவுலகில்அவர்கால்பதித்து,வாழ்ந்துசாதித்ததெல்லாம் இப்போது ஒரு உயிரற்றஉடலாய் ஓலைப்பாய்க்குள்ளும், இறுகச் சுற்றப்பட்ட வெள்ளைத்துணிக்குள்ளுமாக/
என்ன செய்ய அல்லலுற்ற மனிதவாழ்கை இப்படித்தான் போலும் என நினைத்தவாறு அரசு ஆஸ்பத்திரியை ஒட்டிய அந்த தெருவில் சென்று கொண்டிருந்தேன்,சைக்கிளை இறங்கி உருட்டியவாறும், எனக்கு முன்னால் சென்ற சைக்கிளை பின் தொடர்ந்தவாறும்/
ஞாபகங்களே பலருக்கு வரமாயும்,சாபமாயும் ஆகி விடுகிறதைப் போலவே எனக்கும்/
10 comments:
அருமையான பதிவு,
வாழும் போது அவன் எப்படிபட்டவானாக வாழ்ந்தான் என தெரியாது, இனி நாம் எப்படி வாழ வேண்டும் என உணர்த்தியது
மனதில் நின்ற எழுத்துக்கள் .. வாழ்த்துக்கள் சார்
இப்படியுமா என்று ஆச்சர்யமாக இருக்கிறது.
வணக்கம் அரசன் சே சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் டீஎன் முரளிதரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்கருத்துரைக்குமாக/
வணக்கம் வேல்முருகன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
இப்படியா செய்வார்கள்... வருத்தமாக இருக்கிறது...
என்னமோ மனதை நெருடின கதை !
வணக்கம் ஹேமா மேடம்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment