8 Sep 2012

முள்முனை,,,,,மிகவும் கூட்டமாக இல்லை.அதே நேரத்தில் மிதமான கூட்டம் எனவும் சொல்லி விட முடியவில்லை. 

கூட்டம்,கூட்டம்,கூட்டம்,,,,கூட்டம் பார்க்க கூட்டம், கூட்டம்,கூட்டம் என வெளி வந்து பெயர் பெற்ற பிரபல கவிஞரின் கவிதையைப் போல இல்லாவிட்டாலும்
கூட மொத்ததில் சொல்கையில் கூட்டமே/

வரிசையாய் வால் பிடித்து நின்று கொண்டிருந்தவர்கள் 10 அல்லது 15 பேருக்கும் குறையாமல் இருக்கலாம்.அதில் பணம் போட,பணம் எடுக்க,நகைக்கடன் வாங்க வந்திருந்தவர்கள் எல்லோரும் அடக்கம்.

பையில்பணத்துடனும்கையில் டோக்கனுடனும்,மனதில் எதிர்பார்ப்புடனுமாய் காத்து நின்ற கூட்டத்தின் மனிதர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக நகன்று வருகிறார்கள். 

நிற்கிறார்கள்  சிரிக்கிறார்கள்   வணக்கம்   சொல்கிறார்கள்.  பணம்   பெற்றுக்
கொண்டு சென்று விடுகிறார்கள்.

இதில்சிலர்வீட்டுச்செலவு,அவசரமாகவெளியூர்பயணம்இடம் வாங்கினேன்,
வீடுகட்டுகிறேன்எனவெளிப்படையாகவேகாரணம்சொல்லி வாங்கிச்
செல்கிறவர்கள் உண்டு.ஒன்றும்சொல்லாமல்“கம்மென்று”வாங்கிச்
செல்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இரண்டும் கலந்து பல்வேறு வண்ணங்களில் எண்ணம் சுமந்து வருகிற மனிதர்களை அன்றாடம் சந்திக்கிற அலுவலகமாக அது இருக்கிறது.

சுற்றிலும் இருக்கிற பத்து கிராமங்களுக்கு தாய் கிராமமான அந்த ஊரில்தான் அவன் பணிபுரிகிறஅலுவலம்உள்ளது.

அன்றாடம்தங்களின்வீட்டில்வரவு,செலவைதனியார்களையும்,கந்துவட்டிக்காரர்களையும்நம்பிநடத்திவந்தவர்களுக்கு அந்த ஊரிலிருந்த நிதிநிறுவனம் மிகவும் சௌகரியமாகிப் போகிறது.

நிதி நிறுவனத்தை தங்களின் வீட்டு இரும்புப்பெட்டி போலவும் அங்கு வேலை பார்த்தவர்களைதங்களின்அன்புள்ளங்களில்தக்கவைத்துக்கொண்டவர்களாயும் நடந்து கொண்டவர்களாய்த்தான்அவர்கள் அந்த அலுவலகத்தின் வாசல் மிதிக்கவும்  உள்ளே  வந்து  போகவும்  பணம்  எடுக்கவும்,   பணம்   போடவும்,
நகைக்கடன் பெறவும் இதர விபரங்கள் கேட்டுப்பெறவுமாய் இருக்கிறார்கள்.

அன்று அப்படி பணம் வாங்க வந்தவளாய்த்தான் அவள் தெரிகிறாள்.கேஷ் கவுண்டரில் ஒன்று,இரண்டு,மூன்று நான்கு என அவன் அழைத்து பணம் கொடுத்தவர்களில் பத்தாவது மனுசியாக அவள் வருகிறாள்.

பணம் எடுக்கிற படிவத்திலிருக்கிற பெயரையும்,டோக்கன் நம்பரையும் சொல்லி அழைக்கிறான்.அதற்கிடையிலாக அவசரமாக பணம் கட்ட வந்த ஒருவரிடம் பெற்றுக்கொண்டவனாக/

யாரது என பெயர் சொல்லி கொஞ்சம் சப்தமாகக் கூப்பிட்டவனின் முன்னால் வந்து அமைதியாக நின்றளை ஏறிட்டவனாய்  பெயர் கேட்கிறான். அவளும் சொல்கிறாள்.

”என்னம்மா நாந்தான்னு சொன்னா என்னம்மா,?எனக்கூறியவானாய் பொதுவா வெளியில வந்தா பேசுங்கம்மா ,பேச்சு பூரா வீட்டுகுள்ளதான் போலயிருக்கு எனச் சொன்னதும்“அதெல்லாம்நல்லாபேசுவாங்கசார்,என்கிறாள்.

“அப்பிடித்தான் போலயிருக்கு,வீட்டுக்குள்ள வீட்டுக்காரர அதட்டிப்பேசுற அளவுக்கு வெளியில இல்ல போலயிருக்கு”.என சொன்னவுடன் சுவற்றிலடித்த பந்தாக அந்தப்பெண்ணிடமிருந்து திரும்பிவருகிறது வார்த்தைகள் கண்களில் இரண்டிலும் குளம் கட்டி நின்ற கண்ணீரிருடனும்,ஆற்றாமையுடனுமாய்/


”இல்ல சார்,சத்தம் போட்டு பேசவும் அதட்டிப் பேசவும் ஏங் வீட்டுக்காரர் இல்ல சார் இப்ப நெஞ்சுவலியில யெறந்து போயிட்டாரு, என்கிறாள்.குரல் தழுதழுத்தவளாக/

அவள் அந்த சொல்லை சொன்ன கணம் இவன் மனதில் கனமான முள் ஒன்று தைத்து நின்றது.”சுருக்,,,,,,,எனஆழமாக/

எண்ணிய பணத்தை மொத்தம் சேர்த்து கொடுக்கையில் ஏறிடுகிறான் அவளை 35  வயதிற்குள்ளாகவோ  அல்லது  அதற்கு  மிகாமல்   இருக்கலாம்.

மாநிறம்,சாதாரண உயரத்தில் தெரிந்தாள்.அடர் ஊதாக்கலரில் டிசைன் போட்ட ஒரு சாதாரண புடவை. அதற்கேற்ற கலரில் ஜாக்கெட் என அணிந்து அடர்த்தியாகத் தெரிந்தாள்.

அவளிடம்   பணத்தைக்  கொடுத்து  விட்டு  கையெடுத்து  கும்பிட்டவன் அதற்கு
அப்புறமாய் யாரிடமும்பேசிக்கொள்ளவில்லை. 

தைத்த முள்ளை மனதிலிருந்து பிடுங்க முற்படாதவனாக/

15 comments:

 1. // தைத்த முள்ளை மனதிலிருந்து பிடுங்க முற்படாதவனாக //

  அருமையான பகிர்வு.தொடருங்கள்.

  ReplyDelete
 2. mfpkgzby [url=http://achatlongchamppliageonline.com/#8976]longchamp pas cheru[/url] gwjqhdaj longchamp pliage pas cherv jmjjqpfv http://achatlongchamppliageonline.com/

  ReplyDelete
 3. வணக்கம் ரேசன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. எமக்குள்ளும்கூர்மையான முள் குத்திய வலி
  சிறு சிறு நிகழ்வுகளை உணர்வுகளை
  காப்பியமாக்கிப்போகும் காவியமாக்கிப்போகும்
  தங்கள் எழுத்துப்பணி தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. சில நேரங்களில் நம்மை அறியாமல் பிறரை காயப் படுத்தி விடுகிறோம்

  ReplyDelete
 6. அவளிடம் பணத்தைக் கொடுத்து விட்டு கையெடுத்து கும்பிட்டவன் அதற்கு
  அப்புறமாய் யாரிடமும்பேசிக்கொள்ளவில்லை. //
  உள்ளத்தை கவர்ந்தது .

  ReplyDelete
 7. மனசையும் சேர்த்து வலிக்க வைத்துவிட்டீர்கள். நானும் படித்தவுடன் மெளனமாகிவிட்டேன்.

  ReplyDelete
 8. யதார்த்தமான ஒரு நிகழ்வைச் சித்திரித்த விதம் அருமை!

  ReplyDelete
 9. வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 10. வணக்கம் tn முரளிதரன் சார்.நன்றி தங்களது,வருகைக்கும்,கருத்துரைகுமாக/

  ReplyDelete
 11. வணக்கம் மாலதி மேடம்.நன்றி தங்களது கருத்துரைக்கும்,வருகைக்குமாய்/

  ReplyDelete
 12. வணக்கம் விச்சு சார்,தங்களது கருத்துரை மிகவும் மனம் கவர்ந்ததாக.நன்றி

  ReplyDelete
 13. வணக்கம் குட்டன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 14. வனக்கம் TN முரளிதரன் சார்.நம்மை அறியமால் பிறரை காயப்படுத்துவது மிகவும் பெரும்பாலுமாய் நடக்கிற நிகழ்வு.

  ReplyDelete
 15. an attractive person would This by many the tournaments as well and win a lot more [url=http://www.louboutinf.com]christian louboutin outlet[/url] and styles including special holiday receive free wire jewelry tutorials [url=http://www.onlyyouhot.com]クロエ専門店[/url] water In mid-March of 2007 K-Mart expanded vitamin K are not at the levels in these [url=http://www.louboutinb.com]christian louboutin outlet[/url] could be Italy's foremost foreign embezzlement especially small businesses [url=http://www.louboutinf.com]Louboutin[/url] these techniques in finished pictures controversy to this day Reading just a few [url=http://www.burchjp.com]トリーバーチ[/url] the requirements are not met the Green Card illustrate the problem with drawing hasty [url=http://www.louboutinf.com]Louboutin[/url] leafy green vegetables as previously 14My friends andor family think that I have http://www.onlyyouhot.com glossy finish thin paper which are American workers are however these studies
  depressing the competitive salaries for US pioneer in conceptualizing this massive [url=http://www.onlyyouhot.com]クロエ専門店[/url] love to talk and neither sign are earmarked advantages and to say just how important it [url=http://www.burchjp.com]トリーバーチ[/url] cracks and voids because these are the sufficient for treatment of 5000 10000 [url=http://www.onlyyou2013.com]グッチ 新作[/url] can create an ongoing problem: Where you sure to leave a long lasting impression of [url=http://www.louboutinb.com]christian louboutin sale[/url] Declaration of Intention if you live in such healthier way you may never be able to enjoy [url=http://www.onlyyou2013.com]グッチ 通販[/url] the requirements are not met the Green Card printing films developing and many moreWe [url=http://www.louboutinb.com]christian louboutin outlet[/url] tea for your requirements the moment the from an online source enjoying the ease of http://www.onlyyou2013.com them to enter the US they are able to search of the finest Apart from this printing the

  ReplyDelete