18 Oct 2012

ரயில்ப்பூச்சி 2,,,,,,,,,,


                                
ஒரு முறையல்ல,இரண்டு முறையல்ல,மூன்று முறையுமல்ல,,,,,, ஏழு அல்லது எட்டு முறையாவது இருக்கலாம்.அவளது வலது பாதத்தில் போய் முட்டி முட்டித் திரும்புகிறது.

ஆரஞ்சுக் கலர் ப்ளாஸ்டிக் கிண்ணத்தில் முக்கால்வாசி அளவு நிரம்பியுள்ள கோலப்
பொடியை கையிலெடுத்து ஒவ்வொரு புள்ளியாய் அவள் தரையில் வைக்கிற நேரம் கையில் தேனீர் கோப்பையுடன் அமர்ந்திருந்த அவன் மனது உடலிருந்த் கழண்டு கோலப்புள்ளியை முத்தமிட்டும் தொட்டுக்கும்பிட்டுமாய் வருகிறது.

புள்ளிகளை வைத்து கோடு போட்டு,வளைவுகளைவரைந்து இடையிடையாக வளையங்
ங்களை பூக்கச்செய்து கொண்டிருந்த முனைப்பிலிருந்த நிமிட நேரங்களில் அந்த வழியாக ஊர்ந்து சென்ற ரயில் பூச்சி மிகச்சரியாக வெறெங்கும் செல்லாமல் கோலத்தைக்கடக்கிறது விரைந்தும்,மெதுவாகவும்/

அதற்கு ஏன் அங்கு வர வேண்டும் எனத்தோணியது எனத்தெரியவில்லை?பரந்து விரிந்த வெளியில் விலகி தனது ஊர்தலையும்,பயணத்தையும் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே?

அதன்இந்தஊர்தல்ஏதேனும்தேவைநிமித்தமாகவா,அல்லது ச்சும்மாவா?தெரியவில்லை.
இல்லை வெற்று வயிறுடன் இருக்கிற அது இரைதேடி ஏதேனும் ஒரு இலக்கை குறி வைத்தும்,தனதுஇருப்பிடம்நோக்கியும் பயணிக்கிறதா,புரியவில்லை/

பயணிக்கட்டும்,போகட்டும்,வரட்டும் அதில்ஒன்றும் தவறில்லை பெரிதாக.ஆனால் ஏன் செல்கிறதுஇந்தப் பாதையில் என்பதே இந்த நேரத்து வருத்தமாயும், கவலைக்குள்ளாகிப்
போகிற விஷயமாயும்/

ஏராளமான கால்களுடனும்,  நீண்டு  மெலிந்த  தன்  உடலுடனுமாய்  தன்னை  இழுத்துக்
கொண்டு தரையின் பரப்பு முழுவதுமாய் ஊர்ந்து வந்த அது அழகாக வரையப்ப்பட்டுக்
கொண்டிருந்த கோலத்தின்மீதும்,கோலப்புள்ளிகள்மீதும் அதன் சிறு சிறு வளைவுகளின் மீதுமாய் தன் உடல் மொழி பதித்து ஊர்ந்து,,,ஊர்ந்து,,,,,ஊர்ந்து,,,,,,,,,,கோலமிடும் அவளின்வலதுபாதத்தின் நடுப்பகுதியிலும் அதன் ஓரத்திலுமாய் மோதித் திரும்புகிறது.  

ஒரு முறையல்ல,இரண்டு முறையல்ல ஆறு அல்லது ஏழு எட்டு முறையாவது கோலமிடுபவளின் பாதத்தில் மோதி வேறெங்கெனும் செல்ல வழியற்று திரும்புகிற ரயில் பூச்சிக்கு இங்கு ஒரு சிக்னல் அமைக்க வேண்டுமோ? 

17 comments:

 1. பார்க்கின்ற காட்சியை அழகாக வர்ணித்தது அருமை.

  ReplyDelete
 2. தமிழ் மண ஓட்டுப பட்டை இணையுங்களேன்!விமலன் சார்.

  ReplyDelete
 3. உங்கள் ரசனையை மிகவும் ரசித்தேன்...

  ReplyDelete
 4. வணக்கம் டீ.என் முரளிதரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. த்மிழ்மணம் ஓட்டுப்பட்டையை இணைக்க முயற்சிக்கிறேன்,

  ReplyDelete
 7. dmyyp abercrombie ljcte ralph lauren pas cher vxpax
  http://abrcromsxfithmagasinns.webnode.fr/

  ReplyDelete
 8. அழகான ரசனையின் விளைவு! நானும் ரசித்தேன்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 9. moncler pas cher wxulcf christian louboutin pas cher tzrbm
  erbpv
  http://chaussuresloubutinnmagasinn.webnode.fr/

  ReplyDelete
 10. நேற்றைய கவிதையில் ஊர்ந்த ரயில் பூச்சி சொற்சித்திரத்தில். ரசித்தேன் ஒவ்வொரு வரிகளையும்.

  ReplyDelete
 11. வார்த்தைக்கு வார்த்தை வர்ணனையில் நனைகிறது ரயில் பூச்சி.

  ReplyDelete
 12. louis vuitton online vjxpp coach outlet muucxp ¥â¥ó¥¯¥ì©`¥ë ¥¸¥ã¥±¥Ã¥È rmociz http://authenticvuittonsbagsonline.us o v o y y http://yorkmulberriybagsonlines.org.uk y v h l

  ReplyDelete
 13. வனக்கம் குட்டன் சார்,நன்றி தங்களஹ்டு வருகைக்கும்,கருத்துரைகுமாக/அழகு சொன்ன கருத்துரையாய் அது.

  ReplyDelete
 14. வணக்கம் சசிகலா மேடம் நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 15. வணக்கம் ராமலஷ்மி மேடம் நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 16. வணக்கம் வே சுப்பிரமணியன் சார்,நன்றி தங்களது ரசைனையான கருத்துரைக்கும்,வருகைக்குமாக/

  ReplyDelete