16 Oct 2012

மலர்க்கொத்து,,,,,



கைபேசியின் விளக்கொளி வெளிச்சம் பரவி நின்ற கணங்களிலும் அது ஏற்ற இறக்கம் கொள்கிற நேரத்திலுமாய் வாசல் கேட்டில் அள்ளித்தெளிக்கப்பட்டிருந்த  பூக்கள் ஒவ்வொன்றும் வெட்கி சிரித்ததாயும்,நாணி குனிந்து கொண்டதாயும்/

கறுப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த இரும்பு கேட் அது.ஏறி நின்ற துருவில் உதிர்ந்து போய் ஓட்டை விழுந்து விட்ட கேட்டின் அடிப்புறம் அதன் வயதை சொல்லிச்சென்றதாக/

உள்ளே இருந்த வெள்ளை நிறப்பூக்கள் யார் சொல்லி அந்த  நிறம் அணிந்து கொண்டது எனத் தெரியவில்லை.யார் சொல்லி அப்படி பூத்து கிளை பரப்பி விரிந்து நிற்கிறதெனவும் தெரியவில்லை.

“ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது,ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது.என்கிற பாடலின் வார்த்தைகளுக்கு இசைந்து யார் ஊறிய தண்ணீர் எத்தனைகுடம்தண்ணீரில் இவ்வளவு பூத்து நிற்கிறது எனத் தெரியவில்லை.பூக்கட்டும், நிற்கட்டும்,சிரிக்கட்டும்,பேசட்டும் அதுவே ஒரு அழகுதானே?

“அவுட்டருக்கு  பச்சை,  உள்ளே  வெள்ளை  இதுதானே  பெயிண்ட்  பூசிக் கொள்கிற
வீடுகளுக்கு இரும்பு கேட்டுக்கு அடிப்பதுதானே வழக்கம்”என அவரிடம் சொல்லும் போது”இல்லைதோழர்வீடெல்லாம்சிம்பிளாகநல்லகலர்கொடுத்து மிளிரச்செய்துள்ளோம்,
அது போல கேட்டுக்கு நல்லதாய் யோசிப்போம் தோழர்” என கறுப்பும்,கேட்டின் உட்புறமாய் ரோஸீம்,மஞ்சளும் கலந்து அது ஒரு நிறமாய் தேர்ந்தெடுத்து அடித்த பிறகு கைபிடித்து அழைத்து அந்த சின்னோண்டான வீடு முழுவதையும் சுட்டிக்காட்டினார் நெஞ்சு நிமிர்வுடனும்,பெருமிதத்துடனுமாய்/

தோழர் மிக்கேலை அழைத்து வந்து அடித்த பெயிண்ட் 20வருடங்கள் பழமையான வீட்டை கைதூக்கியும்,அழகூட்டியுமாய் காட்டிய போது மிக்கேலை கட்டிப்பிடித்து பாராட்டத் தோணியது.ஆனால் அப்போது அப்படி செய்யவில்லை.கட்டிப்பிடிக்காமல் பாராட்டி விட்டேன்.அவரின் உழைப்பையும்,நினைவுகளையும் சுமந்து நின்ற கேட்டின் முன் போய் அதில் தொங்கவிட்டிருந்த பூட்டை காணோம் என தேடிய போதுதான் இத்தனையும்/

நல்லவிஷயம்.மின்சாரம் போய் விட்ட இது மாதிரியான சூழலில் சாத்தியிருந்த கேட்டை பூட்டுவதற்காகவோஅல்லது திறந்து வெளில் போய் அமர்ந்து புழுக்கத்தை விரட்டலாம் என்கிற முனைப்பிலிருந்த பொழுதுதான் கையில் வேறு விளக்கேதும் இல்லாமல் கைபேசியின் விளக்கையே வெளிச்சமாய்க் காட்டி மேலும்,கீழுமாய் இறக்கிய பொழுது பரவிய வெளிச்சம் என்னை ஆட்க்கொள்ள உற்றுக்கவனித்த பொழுது அசைந்து சிரித்த கேட்டின் பூக்கள் என்னோடு கைகுலுக்கிச் சிரிக்கின்றன. ச்சோ ஸ்வீட்,,, என/

வெளியூரில் செய்து உதிர்ந்து போகாமல் உள்ளூர்வரைவந்த பூக்கள் இது.கல்லடியையும்,
கண்ணடியையும்தாண்டி கலர் காட்டி சிரிக்கிற பூக்கள்சொல்கின்றன என்னைப்பார்த்து/ “வீட்டின் புழுக்கத்திற்குள் மின்சாரமற்ற இரவு  வேளைகளில் சாப்பிட்டுவிட்டு காற்று வாங்க வெளியில் நடை வாசலுக்கு தினமும் வருகிற நீங்கள் தினமும் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.இன்றுதான் அபூர்வமாய்ப் பார்க்கிறீர்கள்,அதுவும் மின்சாரம் போய்விட்ட இந்த தருணத்தில்ஆகஇப்போதாவதுஎன்னைப்பார்க்கவேண்டும்எனதோணியதேஅதுவரைசந்தோஷம்”என்கிறஎண்ணத்தில்என்னைப்பார்த்து ஸ்னேகித்துச்சிரித்த இரும்பு கேட்டில் வளைந்து ,நெளிந்து கிளைவிட்டு பூத்திருந்த பூக்களைப் பார்த்துச்சிரித்தும்,கை குலுக்கி விட்டும்,அழுந்த முத்தமிட்டுவிட்டுமாய்,கை பேசியின் விளக்கை அணைத்து விட்டுத் திரும்புகிறேன் வீட்டிற்குள்/

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது,ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது ///

ரசனையான பகிர்வு...

Yaathoramani.blogspot.com said...

சொல்லிச் சென்றவிதமும்
முடித்தவிதமும் மிக மிக அருமை
மனம் கவர்ந்த சொற்சித்திரம்
தொடர வாழ்த்துக்கள்

சசிகலா said...

மின்சாரமற்ற பொழுதில் மலர்ந்த மகிழ்ச்சி.

vimalanperali said...

நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/கருத்ஹ்டு தெரிவிப்பதில் இருக்கிற முதன்மைக்காவும்,முனைப்புக்காகவும்/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்,சொல்லி செல்வதில் இருக்கிற அழகை ரசித்து கருத்திட்ட தங்களுக்கு நன்றி.

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/