2 Oct 2012

வைக்கப்புரி,,,,,,,


                                     
 நெகிழ்வின்பகிர்வைமுதலில்  சொல்வது  யாருக்கென  புடிபடவில்லை.கிருஷ்ணகுமாருக்கா?
முருகேசன் சாருக்கா?சுரேஸிற்கா,முருகனுக்கா?
 நெடித்து வளர்ந்துஆறடிக்கும்குறைவில்லாத மெலிவான உருவமாய் காணப்பப்படும் கிருஷ்ணகுமார்,47ல்தன்னைதாங்கியும்தன்எண்ணம்சுமந்துமாய்/சிவகாசிக்காரரான அவர்
 பதவி உயர்வின் காரணமாய் பணிமாற்றம் செய்யப்பட்டு திருமணமான பிரம்மச்சாரியாய் ராமநாதபுரத்தில் குருவிக்கூடு அறையில்/ அன்பின் மனிதர் நாகர்கோவில் முருகேசன் சாருடன்.முதிய உருவத்தில் இருக்கிற இளைஞர் அவர்.காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து 8 மணிக்குள்ளாக அலுவலகம் சென்று விடுகிற இளைஞர்.
  அவர்கள் இருவரும் தங்கியிருந்த சின்னோண்டளவிலான அறை மொத்தமே எட்டுக்கு எட்டு இருக்கலாம்,நான் அந்த அறைக்கு போய் சேர்ந்த இரவு 9 மணி பொழுதில் அதையெல்லாம் கவனிக்கும் மனோநிலையற்று நடுங்கிப் போன உடலுடனும் யோசனை மிகுந்த மனோநிலை கொண்டவனுமாக இருந்தேன்.
  சுரேஷ்தான் என்னை அங்கு கொண்டு வந்து இறக்கி விடுகிறார்.அந்த தெருவின் பெயர் ஏதோ சொன்னார்கள்.
  அலுவலக வேலையாக முத்துப்பேட்டை போய் விட்டு இரண்டு நாட்கள் கழித்து திரும்பி  ராமநாதபுரம்  திரும்பி  வந்து  கொண்டிருந்த  மாலை  நேரமது.
  பேருந்தும் ,லாரிகளும் இருசக்கர வாகனங்களும் மற்றும் கனரக இலகு ரக வாகனங்களும் வெகு அரிதாகவும்,ஆச்சரியமாகவும் சைக்கிள்களும்,சென்று கொண்டிருந்த நெடுஞ்சாலையில் அவர்(முருகன்)தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கவும்,நான் பின்னால் அமர்ந்து கொண்டிருக்கவுமான எங்களது பயணம்  அந்த  நெடுஞ்சாலையில்.
  ஆச்சரியம் சொன்னால் நம்புங்கள்,நெடுஞ்சாலையின் இருபுறமுமாய் விரிந்திருந்து தன் மேனிகாட்டியநிலப்பரப்பில்கட்டிடங்களும்,இன்னபிறவுமாய் இருத்தி வைக்கப்பட்டிருந்ததைப் போல ரோட்டின் இருமருங்கிலுமாய்  வரிசையாயும் வரிசை தப்பியும் முளைத்துத் தெரிந்தன.
  வேப்பமரம்,புளியமரம்,புங்கமரம்எனகைகோர்த்துஅவைகளை பார்த்தவாறும்,அவற்றி நிழலை சுகித்தவாறுமாய் வந்து கொண்டிருந்த பொழுது வயிற்றுக்குள் முளைவிட்ட வலி அவ்வளவு பெரிதாய் தொந்தரவு செய்யும் என நினைக்கவில்லை.
  எப்பொழுதும்வருகிறஅல்சர்வலிபோலத்தான்தோன்றியதெனக்குஅந்த கணத்தில்.
வண்டியில் உடல் குன்னி அமர்ந்திருப்பதால் வலி வந்திருக்கலாம்.என்கிற யோசனையிலும் ராமநாதபுரத்தில் வண்டி ஏறும் முன் அல்சருக்கான மாத்திரை போட்டுக்கொண்டால் சரியாகிப் போகும் என்கிற சமாதானதுடனுமாய் அமர்ந்திருந்த கணங்களில் முருகன்,நான்,வண்டியின் ஓட்டம், எங்களிருவரிலிருந்து பின் வாங்கிய சாலை என்கிற பிணைப்புடன் சென்று கொண்டிருந்த வேளையில் வயிற்றுக்குள் மெல்ல காலடி எடுத்து வைத்த வலி சற்றே கூடிக்கூடி தன் அகலக்கரம் விரித்து வயிறு ,வலது பக்கவாட்டு எலும்பு,மார்பு,முதுகு இடுப்பு என எல்லா இடங்களிலுமாய் தனது வலியையும்,வருகையும் பதிவு செய்கிறது.
  குன்னியும் வளைந்தும் அமர்ந்திருந்த நான்  நிமிர்தமர்ந்து பார்க்கிறேன்.லேசாக பின்னால். ம்ஹீம்,,,,,,,,தனது பிடிவாத்தை விடாத வலி. வலி மேலும் கூடிக்கொண்டிருந்ததே தவிர தனது இந்த செய்களைக் கண்டு மனமிறங்கி குறையவில்லை.
  நல்ல வலியாய் அது .அப்படியும் ஒரு வலி வருமா என வாழ்நாளில் தோன்றிய தினமது.ஏதாவது ஒரு பக்கம் என்றால் சரி,உடல் முழுவதும் என்றால்,,,,,,,,,,,,?அல்சர் வலியா அப்படியெல்லாம் வலிக்கப் போகிறது?யப்பாடி இப்படியொன்றை அனுபவிக்கவா இருநூற்றைம்பது கிலோ  மீட்டர் தாண்டி இங்கு வந்தேன்?அட போங்கப்பா,,,,,,,,/
   வலியின் உச்சம் மிகவும் அதிகமாய் தன் இலக்க்கை எட்டித் தொட்ட நேரம் நான் செய்த செயல்கள் எதுவும் பலனற்றுப் போக லேசாக கண்ணைக் கட்டுகிறது.
 முன்னாலிருந்தமனிதரைவண்டியைநிறுத்துமாறுபணித்து விட்டு பைக்குள்ளிருந்த தண்ணீர் பாட்டில் திறந்து முகம் கழுவி குடித்து விட்டுமாய் கண்ணைக்கட்டியது தாங்காமல் அப்படியே அமர்ந்து விடுகிறேன் தரையில்/
 அது எந்த இடம்,யார் வந்தது,யார் போனது,நல்ல இடமா,எதுவும் தெரியாமல் அப்படி அமர்ந்துவிட்டஎன்னைப்பார்த்துதிடுக்கிட்டுப்போகிறார் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த முருகன்.
அதுவரையும் தன்னைப்பற்றியும் தனது தொழில்,ஊர்,ஊர் மக்கள் என இன்னும் இன்னமுமாய் நிறைய பேசியவாறு வந்தவர் நான் இப்படி ஒரு நிலையில் அம்ர்ந்து விட்டதை எதிர்பார்க்கவில்லை.
  இது வரைக்கும் அவர் பேசிய பேச்சுக்கு நான் காது கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்பதை தெரிந்து கொண்டவரகவும் என் மீது விழுந்த மரத்திலைகளை தட்டிவிட்டவாறும் “என்ன செய்யிது சார்,என்ன செய்யிது சார்” என தோள் தொட்டு கேட்டவாறு அமர்ந்து விடுகிறார் என் அருகே/
  “வாங்கஅப்படியேமெல்லஎந்திரிச்சிஇங்கிட்டுக் கொஞ்சம்தள்ளி ஒக்காந்துக்கிரலாம்,
இந்த யெடம் ஒரே அசிங்கமாக் கெடக்கு,அதுவுமில்லாம பக்கத்துல வீச்சமெடுத்த ஓடத்தண்னி கட்டிக்கெடக்கு.வாங்க சார் போயிரலாம் அங்கிட்டு” என்றவரை கையமர்த்திவிட்டு சிறிது நேரம் அப்படியே அம்ர்ந்திருந்தவன் முதலில் நல்ல ஆஸ்பத்திரியாய் பார்த்துப் போக வேண்டும் என திரும்பவுமாய் ஏறி வண்டியில் அமர்கிறேன்,அமர்ந்த கையோடு காமராஜீக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி “கோபித்துகொள்ளாமல் சுரேஷிடம் மட்டும் சொல்லி விடுங்கள்,நான் ராமநாதபுரம் போய் பிக்கப்பண்ணிக்கிறேன்”என்றேன்.திரும்பி முருகனிடம் என்னால ஒங்களுக்கு ரொம்பசெரமம்”என்கிறவழக்கமானஅச்சடிகப்பட்டவார்த்தைகளை சொல்லிக்
கொண்டே/
  ராமநாதபுரம் வந்திறங்கியதும் காமராஜ் போன் பண்ணிச் சொல்லிய அண்ணன் சுரேஷ் கடவுளாக வந்து நின்றார்.
  அவர் அவரது உடை,அவரது முகம்,அவரது தோற்றம் எல்லாம் தாண்டி அவரது பதட்டமே என் முன்னே வலை விரித்து படர்ந்து தெரிகிறது.”என்ன செய்யுதுண்ணே” தந்து இருசக்கரவாகனத்தை ஸ்டாண்ட் போட்டு விட்டு வந்தவர் என் தோள் தொட்டு “வாங்க ஆஸ்பத்திரிக்குப் போவோம்”.என அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போனார் முருகனை ஊர் நோக்கி போகச்சொல்லி விட்டு/
  அவர்போனபின்பும்அவர்போனதிசையைநோக்கிகும்பிட்டகையை எடுக்காமலேயே இருந்த 
போது சுரேஷ்தான் என்னை தன் நிலைக்கு  கொண்டு  வந்தார்.  அதன்   பின்பு  அரசு 
மருத்துவமனை, பின்பு ஹோட்டல் சாப்பாடு நடுராத்திரியில் பசிக்கலாம் என வாங்கி வந்த நான்கு இட்லிகளுடன் நான் தஞ்சமடைந்த இடம்தான் கிருஷ்ணகுமாரும் முருகேசன் சாரும் தங்கியிருந்த தீப்பெட்டி சைஸ் அறை.
  தெரு திரும்பியதும் வலது புற ஓரமாய் இருபது அறைகளை தீப்பெட்டிச் சைஸில் கொண்டதாய் இருந்தது இது.நமது நிறுவனத்தின் பணியாளர்கள் பலருக்கும் இந்த அறைதான்அடைக்கலம்கொடுத்துள்ளது.பாருங்கள்இன்னும்தொங்கிக்கொண்டிருக்கிற1986ன் காலண்டரை என அதில் மங்கலான தேதிகளும்,கிழமைகளும்/
 அந்ததேதிகளையும்,கிழமைகளையும்பார்த்தவாறும்கிருஷ்ணகுமாரின் பேச்சையும், அன்பின்
 மனிதர் முருகேசன் சாரின் சொற்பிரயோகங்களையும் கேட்டவாறு  இரவு முடிந்து மறுநாள்  காலை அவர்களிடம் விடை பெற்று கிளம்புகிறேன்.
  அறிமுகமில்லாத ஊரில் சுகவீனமான நிலையில் தஞ்சமடைந்த என்னை  தாங்கிய அவர்களுக்கும்,என்னை வாஞ்சையுடன் சிகிச்சைக்கு கூடிச்சென்ற அண்ணன் சுரேஸிற்கும் தந்து சொந்தப்பணியை சற்றே ஓரம் கட்டி வைத்து விட்டு என்னை ராமநாதபுரம் வரைக்கும் தனது  இரு சக்கரவாகனத்தில்  அழைத்து வந்து  சுரேஷ்  கையில்  ஒப்படைக்கிறவரை  ஒரு
குழந்தைப்  போல  பார்த்துக்  கொண்ட  முருகனுக்குமாய்  நன்றி சொல்லிக் கொண்டும்,
கை கூப்பி விடைபெற்று கொண்டுமாய் கிளம்புகிறேன்,
 நெகிழ்வின் பகிர்வை முதலில் யாருக்கு சொல்வது என சரியாக பிடிபடாமலேயே/                      
      
  

5 comments:

 1. காட்சிகள் கண் முன்னே தெரியும் வகையில் எழுதுவதில் நீங்கள் ஒரு நிபுணர்... சரி அதை விடுங்க சார்...

  தற்போது நலம் தானே...?

  கிருஷ்ணகுமார், முருகேசன், சுரேஸ், முருகன் - அனைவருக்குமே நன்றி...

  ReplyDelete
 2. காட்சிகள் கண் முன்னே தானாய்
  அற்புதமாய் விரிகிறது
  சொல்லிச் செல்லும் விதமும்
  சொன்ன விஷயமும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி,தங்களது கருத்துரைக்குமாக,தற்போது மட்டுமல்ல எப்பொழுத்மே நலம்தான் தங்களைப்போல அன்பின் உள்லங்கள் உள்லவரை எனக்குகென்ன உடலுக்கும் மனதுக்குமாக/நன்றி வணக்கம்.

  ReplyDelete
 4. வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. muwnvqyx [url=http://ukpolosralphlaurensales.webeden.co.uk/#3701]ralph lauren uk outlet[/url] tmedxdnzlk polo ralph lauren uk oscqiaq vjeyztwm [url=http://abercromfitchsoutletstore.webeden.co.uk/#0345]abercrombie sale[/url] nmqwtmfzlj abercrombie sale pgodrsy
  http://ukabercromfitchonline.webeden.co.uk/#0027

  ReplyDelete