ஒரு ஜோடி காளை மாடுகள்,
இரண்டு பசுக்கள்
நான்கு வெள்ளாடுகள்
இதில் ஒன்று கெடாக்குட்டி/
எனக்கொண்டிருந்த மாட்டுத் தொழுவத்தை
தனது இரண்டு கைகளுக்குள்
வைத்திருந்தாள் அவள்.
அதிகாலை எழ
தொழுவத்தை சுத்தம் செய்ய
பசுவில் பால் கரக்க
ஆடுகளை மாற்றிக்கட்ட
ஊருக்குள் போய் கறந்த பாலை
விற்றுவிட்டு வர,,,,,,,,,
என இருக்கிற அன்றாடங்களின்
காலைப் பொழுது ஒரு ஜோடி காளை,
இரண்டு பசுக்கள்,நான்கு ஆடுகள்
அதில் ஒன்று கெடாக்குட்டி
என இருக்கிற தொழுவத்தில் தான்
விடிகிறது அவளுக்கு/
5 comments:
கிராமத்து ஏழைப் பெண்ணின் அன்றாட வாழ்க்கையை சில வரிகளில் பிரதிபலித்து விட்டீர்கள்.
ஹ்ம்ம்ம்.. உண்மை. பலரின் நிலைமை அதுதான்.
வணக்கம் டீ.என் முரளிதரன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் ராஜி அவர்களே.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
உண்மை நிலை...
Post a Comment