7 Oct 2012

பெயர்பலகை,,,,,,


                 
கொஞ்சம் முரடுபட்டுத்தான் தெரிகிறது.நரம்புகள் புடைத்துத்தெறிப்பது போலவும் உருவேறியிருக்கிற கை எக்குப்போலவுமாய் நீட்டிகொண்டிருக்க கோழியை உறிக்கிறாள்.

 பக்கத்தில் கோழி வெட்டுகிற வட்டக்கட்டை மீது கூர்மை பாய்ந்த கத்தி. கொஞ்சம் பிசகினாலும் கையை பதம் பார்த்து விடக் கூடும்.
 
 RS பிராய்லர்ஸ் என கடையின் பத்தடி செவ்வக அகலத்துடனுமாய் கூரை வேயப்பட்டு கூரையின் மேல் கடையின் பெயர் தாங்கிய பலகை நின்றதாய்.மஞ்சள் பெயிண்ட் அடிக்கப்பட்டுசிவப்புநிறம்பொரித்திருந்தஎழுத்துக்கள்.
 
 அதென்னதெனத்தெரியவில்லை,சிவப்புக்கு அப்படி ஒரு தனித்த் அடையாளம்.?அடர் நிறங்கள்பல கொண்டிருக்கிற அடையாளங்களில் சிவப்பு முதன்மை பெற்று தெரிவதாக அவனுக்கு. பெயர் தாங்கிய பலகை அங்கங்கே பள்ளமும்,மேடுமாகவும்,புள்ளி வைத்தும் நெளிந்துமாய்/பழைய தகரமாய் இருக்க வேண்டும் போல,காற்றுக்க்கு லேசாக தலை ஆட்டியது.

  அவர்கள்பட்ஜெட்டுக்குஇதுதான்முடிந்திருக்கிறதுபோலும்.”ஏதோ ஒரு அடையாளத்
திற்குதானே இது போதும்” என அவர்கள் நினைத்திருக்கலாம்.ஆனால் போர்டு பார்க்க ரொம்ப நன்றாக இருந்தது.

  கோழிகள்,கடைக்கான மூலப்பொருட்கள்,கூரை வேய ,,,,,,,,,இத்தியாதி,இத்தியாதி என கணக்குப்போட்டுப் பார்க்கையில் ஏதாவது ஒன்று பெயரளவிற்கு செய்து முடிக்கும் படி ஆகி விடுகிறதுதான்.அது புதிதாக திறக்கிற கோழிக்கறி கடையிலிருந்து திருமண வீடுகள்வரைஇப்படி ஆகிப்போகிற இனிய விபத்தாய் மாறிப்போகிறது.

  “,,,,,,,,,,,,,,பிராய்லர்ஸ்”என போர்டு வைக்கப்பட்ட கடையின் முன்பாகத் தான் நிற்கிறேன்.
சீக்கிரம் வாருங்கள்.எவ்வளவு நேரமாய் நிற்பது காத்துக்கொண்டு.நான் வந்து ஒரு மணிநேரம் ஆகப்போகிறது.போரடிகிறதே ஏன் சும்மா நிற்பானேன் என இரண்டு டீ குடித்து விட்டேன்.அப்படியே தெரு முக்கிலிருக்கிற பால்ப்பண்னை வரை போய் KSR யும் பார்த்து விட்டு வந்து விட்டேன்.,
 
  அன்பின்மனிதர்அவர் அவரைப்போன்ற மனிதர்களைப் பார்க்கிற போதும்,அவர்களிடம் பேசி விட்டு வருகிற போதுமாய் மனதில் ஒடுகிற சம்பவங்களின் தொகுப்பான கடந்த காலகசப்புகளையும்,இனிப்புகளையும் மறக்க இயலாதவனாக ஆகிப் போகிறோம்தான்”
என்கிறஇலக்கணத்திற்குஉட்பட்டவனாய் நான் வந்து கொண்டிருந்த வேளையில் உன்
நினைவு சுமந்த மனதை உள்தாங்கி  நிற்கிறேன்.வா நண்பா சீக்கிரம்” என எனது முதுகுக்குப் பின்னால் கேட்ட பூங்கொத்து பேச்சின் தூவலை தாங்கியவனாய் நின்ற என முன்னே விரிந்த கடையில் கோழி உரித்த பெண் “லெக் பீஸ் வேணுமா சார்,என இரண்டைப்போடுகிறாள்.

  ஒல்லியான உருவத்தில்,புது நிறமாய் அடர்கலரில் உடை அணிந்து கொண்டு நின்ற அவள் வியர்த்துத் தெரிந்தாள்.
   இடது ஓரம் உரித்து குவிக்கப்படிருந்த கோழிகள்.அதை வெட்டுவதற்காய் சற்றுதள்ளி  வைக்கப்பட்டிருந்தவட்டக்கட்டை.அதன்மீதுஇருந்தகத்திகள்இரண்டு.மேலே வேயப்பட்டிருந்தகூரை,அதில்முடியிடப்பட்டிருந்தகயிறுகள்.அதில்ஒட்டித்தொங்கிக்கொண்டிருந்தநூலாம்படைபெரிய,பெரியஈயப்பாத்திரங்கள்,அதில்ஒன்றிரண்டில்பாதியளவு நிரப்பட்டிருந்ததண்ணீர்என நிரம்பியிருந்த கடைக்குபின்னால்தான் அவர்களது வீடும் காட்சிப்பட்டுத் தெரிகிறது.

  வீட்டின் முன்னால் சும்மாக்கிடக்கிற வெளியை மடக்கி இப்படி அசைவம் செய்யும் கடையாய்ஆக்கிஇங்கு24மணிநேரமும்கோழிக்கறிகிடைகும்என போர்டுதொங்க
விட்டிருந்தார்கள்.

  அந்த விட்டிருந்தலை தாங்கி கையில் கண்ணாடிவலையலும்,கத்தியுமாய்நின்ற அவள் எந்நேரம் கடை வேலையை முடித்து விட்டு எந்நேரம் வீட்டு வேலைகளைப் பார்க்கச் செல்வாளோ?
                   

3 comments:

  1. jpvquevc qhwintkbid belstaff jackets nevvnxz http://bestaffjacketssalesonline.webeden.co.uk/#6314 rqquznuy swhejnrluj barbour coats lxwddzz http://babourjacketsxoutletstores.webeden.co.uk/#2358 qgqukkzv [url=http://salesguciibagsoutletstore.info/#2563]gucci uk outlet[/url] ftpkfhqmzj xtaxyexp [url=http://salesvuittonnbagsoutletstore.info/#5247]louis vuitton outlet[/url] uwqmkygcqp

    ReplyDelete
  2. முடிவில் அசத்திட்டீங்க!

    ReplyDelete
  3. வணக்கம் குட்டன் சார் நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைகுமாக/

    ReplyDelete