2 Nov 2012

வண்ணப்பூச்சு,,,,,,,


பொய்த்துப் போகுமோ மழை ?இப்படி இருந்தால் என்னாவது விவசாயம் மற்றது எல்லாம் என கவலை கொண்டு பேசிய குமாரசாமிகடை வைத்திருந்தார்.கண்மாய்க் கரையின்எதிர்புறமாக/

பீடி, சிகரெட், பான்பராக, மிட்டாய் மற்றும் சின்னப்பிள்ளைகள் சாப்பிடுகிற அயிட்டங்கள்
நிறைந்தகடையின்ஓரமாய்பூத்திருந்தபூச்செடியாய் வெள்ளைக்கலரில் பூத்து நின்ற ஜெராக்ஸ் மிசினுடன்/

ஒண்ணரை ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய்வரை டிமாண்டைப் பொறுத்து ஜெராக்ஸீக்கும்,
பீடிசிகரெட்டுக்குமாய்விலை வைப்பார்.கேட்டால் “பீடி சிகரெட்டுக்கு இப்படித்தான் சமயத்தில் டிமாண்ட் ஆகிப்போகிறது,அப்படியான சமயங்களில் என்னைப் போன்ற சில்லறைக் கடைக்
-காரர்கள்இப்படித்தான்விலைகூட்டிவைத்துவிற்க வேண்டியுள்ளது வேற வழியில்லை” என்பார்.

லாபம் வைக்கலைன்னாக்கூட போட்ட மொதல எடுக்கணுமில்ல என்பது அவரது பேச்சும் கணக்கும் இந்த விஷயத்தில்/

அது கடையா,வீடா என பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிற வீட்டின் ஓரமாய் நிற்கிறது ஒரு உயிர் சாட்சியாக கடை.

வீடு இப்போது கொஞ்சம் ஏற்றம் பெற்றுத் தெரிகிறது. இப்போது கடையும் வீட்டின் முன் வராண்டாவும் இருக்கிற இடத்தில் முன்பு மாட்டுத்தொழுவம் இருந்தது.

ஒரு ஜோடி காளை மாடு,இரண்டு பசு மாடுகள்,நான்கு ஆட்டுக்குட்டிகள்.நான்கில் ஒன்று கெடாக்குட்டி என நின்றிருந்தவைகளை பழனியம்மாள்தான் கவனித்து வந்தாள்.காளை
மாடுகளின் கழுத்தில் பூட்டப்படுகிற ஏர்க்கலப்பையையும், வண்டியையும் தவிர்த்து/

தொழுவம் முழுக்கவும் பழனியம்மாளின் கைகளிலேயே. அவ்வளவு பெரிய தொழுவத்தை
தனதுஇருகைகளிலும் உள்ளடக்கி வைத்திருந்தார்.”பின்ன என்ன செய்ய சார்?இதுல சலிப்பு வந்தா முடியுமா?காலையில நாலு மணிக்கு எழுந்திருச்சுமாடுகளுக்கு சாணி அள்ள கூட்டித் தெளிச்சி விட்டு பசு மாடு ரெண்டுலயும் பால் கறந்துட்டு ,,,,,,அதுவும் சும்மா சொல்லக் கூடாது சார்,ரெண்டுமே நாட்டு மாடுகதான்,அதுல இந்த கருப்பு இருக்கு பாருங்க,ஒரு நேரத்துக்கு நாலு,நாலரை லிட்டர் வரைக்கும் குடுக்கும் சார்.இந்த செவல மாடு ஏதோ நேரத்துக்கு 2 லிட்டர் பாலக்குடுக்க அது வாட்டுக்கு அச போட,படுத்தெந்திரிச்சோம்ன்னு இருக்கும் சார்.பாக்கத்தான் அது அப்புராணி சார்.மத்தபடி பக்கத்துல யாரையும் அண்ட விடாது சார்.வால சொழட்டி அடிச்சிக்கிட்டே இருக்கும்,எங்க வீட்டுக்காரரு கூட பக்கத்துல போக கொஞ்சம் யோசிப்பாரு.அது பக்கத்துல போகனும்ன்னா என்னய்யத்தான் கூட்டிக்கிட்டு போவாரு.நான் பக்கத்துல போனா பொட்டிப்பாம்பா அடங்கீரும் சார்,

“அது அப்பிடீன்னா இந்த காளைகல்ல ரெண்டுல ஒண்ணு ரொம்ப கிறுத்திரியம் புடிச்சது சார்.அந்தா யெடது பக்கம் நிக்குது பாருங்க கழுத்துல கருப்பு காண்பிச்சி அது ரொம்ப துள்ளும் சார்,பக்கத்துல யாரையும் அண்டவிடாது.நான் கூட பக்கத்துல போக கொஞ்சம் யோசிப்பேன்கொணம்கெட்டகழுதஅதுபளிச்சின்னுமுட்டித்தள்ளீரும்.ஏங்க வீட்டுக்காரரையே ஒரு தடவ முட்டி தூக்கிருச்சி.காட்டுல வெதப்பு ஒழவு நடத்துக்கிட்டு இருந்த நாள் அதுகாட்டுலஒருஓரமா கட்டியிருந்த யெடத்துலயிருந்து இத அவுத்துக்கிட்டு வந்துக்கிருந்து
-ருக்காரு,

“இவரு தோல் மேல மாட்டு கழுத்துல இருக்குற கயிறு, முன்னாடி இவரும் பின்னாடி மாட்டு நடையுமாஇருந்தநேரத்துலயாருமேஎதிர்பாக்காதவிதமாஇவரமுட்டிகீழ தள்ளிருக்கு.
சுதாரிச்சி மல்லாக்க விழுந்து கால் ரெண்டவும் தூக்கி பின்னிக்கிட்டி இருந்துருக்காரு ,இல்லைன்னா அன்னைக்கு வேற மாதிரி ஆகியிருக்கும்.அப்பறம் சுத்தியிருந்தவுங்க ஓடியாந்து அத புடிச்சி இழுத்டுக்கிட்டுப் போயிருக்காங்க,

“அது அன்னைக்கி வாங்குன அடி கொஞ்ச நஞ்சமில்ல.அது ஒடம்புல வாரு,வாரா விழுந்த தடுப்புதான் இன்னைக்கி வரைக்கும் மாறல.எங்க வீட்டுக்காரரு இன்னும் அதுக்கு மருந்து வாங்கி போட்டுக்கிட்டு இருக்காரு.ஒரு பக்கம் பாக்க பாவமாத்தான் இருக்கு,என்ன செய்ய பின்ன?,

“போன வாரம் கூடஒழவுக்கு போயிக்கிட்டு இருக்கும் போது ரோட்டோரத்துல போன ஒருபையன்முட்டப்போயிருச்சி.அவன்பாவம்சைக்கிளோடஓடையில்விழுந்தெந்த்ரிச்சிப்போனான்.விழுந்தவனுக்குபாவம்ஒடம்பெல்லாம்ஒரக்காயம்.எங்கவீட்டுக்காரருதான் அவன் தூக்கி கையக்கால ஒதறச் சொல்லி நீவி விட்டு அனுப்புனாரு.இந்த மாதிரி நேரத்துல ரெண்டு போட்டாத்தான் அடங்குது.இதுக பண்றத பாக்கையில இந்த ஆடுக எவ்வளவோ தேவல/,

“இதுகளுக்கு பண்டுதம் பாத்து,பால் கறந்து வித்து அதுக்கப்புறம் அவசர,அவசரமா கஞ்சிய குடிச்சிட்டுகாட்டு வேலைக்குப்போக சரியா இருக்கும் சார் பொழுது.இதுல மாடு,ஆடுகளுக்கு தீவனம் போக எங்க குடும்பப்பாடு இது தர்ற பால் காசுலயும்,கூலி வருமானத்துலயும் ஓடுது சார்சமயத்துலரொம்பசங்கடமாயிரும்சார்நல்லாதிங்கிற புள்ளைகஇதுகளுக்குக்கூடஎதுவும்
செஞ்சிகுடுக்கமுடியாம போயிரும்எனச் சொன்ன பழனிம்மாள் தம்பதியினரின் வாழ்க்கை பத்துவருடங்களுக்குமுன்பு போல இல்லை என ஊர் வெளிப்படையாகவே பேசிக்கொள்கிறது.

அதை அவர்களும் மறுத்ததில்லை.ஏன் மறுக்க வேண்டும்,எதற்காக மறுக்க வேண்டும் என்பது அவர்களது வாதமாக/

“நாங்கள் ஏழ்மை நிலையில் இருக்கும் போது வருத்தப்பட்டவர்கள் இப்போது நாங்கள் வசதியாக இருக்கும் போது சந்தோஷம் கொள்கிறார்கள்.அதனால் என்ன இப்போது எனவும்,இது ஒரு போங்கு எனவுமாய் சொல்கிறார் குமாரசாமி.

மகன்கள்மூன்றுபேரும்வேலைக்குப்போய்விட்டனர்.ஒருவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 
கிளார்க்காக இருக்கிறார்.இன்னொருவர் பாரினில். ஜார்ஜியாவோ,துபாயோ சொன்னார்கள்.

அவர்அங்கேசிந்துகிறவியர்வைஇங்கேஇவர்களுக்குபணமாய் முளைத்துத்தெரிகிறது.
இளைய மகளைகட்டிக்கொடுத்து விட்டார்.அப்புறமென்ன?,,,,,,,,,என இருக்க முடியவில்லை.

கட்டிக்கொடுத்தஇடத்தில்தான்கொஞ்சம்சிக்கல்வருகிறதுஅவருக்கு. .கல்யாணம்,மறுவீடு,
விருந்துச்சாப்பாடு,புதுக்கருக்கு என இருந்த நாளில் தலை தீபாவளிக்கு வந்த மருமகன் சாப்பிடகையின்ஈரம்காயும்முன்பாகவேபோடவேண்டியபாக்கிநகை ஐந்துபவுனைப்போட்டால்
தான் மகளைக்கூட்டிப்போவேன் என நிற்கிறான்,

இத்தனைக்கும்சொந்தம்தான்உடன்பிறந்தஅக்காமகன்தன்மகளைசின்ன வயதிலிருந்து தன்
தோள்மீதும்மார்மீதுமாய்தூக்கித்திரிந்தவன்.அவளுக்குஇங்கு ஒன்றென்றால் அவன்ஊரில்
துடித்துப்போவான்.

அப்படியாய் மனதைகொடுத்தவனும் பிரியமும்,ஒட்டுதலுமாய் இருந்தவனும் இப்போது
ஒரு ஐந்து பவுனுக்காக மல்லுக்கு நிற்பது மிகவும் ஆச்சரிமாயிருந்தது குமாரசாமிக்கு. கேட்டால் அப்ப இருந்தது வேற இப்ப இருக்குற நான் வேற.நம்பித்தானே கொடுத்தார்,நம்ம சொந்தக்காரப்பய,அக்காமகன்னு/வேலைஎனஉருப்படியாய்ஒன்றும்இல்லையென்றாலும்
பரவாயில்லை.ஆசைப்படுகிறானே பாவம் வைத்துக்காப்பாத்துவான் என நம்பிக்கை வைத்து
-தானே கொடுத்தார்.

அதற்குஅவன்காட்டுகிறவிசுவாசமாஇது?நான்அன்னைக்கேசொன்னேன்கேட்டீங்களா,இப்ப பட்டுக்கிட்டு முழிங்க என சமயம் பார்த்து குத்திக்காட்டுகிறாள் மனைவி பழனியம்மாள்.

வேலை வெட்டி இல்லாத பயலுக்கு எப்படி பொண்ணைக்குடுக்க என இவர்கள் பேசிக்
கொண்டிருந்தஅல்லது அது சம்பந்தமாய் யோசித்துக் கொண்டிருந்த  நாளொன்றின் நகர்வில்
மாப்பிள்ளைக்காரன் வீட்டுக்கு வந்து விட்டான் என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது முடிவாய் என கேட்டு.

வந்ததுதான்வந்தான்,அவன்மட்டுமாவதுவந்திருக்கக்கூடாது?கூட இளந்தாரிகள் நான்கைந்து பேரையும் பெரியவர்கள் இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு வந்து நின்றான்.

ஆசைப்படுகிறஇருஉள்ளங்களையும்சேர்த்துவையுங்களேன்வாழட்டும் பிரியாமவும்,
ஒட்டுதலாயும்.இப்பஎன்னவேலைஇல்லைஅவனுக்குன்னுதான யோசிக்கிறீங்க?

அவனுக்குதான்கைவசம்தொழில்ஒண்ணு இருக்கே,அவன் பெரிய பெயிண்டர்ங்குறத மறந்துட்டீங்களா நீங்க?அப்படியே ஏதாவது மேடு பள்ளம் ஆனாலும் பொழைக்க கதியத்து நின்னாலும்நாங்கபாத்துட்டுசும்மாஇருப்பமாஅடநீங்கஎங்களக்கூடநம்ப வேணாம், எதுனா
ஒண்ணுன்னா இந்தா இருக்கு கூப்புடு தூரத்துல மூணு கிலோ மீட்டர்ல இருக்குற ஊரு,,,
,எட்டிப் பாத்துக்குற மாட்டீங்களா,அங்கனஅவுங்க விடுற பெருமூச்சுஇங்க கேட்டுறாது
ஒங்களுக்கு?அவன்கையநம்பிக்கூட வேணாம்.

இருக்குறசொத்துலபொம்பளப்புள்ளைக்குஒருபங்க வையிங்க,,,,,சரியாப்போச்சு,காணாததுக்கு
வெளிநாட்டுப்பணம்வேறவரப்போகுதுஅதுலகொஞ்சம்இந்தபுள்ள பேருக்குஎழுதிவையிங்க.
சரியாப்போச்சு,,,,,,,எனஅவர்களெல்லாம்பேசிய பேச்சையும்,பரஸ்பரம் இருவரதுஆசைகளையும் 
மனதில்வைத்துசேர்த்துகட்டிவைத்தஇரு மனதில்ஒன்றுமுரண்டுபண்ணிக்கொண்டுநிற்கிறது
மானத்தை வாங்கிக்கொண்டு/

“டேய் நல்ல நாலுமா அதுவுமா இப்பிடி மொரண்டு பண்ணிக்கிட்டு நிக்காத,ஊரே வாசல்லகூடிநிக்குதுவேடிக்க பாத்துக்கிட்டு/ஓன் கால்ல வேணாலும் விழுகுறேன்.வா வீட்டுக்குள்ளமொதல்ல,,,, போன மாசந்தான் கையில இருந்ததெல்லாம் போட்டு பையன வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சிருக்கேன்.அவன் பணம் அனுப்புனதும் மொத வேலையா ஒனக்கு குடுக்க வேண்டியத குத்துர்ரேன்.கூடக்கூட ரெண்டு பவுனு வேணுமின்னாலும் பண்ணிப்போடுறேன்.

இப்பவாவீட்டுக்குள்ளஊரேகூடி வேடிக்கபாக்குது,வாமாப்புள்ளவீட்டுக்குள்ள”,,,என்கிறபேச்சை
அன்று மிதித்தவனை ஊரே கூடி வேடிக்கை சாட்டைக்கம்பால் அடித்து விரட்டிவிட்டார்.

“நான்தூக்கிவளத்தநாயிஇன்னைக்கிஏங்கொறவளையயேகடிக்கவருதா,கழுத இப்படிப்பட்ட
ஒருமாப்புள்ளஏங்புள்ளைக்குஇல்லைன்னாக்கூட பரவாயில்லை,ஒன்னைய அத்து விட்டுடதா 
நெனைச்சிகிறேண்டாநானும்ஏங்குடும்பமும்போயிரு ஏங்கண்ணு முன்னால இருந்து,,,,,,,,,,,,,என அவர் சொன்ன வார்த்தைகள் இன்று வரை நிலை கொண்டு விட்டது.

பொய்த்துப் போன நம்பிக்கையை சுமந்து கொண்டும், மகள் இன்றுவரை அவரது வீட்டிலே
தங்கிவிட்டஇந்த ஐந்து வருடங்களை தவிர்த்து வேறெதுவும் அவருக்கு பெரிய  கவலை வேறென்றும் இல்லை என்கிற ஊர் பேச்சுடன் அவர்களது காலங்கள் அந்தப் பெட்டிக் கடையுடனும்,மாட்டுத் தொழுவம் இருந்த இடத்தில் கட்டப்பட்ட வீட்டுடனுமாய்/

5 comments:

 1. தலைப்புக்கேற்ற நடக்கும் நிகழ்வுகள்... காட்சிகள் கண் முன்னே தெரிந்தன.. நன்றி சார்....

  ReplyDelete
 2. //இப்படி இருந்தால் என்னாவது விவசாயம் மற்றது எல்லாம் என கவலை கொண்டு பேசிய குமாரசாமிகடை வைத்திருந்தார்//

  சமூகத்தின் நிலமையை அப்படியே படம் பிடித்துக்காட்டும் வரிகள்.

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல்தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. வணக்கம் வே,சுப்ரமணியன் சார்,
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete