25 Nov 2012

கோடிட்ட இடம்,,,,,,,,


            
எல்லோரையும் போலவே அவருக்கும் இரண்டு கைகள் இருந்தன.மாநிற மேனியில் நீண்டு தெரிந்தகைகளிரண்டிலும்முளைத்துசிலும்பித்தெரிந்த கருநிற முடிகள் செம்பட்டை பாரித்துத் தெரிந்தன.

நான் அவரைப்பார்த் வேளை கண்ணுக்கு இதமான மாலை வேளைஎனச்சொல்லலாம்.மதியம் 
முடிந்து மாலையை எட்டித்தொடப் போகிற அல்லது அதன் தோளில் கைபோடப்போகிற 
வேளை.சாப்பிட்டு முடித்த கையோடும் வயிறோடும் வந்திருந்தேன்.

இன்றைக்கு அரைநேரமே அலுவலகம்.மனதையும் உடலையும் அழுத்துகிற அவசரத்துடன்
பணியைமுடித்துக்கொண்டுநிமிர்வதற்குள்ளாக வந்து விட்டிருந்த பத்திற்கும் மேற்பட்டபோன் 
கால்களில் பத்திற்கு பதில் சொல்லி விட்டு இரண்டை மட்டும் காற்றில் கலக்க விட்டு விட்டவனாகவும் அலுவலகம் முடிந்த நேரத்தில் அவசர,அவசரமாக சாப்பிட்டு விட்டு வந்தவனாக/

நான் வந்த நேரம் கந்தசாமி ஜீ தொழிலார் நலம் பேசிய கோரிக்கை சுமந்தஅட்டைகள்
சிலவற்றை நீளமான கம்பில் வைத்துதைத்துக்கொண்டிருந்தார்.அது சம்பந்தமாகத்தான் அவரை பார்க்க வந்திருந்தேன் நான்.

எனக்கு வந்து நான் பதிலளித்து பேசிய போன்களும் இதைப்பற்றிதான்  சொன்னது.பெரிதாக 
ஒன்றுமில்லை, “நாளை நடக்கவிருக்கிற மாநாட்டிற்கும்,ஊர்வலத்திலுமாய் பிடித்துச்செல்ல கோரிக்கை தாங்கிய அட்டைகள் 25 வரை தேவைப்படலாம் அதை ஏற்பாடு செய்தால் தேவலாம் என போனில் மிதந்து வந்த பேச்சைதந்தி போல பாவித்து செயல் படவும் என என் மீது சுமத்தப்பட்டிருந்த வேலையை எந்தவித சிராய்ப்புமற்று கந்தசாமிஜீயிடம் அவரது அனுமதியுடன் இறக்கி வைக்கிறவனாகிப்போகிறேன் நான்.

எனக்கு வேறு  வழி தெரியவில்லை.அலைந்து பார்த்த அல்லது மனதிற்குள்ளாகஅலசிப்பார்த்த
போது தட்டுப்பட்டவராக  கந்தசாமி ஜீ இருந்தார்.அவரது முழுப்பெயர் கந்தசாமி,அதை 
எல்லோருமாய்சுருக்கியும் மரியாதையாகவும் கந்தசாமிஜீ எனஅழைக்கிறோம் அன்பும்,பண்பும் 
நட்பு,தோழமையும் மேலிட/

சமரசமற்ற போர் சிந்தனைகள் நிறைந்த அந்ததொழிற்சங்கஅலுவகத்தில் அவர் அலுவலக மேலாளர்.அங்குஅனைத்தும்அவர்தான்.அலுவகத்தை சுத்தம் செய்வதிலிருந்து முக்கிய
விஷயங்களில் ஆலோசனை சொல்வதுவரை அவர்தான்.ஆனால்கட்டிடத்தின் அஸ்திவாரம்
போலஅவரதுசெயல்பாடுகள்எனயோசித்தவாறேவந்து கொண்டிருந்த வேளையில் இப்படியான காட்சி உருவாய் காட்சிப்படுகிறார் கந்தசாமி ஜீ/

“இல்ல சார், நீங்கவர்றதுக்கு முன்னாடி ஒங்க தலைவரு எனக்கு போன்பண்ணிசொல்லீட்டாரு,
நானும் எங்க சங்கப்பொறுப்பாளர்கள்கிட்ட பேசீட்டேன்.அவுங்களும் ஒப்புதல்குடுத்துட்டாங்க.
அதுக்கப்புறம்தான் இந்த வேலய ஆரம்பிச்சேன்.நேத்து நைட்டே ஆரம்பிச்சிட்டேன்.அந்த ஸ்டாக் ரூம்லயிருந்த அட்டைகளப்பூராம் எடுத்து தூசி தட்டி ஒண்ணுபோல அடுக்கிதொடச்சி
எடுத்து பேப்பர் ஒட்டிவச்சேன்.காலையில ஒரு பத்து மணி போலஎழுதஆரம்பிச்சிஇப்படித்தான்
அரைமணி நேரத்துக்குமுன்னாடிஎழுதி முடிச்சேன்.இப்ப அதுகளஇந்தகம்புலவச்சிதச்சிக்
கிட்டு இருக்கேன்.நீங்க வந்துட்டீங்க/வாங்க சார்,இப்ப ஒண்ணுமில்ல பெருசா,,இதெல்லாம்
ஏங் வேல நான் முடிச்சிப்புடுவேன் ஒரு அரை மணி நேரத்திலயோ ஒருமணி நேரத்திலயோ.
சுத்திகிட்டேயிருக்கணும்சார்.சுழல்கிறவரைதானே சக்கரம்ன்னு சொல்லீருக்காங்க/அது மாதிரி 
வேலசெஞ்சிக்கிட்டேஇருக்குறவரைக்கும்தான்கந்தசாமிஜிஒண்ணுமில்லசார்,இப்ப பாத்ரூம்கள கழுவிவிட ரெண்டு பினாயில்பாட்டில்வாங்கணும் சார்.அத கழுவிவிட்டா இந்தா வாளியில 
வச்சிருக்கேன்பாருங்கதுணிக,அதஅலசிபோடணும்இங்கபாருங்கஎனஎன்தோள்தொட்டு
திருப்பி இந்த வெளியெல்லாம் கூட்டீட்டு சாப்புடணும். அப்பிடியே சாப்புட்டுட்டு கொஞ்ச 
நேரம் தல சாய்க்கணூம்.அப்பத்தான் நாளவிடிஞ்செஞ்திரிச்சி சக்கரம் சுத்தும்.

இப்ப நீங்க வந்த வேல முடிஞ்சிருச்சி.நாளைக்கு காலையில இந்த கோரிக்கை அட்டைக பூரா
ரெடியா உயிரோடஎந்திரிச்சிநின்னுஒங்கள வரவேற்கும்  பாருங்க”/என எழுந்து நின்று எனது 
இருகைகளையும் இறுகப்பற்றி விடை  கொடுத்து அனுப்பியவரை ஆழ்ந்து கவனிக்கிறேன்.

விரைத்து  நீண்டிருந்த  அவரது இடது கையில்விரல்கள் இருக்க வேண்டிய இடம் மொன்னை
ஆகி வெற்றிடம் பூசித்தெரிந்தது.

விடைகொடுக்கநீட்டியஅவரது இரு கரங்களையும் நீண்டநேரம்பற்றியிருந்தவனாய் அவரிடம் 
ஏதும் சொல்லாமல் கிளம்புகிறேன். 

2 comments:

  1. வணக்கம் குட்டன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

    ReplyDelete