4 Nov 2012

பூவாகி,காயாகி,,,,,


                    
கோழி கிளறியதும் நல்லதாகவே ஆகிப்போகிறது.சனிக்கிழமை அலுவலகம் முடிந்து பசியோடு வீட்டுக்கு வந்த மதியவேளையில் வீட்டின் பக்கவாட்டு வெளியில் கூட்டிக்குவிக்கப்பட்டிருந்த

குப்பை கிளறப்பட்டு வேப்பமரத்திலைகளும், பன்னீர்மரப்பூக்களுமாய் காட்சியளிக்கின்றன.

இரண்டுநாட்களாய்கூட்டிக்குவிக்கப்பட்டிருந்தகுப்பையின் குவியல் அது.வீட்டினுள்ளே அன்றாடம் கூட்டி அள்ளிய தூசியும், இரண்டும்,இரண்டும் நான்குமாய் நின்ற வேப்ப மரங்களிலிருந்தும்,பன்னீர் மரங்களிலிருந்தும்  உதிர்ந்த  இலைகளையும்,பூக்களையும்  சேர்த்து குப்பையாய்க்கூட்டி தீ வைத்து எரிக்கும் முன்பாக இப்படி ஆகிப்போகிறது.

கால்நகங்களில்வலுவுள்ளகோழிகள்நான்குவந்துஇப்படிசெய்து விட்டுப்போயிருக்கிறது.
சேவல்கள் இரண்டு, கோழிகள் இரண்டு போனால் போகிறதெனகூட வளரிளம் பருவத்தில்
இருக்கிறகுஞ்சு ஒன்று.

கருப்பும், வெள்ளையும், ப்ரெவுனுமாய் நடமிட்டு வருகிற அவைகள் சற்றே மிரட்டலாய்த்தான்
தெரிகின்றன இந்த  விஷயத்தில்.

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாய் காலையிலும்,மாலையிலும்,மற்றும் இரவிலுமாக பெய்தமென் தூறல்,அதில் நனைந்து போயிருந்த குப்பை,இதை இப்போதைக்கு ஒன்றும் செய்து விட
இயலாது,பேசாமல் கூட்டி ஓரத்தில் வைத்து விடலாம் என்கிற யோசனையில் விழுந்தமென் கீறலாய் இந்த கிளறல்.

அதைப்பார்த்ததும் எரிச்சல்தான் வருகிறது.”இந்த மரங்கள வெட்டுங்கன்னு சொன்னா கேக்குறீங்களா?இதுகள்லயிருந்து விழுகிற யெலதலைகள கூட்டி அள்ளுறதுங்குள்ள ஏன் ஜீவன் போயிருது,நான் வீட்டு வேலைகள பாக்குறதா?இல்ல சுத்தம் பண்ணீட்டு திரியிறதா?”
எனச்சொன்ன மனைவியை விரல் காட்டி “உஸ்” சொல்லிவிட்டு(சப்தமாய் பேசாதே
அவைகளுக்கு கேட்டுவிடக்கூடும்) அதன் உதிர் இலைகளையும், பூக்களையும் கூட்டி அள்ளுபவனாகிறான் இவன்.

அன்றிலிருந்து இன்றுவரை மரங்கள் முளைவிட்டு பரந்து நிற்கிற வீட்டின் பக்கவாட்டு
வெளியை  பூக்களுடன் பேசிக் கோண்டே கூட்டியவைகளை ஓரிடத்தில் குவித்தும்
எரிக்கவுமாய்  இருந்த இவன் கோழி குப்பையைக்கிளறியதும் நல்லதாகவே போயிற்று என இப்போது நினைக்கிறான்.

பரவிச் சிதறியிருந்த குப்பை காய்ந்து போயிருக்க அவற்றை மொத்தமாய்க்கூட்டி எரிக்கிறான்.

வைத்த தீ  பற்றிக்கொள்ள  முதலில்  பேப்பர்,  கேரிபேக்,  தேங்காய்க்குடுமி,,,,,,  என
இருந்தவைகள் பற்றி எரிந்து,எரிந்து,,,,,,கடைசியாகஒட்டுமொத்தக் குப்பையும் எரிகிறது.

இரண்டு நாட்கள் முன்புவரை மரத்திலிருந்து தலைகீழாக தொங்கிபேசிச்சிரித்த பூக்கள் இன்று  வாடிய சருகுகளாய் குப்பையில் எரிகின்றன.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்க்கையும் இப்படித்தானே...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

thnaks rajini pirathap sing sir,