7 Nov 2012

கொடக்கம்பி,,,,,,

              
மனது பயணிக்கிற வேகத்தில் உடல் பயணிப்பதில்லை.உடலின் வேகத்திற்கு மனம் ஈடு கொடுப்பதில்லை.எப்போதாவது நடக்கிற அதிசயமாக உடலும் மனதும் சேர்ந்து பயணிக்கிற
காட்சியையையும்,ஒத்திசைந்து போகிற நிகழ்வையும் பார்க்க முடிகிறது.

ஆனால் நான் பார்க்கிற நேரங்களிலெல்லாம் ஓடிக்கொண்டே இருக்கிறார் சேசு. ஐந்தரை அல்லது அதற்கு சற்றே குறைவான உயரத்தில் (முடிவெட்டிக்கொள்கிற நேரங்களில் சற்று உயரம்குறைந்துகாணப்படுவார்போலும்/)இருக்கிறசேசுஎன்கிறசார்லஸ்ஓரிட்டத்தில் நிற்பதும்,
அமர்வதும் அபூர்வம்தான் போலிருக்கிறது.

அதைபடம்பிடிக்ககாமிராவைதூக்கிக்கொண்டுஅலைய வேண்டும் போல/பெரும்பாலும் முனிப்பாண்டிதோழர்டீக்கடையில்தான்அவரைப்பார்க்கிறேன்,அந்த ஐந்தரை அடி உயரத்தில்.

கட்டம்போட்டகைலியும்,உடலின்மேல்இறங்கித்தொங்குகிறவெளிர்நிறசட்டையும்அவருக்கு அழகாவே இருப்பதுண்டு. நடுவில் வழுக்கை விழுந்த தலையில் ஏற்றிச் சீவிய முடியுடனும் தாடியுடனுமாய் இருக்கிற அவரில் அந்த அடையாளம் பொருந்திப்போன பாந்தமாய்/

“ஏண்டா அந்த சனியன்புடிச்ச தாடிய எடுத்துத் தொலைச்சா என்னவாம்? என்னவோ இப்பத்தான் பாக்க அம்பது வயசு ஆள் மாதிரியில்ல தெரியிற கிறுக்கா, இந்த 25 வயசுல இப்பிடி திரிஞ்சயின்னா பொண்ணு குடுக்கணும்ன்னு நெனைக்கிறவுங்க கூட குடுக்க மாட்டாங்கடா,,,,,நான் வேணுன்னாலும் ரூவா தர்ரேன் இந்தா, போயி மொதல்ல சேவிங் பண்ணீட்டு வா” என்பார்.

கடைக்கார முனிப்பாண்டித் தோழர்.அவருக்கும் சேசுவுக்கும் மிகவும் ஒட்டுதல் பேச்சில்.
சமயங்களில் மிகவும் பிரவாகமெடுத்து ஓடுகிற அளவுக்கு பேசுவார்கள்./

ஆனாலும் முனிப்பாண்டித் தோழருக்குசேசுடேய்தான்,சேசுவுக்கு முனிப்பாண்டி தோழர்தான்.

தோழர்  என்கிற  சொல்  விளிம்பின்  வழியாக  அவரை  அவ்வளவு  தூரம்  தரிசித்திருக்கிறார்.
“அப்பிடியா தோழர், சொல்லுங்க தோழர், சரிங்க தோழர், ஏன் தோழர், எதுக்குத்தோழர்?என்கிற
சொல்லிடைப்பேச்சினூடாக நீங்க சொன்னா சரிதான் தோழர்.பொதுவான விஷயத்துக்காக எங்கிட்டும் சாயாம நெசத்துக்காக நிக்கிற ஆளுநீங்கசொன்னாநான்கேக்காம போயிருவேனா
தோழர்?ஆனா தாடிய மட்டும் எடுக்கச் சொல்லாதீங்க தோழர்.ஏங்பெர்சனாலிட்டி போயிரும்,
ஆமா,,,,இதுபாக்கஒருகேரக்டர்மாதிரிதெரியுதுல்லசும்மாவா,,,,இப்ப நம்மூர்ப்பக்கமும், சுத்தி
இருக்குறஊர்கல்ளயும் சினிமாசூட்டிங் நடத்துகிட்டு இருக்காம். சந்தர்ப்பம்சாக்குலஅப்பிடியே
 நம்மளப்பாத்தாகொத்தீட்டுப் போயிற மாட்டாங்களான்னு ஒரு நெனைப்புதான்.

நம்மூர்ல சினிமா சூட்டிங் நடந்த ஒரு மாசமும் நான்சென்னைக்குப் போயிட்டேன் அக்கா
வீட்டுக்கு,“அவ என்னடான்னாஒத்தப் பொண்ண பெத்து வச்சிகிட்டுபொண்ணக் கட்டிக்கோ,
கட்டிக்கோ ஒத்தக்கால்ல நிக்கிறா,அங்க போகுபோதெல்லாம் இது ஒரு பெரிய பஞ்சாயத்தா இருக்கு.இதுக்குதான் அக்கா இல்லாத வீடாப்பாத்து பொறக்கணும்ங்குறது,ஏங்மச்சான் என்னடான்னாநைட்11மணிக்குஎழுப்பிகொத்துக்கறிவச்சிருக்கேன் சாப்புடுங்கன்றாரு,எதுக்கு 
மச்சான் இதெல்லாம் வேணாத வேலையா,கொத்துக்கறி சாப்பிடுற நேரமா இதெல்லாம் அப்படின்னா “ஏங் பொண்ணக்கட்டும் போது தெம்பா இருக்க வேணாமான்றாரு என்ன செய்ய சொல்லுங்க, அவன் என்னடான்னா எங்க  அக்காபையன் அதுக்கு மேல இருக்கான்,
குடும்பமே லூசுக் குடும்பமா இருக்கும் போலன்னு சொல்லாக்கொள்ளாம ஒடியாந்துட்டேன் தோழர் அங்கயிருந்து/

மச்சான் கூலி வேலைதான் பாக்குறாரு, ஆனா கைநெறைய சம்பாரிக்கிறாரு,புள்ளைகளுக்கு
ஸ்கூல்செலவு,குடும்பச்செலவு,மத்தது மத்ததுன்னு அவரு சம்பாத்தியத்துலதான் ஓடுது,வீட்ல ரெண்டு பசுமாடு நிக்குது,அதோட மல்லுக்கட்ட அக்காவுக்கும் பொழுது சரியாப்போகுது,பால் கரக்க,விக்க,அதுகளுக்கு தீனீ வைக்கன்னு அவ பாடு அவளுதுன்னு ஓடிக்கிட்டு இருக்கு,

“அவுகளுக்கு ஒரு ஆசை மனசுல கெடந்து வாதிச்சிக்கிட்டிருக்குபோல.எப்பிடியாவது அவுங்க பொண்ண எனக்கு கட்டிக்குடுத்து என்னைய ஒரு ஆளா ஆக்கணும்ன்னு நெனைக்கிறாங்க/,

“வாஸ்தவம்தானடாஅவுங்கஇப்படி நெனைக்குறதுல என்னடா தப்பு?ஒன்னைய அப்பிடி நெனைக்குறதுக்கு அவுங்களுக்கு உரிமை இல்லைன்னு நெனைக்கிறயா நீ?”,

“தோழர் சும்மா நிறுத்துங்க தோழர் எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்பிடி பேசுனீங்கன்னா எப்பிடி?”

“இப்பஎன்னடாஅதுக்கு,வாலிப பிராயத்துல பெரும்பாலுமா எல்லாருக்கும் நடந்துகடந்து போறதுதானடா, அதையே இன்னும் நெனைச்சுகிட்டு இருந்தா எப்பிடி?அந்தப் புள்ளைக்கும் 
இப்பகல்யாணம்ஆகிரெண்டுகொழைந்தைங்கஇருக்குநீஇன்னும்அதையே நெனைச்சிக்கிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு?”

“இல்ல தோழர் நான் அப்பிடியே அவ நெனைப்பாவே இருந்து செத்துப் போயிர்றேன்  தோழர்,”

ஊம்,அப்பியாப்பா,அப்புறம் என்ன,,,,,,,சினிமா ஆசைய வளத்துக்கிட்டு பெரிய ஆளாகனும்ன்னு
நெனைக்கிற.கழுதசெத்துப்போறேதுன்னா,இப்பயேபோகவேண்டியதுதான”

 “இல்ல தோழர் நான் சொல்ல வர்றத கோபப்படாம கேளுங்க தோழர்”

“என்னநீசொல்ல வர்றத கோபப்படாம கேக்குறது,ரொம்பப் பேசுனைன்னா சொத்துன்னு ஓங்கிஅரைஞ்சிருவேன் பாத்துக்க,ஏண்டா மாடு மாதிரி வளந்துருக்க,நாலு பேர பாக்குற ,நாலு பேர் கூட பழகுற,நாலு யெடத்துக்கு போர,வர்ற,பேச்சுல இன்னும் ஒரு தெளிவு வரலையே தம்பி, என்ன பெரிய இவன்ன்னு நெனைப்பாடாஒனக்கு?ஒனக்கப்பறம் வீட்ல ஒரு தம்பியும்,
தங்கச்சியும்இருக்காங்கன்றதமனசுலவச்சிப்பேசுஇப்பிடிகொந்தா,கூறா யோசிக்காத,மொதல்ல ஒருநாளாப்பாத்துநீயிசென்னைக்குகெளம்புநான்பேசிக்கிறேன்ஒங்க அம்மா,அப்பாகிட்ட,
அப்பிடியே ஒங்க மச்சான் போன் நம்பரையும் குடு,அவருக்கு போன் பண்ணி வரச் சொல்லி ஒன்னைய தலையில நாலுதட்டி இழுத்துக்கிட்டுப்போகச் சொன்னாத்தான் உருப்படுவடா,”
என அடிக்கடி அவரை வைகிற முனிப்பாண்டி தோழரிடம் பேசுகிற சேசு,,,,,,,,

“விடுங்க தோழர் நீங்க என்னைய இன்னைக்கு நேத்தா வையிறீங்க,எனக்கு கவலை எல்லாம்இப்பநான் சென்னைக்கு போயிருந்த நேரமாப் பாத்து சினிக்காரங்க சென்னைய விட்டுஇங்கவந்துட்டாங்க,அதுஅவுங்கபொல்லாதவேளையின்னு நெனைக்கிறேன்,நான் ஊர்ல இல்லாதநேரமாப்பாத்து சூட்டிங் நடத்தீருக்காங்க,“ஒருவேள நான் ஊர்ல இருந்துருந்தேன்னா கண்டிப்பாஇந்தப்படத்துலநடிச்சிருப்பேன் நான் நடிச்சதுக்காக கூட பத்து நாலு ஓடியிருக்கும்
படம்,தேட்டர்க்காரங்களுக்கும் நல்ல கலெக்ஷன் ஆயிருக்கும்,எனக்கும் ஒரு பேரு கெடச்சிப்
போயிருக்கும்.நானும்ஒருஆளுதான்இந்தஊர்லன்னுநெஞ்சநிமித்திக்கிட்டு திரிஞ்சிருக்கலாம்,
இப்ப,,,,,எல்லாம்போச்சுநம்மஊர்லஅந்தபடம்சரியாஓடலைன்னு கேள்விப்பட்டேன்.

இதப்பத்தியெல்லாம்படமெடுத்தடைரக்டருக்கு கவலப்பட நேரமிருக்காஎன்னான்னு தெரியல,
இதையெல்லாம் வெளக்கி ஒரு கடிதம் எழுதணும் தோழர் அந்த சினிமா எடுத்தவுங்களுக்கு” என்கிறசேசுவின் உயர்ந்த பட்ச ஆசையும் குறைந்த பட்ச ஆசையும் எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் என்பதுதான்,

“ஏலேசின்னப்பயலே,சின்னப்பயமாதிரிபேசாத,வந்தமாடீயக்குடிச்சம்மான்னு கெளம்பு,
அப்பறம் ஒங்க ஓனரு ஏங்கிட்ட சண்டைக்கு நிப்பான்,நான் என்னமோ டீக்குடிக்க வர்ற ஒன்னைய பிரியப்பட்டு கடையில ஒக்காற வச்சிட்ட மாதிரி/”

“அதவுடுங்க தோழர்,கொஞ்சம் முன்னாடிதான் அம்பது வயசுக்காரன் மாதிரி இருக்கேன்ன்னு சொன்னீங்க,இப்ப அதே வாயால சின்னப்பையன்றீங்க/”எனசிரித்து கொள்கிற சேசு டீக்கடை வரிசையிலேயே நான்கு கடை தள்ளி அமர்ந்திருக்கிற சைக்கிள் கடையில் வேலை பார்க்கிறார்.
டயர்,ட்யூப்,பஞ்சர்,ஓவராயில்,ஸ்பேர்பார்ட்ஸ்,மொதலாளி,சம்பளம்,,,,,என்கிறகட்டுக்குள் அடங்கி தெரியாதவராகவே தெரிகிறார்.

அவர் வேலை பார்க்கிற சைக்கிள் கடை கணக்கில் தினசரி காலை மாலை ஒரு வடை,டீ அனுமதி உண்டு.இது போக அங்கு வர போக இருக்கிற நேரங்களில் யாருக்காவது மொத்தமாக டீக்கொண்டு குடுக்க போகவேண்டுமானால், கொடுத்துவிட்டு வருவார்.
அதற்கு கூலியாக ஒரு வடையை எடுத்துக் கொள்வார்.

அன்று அப்படியான ஒரு பொழுதில்தான் நான் போயிருந்தேன் டீக்கடைக்கு/டீத்தூக்கில் 
வைக்கப்பட்டிருந்த  நாலும், ஐந்துமான 9 டீக்களுடனும், மடித்துக்கட்டிய  பேப்பரிலிருந்த 
வடையுடனுமாய்கிளம்புகிறார் கைக்கொன்றை பிடித்துகொண்டு.தோழர் கைகாட்டியதிசையை
நோக்கி செல்கிறார் சிரித்த முகத்துடன்/

போகும்முன்பாகதட்டிலிருந்தவடையைஎடுத்துஅதைஇரண்டாகபிய்த்துவாயில்அமுக்கியவர்அரையும்,குறையுமாகமென்றுவிழுங்கிதண்ணீர் குடிக்கிறார் சரியாகஅரைபடாமல் வாயினுள்
இன்னும்மிச்சமிருகிறவடைதுண்டுகளுடன்/

கட்டம்போட்டகைலி,வெளிர்நிறத்தில்முழுக்கை சட்டை,காலில் தேய்ந்து போன செருப்பு முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த புன்னகை இவைகளுடன் மண்ணளந்து நடக்கிற சேசு நான்பார்க்கிற நேரங்களிலெல்லாம் ஓடிக்கொண்டேயிருக்கிறார்.அவரைப்பார்க்க நேர்கிற என்னைப்போன்ற யாவரையும் உற்சாகம் பூக்கச்செய்துகொண்டே/  

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பேசுவது அப்படியே கண் முன் தெரிகிறது... அருமை...

நன்றி...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக.

semmalai akash said...

எவ்ளோ அழகா சொல்லிருக்கீங்க! இந்த நிகழ்வுகளை நேரில் கண்டதுபோல் ஒரு உணர்வு நண்பரே! அருமை!

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வ்ணக்கம் செம்மலை ஆகாஷ் சார்,நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/