இரவு மணி 11 முடிந்து 12 ஆகிப் போகிறது. அமைதிகுடி கொண்டதாகவும்
ஆள் அரவமற்றதா
-கவும் ஆகிப் போகிறது வீதி/
விரிந்து தெரிந்த வீதியில்வலமும்,இடமுமாய் நட்டு வைக்கப்படிருந்த
வீடுகளில் குடிகொண்டு
இருந்த ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும்,பெரியவர்களும்,யுவன்களும், யுவதிகளும்,
உடுத்தியிருந்தபுத்தாடையைகளைந்துவிட்டு மாற்றுடைக்கு மாறிய திருப்தியுடனும்,இனிப்பும்
காரமுமானபலகாரங்களைஉண்டுசெரித்துவிட்டகளைப்பிலும், வேட்டுக்களை வெடித்து
முடித்து விட்ட சந்தோசத்துடனுமாய் தூங்கிப்போகிறார்கள்.
இன்றுஅதிகாலையிலிருந்துஅந்தவீதியின்மக்கள்எல்லோரையும்தன் தோள் மீதும்,மார்மீதுமாய் சுமந்த களைப்பு நீங்க ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததாய் விரிந்து
தெரிந்த வீதி.
தார்பூசப்பட்டு காட்சியளித்த வீதியின் மேனியெங்கும் பெயர்ந்து
தெரிந்த கற்களும்,சிறு சிறு பள்ளங்களும் அழுக்கும் தூசியும் புழுதியுமாக.கூடவே ஆங்காங்கே
பெயர்ந்து மண் காட்டி சிரித்த சிரிப்பும்/
மனைவியும்,மகனும் உறங்கிப் போயிருக்க தூக்கம் பிடிக்காமல்
மூடியிருந்த வாசலின் பூக்கள் பூத்துகலர்அடிக்கப்பட்டிருந்தஇரும்புகேட்டின் வழியாக வீதியை
வெறிக்கிறேன்.
எரிந்துகொண்டிருந்ததெருவிளக்கில்வீதிபளிச்சிடுகிறதுஅப்போதுதான்இளம் வெயில்ப்பட்டுத்
தெரித்ததைப்போல/
எதிர் சாரிவீட்டின் விளக்கு இன்னும் பிரகாசப்பட்டுக் கொண்டும்
உயிர்ப்புடனுமாய்/
வீதி முழுவதும் வெடித்து முடித்த வெடியின் துகள்களும்,சிதறலகளும்
கலர்க் கலராய் காட்சியளிக்கிறது.
குப்பையாய் தெரிந்த அந்த கலர் பேப்பர்களுக்கு மத்தியில்
வேட்டு வெடித்தவர்களது முகங்களும், திரிபற்ற வைத்தவர்களது கரங்களுமாய், சந்தோசச்சிரிப்பின் சப்தமும்/கூடவே இன்னமும் உறக்கம் கொள்ளாத வீதியின் மண் துகள்கள் சந்தோஷம் களையாமல்/
9 comments:
ரசனையை ரசித்தேன்...
வெடிச்சிதற்களும் மட்டுமல்ல சத்தமும் கேட்கவே செய்கின்றன.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் சசிகலா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்
கருத்துரைக்குமாக/
எண்ணக் கோர்வை சிறப்பு.
வணக்கம் டீ.என் முரளிதரன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களின் அறிமுகத்திற்கு/
Post a Comment