பெய்த மழையின் ஈரம் இப்போது திரும்பவுமாய் மனம் படர்ந்து பரவுகிறது.அது ஒரு மழை நாளின் மாலை நேரம். அப்பிச,கார்த்திய என்கிற (ஐப்பசி,கார்த்திகை) இரண்டு தமிழ் மாதங்க ளையும் தன்னுள் பொதித்து வைத்துக்கொண்டிருந்த மழை மாதம்
அது.
சொல்லாமல் கொள்ளாமல் வானம் அவிழ்ந்து விடும்.அப்படியான பொழுதொன்றின் மாலை வேளையது.நேரமெல்லாம்தெரியாது.வியர்வைவரிகளையும்உழைப்பையும்,மண்வாசனையையும்
தன் உடலில் தாங்கி அடையாளப்படுத்திக் கொண்டவனுக்கு காலமெல்லாம் நேரமெல்லாம் ஏது?அதை கணக்கில்
கொள்வதும் இல்லை.
நானும்எனதுசித்தப்பாவுமாய்எள்ளுக்காய்க்கட்டுகளைவண்டியில்ஏற்றிக்கொண்டிருக்கிறோம். அறுத்து அடுக்கப்பட்டிருந்த காய்களின் கட்டுகள்
காட்டின் வடக்கு ஓரத்தில் குவித்து அடுக்கப்பட்டிருந்தது.
ஊரின் வட மூலையில் விரிந்திருந்த ஒன்னரை
ஏக்கர்நிலத்தில்முளைத்துமுத்தி இருந்த எள்ளுகாய்களை தன்னில் விளைத்துக்
கட்டிக்கொண்டிருந்த செடிகளை கால் வண்டி ஏற்றி விட்டோம்.
அடுக்கிய எள்ளுக்காய்களின் கட்டுகள் தன் உயரம் காண்பித்து வண்டியை
நிறைத்து நிற்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு சிறு செடிகளாய் பூத்து மண்ணில் பாவி
நின்ற அவை இன்று காய்களுடன் அறுக்கப்பட்டு கட்டுகளாய் வண்டியில்/
அடுக்கப்பட்டிருந்தஅறுக்கப்பட்டகாய்களின்கட்டுகள்பச்சைபூத்துகண்ணுக்குகுளுமையாயும் மனக்கணக்குபோடவைப்பவையாயும்/வானத்தில்நிறம்பார்க்கிறான்.பறவை பார்க்கிறான்.நீலம் பாரித்த வானில் பறவைகள் என கண்ணைப் பறித்து
தன்னில் வைத்துக் கொள்கிறது. இந்த அடைமழை நேரத்தில் இவைகளின் பயணம் எதை நோக்கியதாய்
இருக்கும்?
முன் பாரம்,பின் பாரம் பார்த்து வண்டியின் தாங்குதிறன்சோதித்து அதை மனதில் வைத்து ஏற்றிய பாரத்தை பார்த்துக்கொண்டிருந்த வேளையில் பாரத்தில்
கொஞ்சம் மிஞ்சிப் போகிறது.
அதிகமில்லை. ஒரு பத்துக் கட்டுகள் இருக்கலாம். கட்டுக்களை எண்ணியும்,
மனக் கணக்குபோட்டுமாய் பார்த்துமாய் கொண்டிருந்த
வேளையில் எள்ளுக்காயின் முனைபட்டு எனது டவுசர் கிழிந்து போகிறது.
சிவப்புக்கலர் டரவுசர் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் பல நாட்களாய் எப்படியாவதுஒருசிவப்புக்கலர்டரவுசரைசொந்தமாக்கிக்கொள்ளவேண்டும்எனநினைக்கிறேன்.
வேறுகலரில் அல்லது கட்டம் போட்ட எதாவது ஒரு நிறத்தில்
தன்உடலில் டரவுசரை ஒட்டவைத்துக்கொள்ள அனுமதி அளித்து விடவில்லை இதுநாள்வரை/
தன் வயது பயல்களெல்லாம்
உடலைப்பிடித்தமாதிரியும்,இடுப்புக்கு கீழே கச்சிதமாய் நிற்கிற மாதிரியும் டரவுசரைப் போட்டுக் கொண்டு ஊர் மந்தையில்
நடந்து திரிகிற போது அதைப்பார்த்து லேசாக பொறாமைகூடபட்டுள்ளான்.அதற்காக எரித்துவிடுகிறஅளவெல்லாம் இல்லை.
போன மாதத்தில் பாதி நாட்கள் மாயாண்டி அண்ணன் தோட்டத்தில் வேலை.கொஞ்சம் கணிசமாக சம்பளம் சேர்ந்தது.அதில்
எப்படியாவது ஒரு டவுசர் எடுத்துவிடலாம் என்கிற கனவில் இருந்தபொழுதுவீட்டின்அடுப்புப்பாடும்தங்கையின்படிப்புச்செலவும், தம்பியின் கைச் செலவும் கண் முன் வந்து நிற்கிறது.
ஒரு மீட்டர்துணிபோதும்.எடுத்து ஐயாக்காளை டெய்லரிடம் கொடுத்தால் தைத்துக்கொடுத்து விடுவார் அழகாக/போட்டுக்கொண்டு திரியலாம்.
தன்னுடன் கூலி வேலை பார்க்க வருகிற தனது சேக்காளிகளில் நாகுவும், கருப்பசாமியும்
அண்ணன் தம்பி.
அண்ணன் தம்பி என்பது சரி. அதற்காக போடுகிற டரவுசரில் கூடவா ஒற்றுமை வேண்டும், எந்நேரமும்
அந்த சிவப்பு டரவுசர்தான்.
கிட்ணண்ணன், ராமசாமி, ரெங்கன்,காயாம்பு,நாகு,கருப்பசாமிசங்கையா,,,,,,இன்னும் அவ்வப் போதுமாய் சேர்ந்து
கொள்கிற சிலர்,,,,,,என இருந்த நாங்கள் ஒன்றாக வேலை செய்கிற குழுவில்
காயாம்புவும்,கிட்ணண்ணனும்எப்போதுமேவேட்டிஅல்லதுகைலிதான்
ராமசாமியும்,ரெங்கனும் சங்கையாவும் ஏதாவது ஒரு அடர் கலரில் அணிந்த டவுசர் அல்லது கைலியுடன்
காணப்படுவார்கள்.
மம்பட்டி வேலையிலிருந்து களத்து வேலை வரை எல்லோருடைய கைகளும்
மனதும் கூலிக்காக நிற்கும்,ஊரின் வட கடைசியிலிருக்கிற முதலாளி தோட்டத்தில்
பாத்திகட்டிக்
கொண்டிருந்த ஒரு நாளில்ரெங்கனின் காக்கிக்கலர்டரவுசர் கிழிந்து போனது.துண்டைக் கட்டிக்கொண்டுதான்அன்றுநாள்முழுக்கவேலைசெய்தான்.
அதிலிருந்து காக்கிக்கலர்மீது ரெங்கனை விட எனக்கு அதிக வெறுப்பாகிப்
போனது, எடுத்தால் சிவப்பு ட்ரவுசர் அல்லது கைலியே என்கிற முடிவுடன்இருந்தேன்
பெரும்பாலுமாய்.
அப்படிஎன்னதான்பிடிப்புசிவப்புக் கலர் மீதுஎனத் தெரியவில்லை. அது அந்தக் கலரின் மீதிருந்த பிடிப்பா அல்லது அது இடுப்பைப்பிடித்து அமர்ந்திருக்கிற கச்சிதமா தெரியவில்லை.
அந்தக்கலர் ட்ரவுசர் அணிந்திருந்தவர்களையும் அவர்களின் நடையையும்
வெறிக்க, வெறிக்கப் பார்த்தவன் நாட்களின் நகர்தலொன்றில்
எப்படியாவது சிவப்புக்கலர் ட்ரவுசர் எடுத்து விட வேண்டு என என்கிற கனவில் இருந்தேன்.
“டேய் புடிடா கட்டுகள நான் வண்டி மேல நிக்குறேன்.நீ கீழயிருந்து கட்டுகள் தூக்கிப் போடு,நான்
வாங்கி அடுக்குறேன்.கட்டுகவண்டியிலநிக்குதாஇல்லையான்னு பாப்போம். எனச் சொல்லி வண்டியின் பைதாவைப்பிடித்து (சக்கரத்தைப்பிடித்து) அவர் மேலே ஏறிக் கொண்டி -ருந்த
நேரம்.அவிழ்ந்து போகிறது வானம்.
எள்ளுக்காய்ச்செடிகள்ஏற்கனவேபிசுபிசுப்புப்பானவையே/அதைஅறுத்துக்கட்டுவதற்குள்ளாக பெரும்பாடாய்ப்போய்விடும்.
எண்ணெய் வித்தைத் தருகிறசெடி எண்ணெய்யைப் போலவே பிசுபிசுக்கிறது.பண்ணரி -வாள்வைத்துசெடிகளை கொத்தாகப் பிடித்துஅறுக்கும் போதே உள்ளங்கையின்
வியர்வை பிசு பிசுப்பு செடிகளை அறுக்க விடாமல் பிசுபிசுத்து வழுக்கும்.அப்படியாய் வழுக்கிற செடிகளை இறுகப்பற்றி அறுத்துக் கட்டுப் போட்டு வண்டியில்
ஏற்றிக் கொண்டிருந்த வேளை மழை பெய்தால் எப்படியிருக்கும்?
பிசுபிசுத்த எண்ணெய்யுடனான கையில் தண்ணீர் ஊறிய மாதிரி
ஆகிப்போகிறது. லேசாக தூற ஆரம்பித்திருந்த மழை கொஞ்சம் கொஞ்சமாய்
கூடி கனம் கொள்கிறது.
பெய்ஞ்சிருச்சா மழை என்ற சலிப்புடன்
இறுகப்பற்றி கட்டுக்களின் மேலேறி நிற்கிறார் விடாப்பிடியாக வழுக்குகிற கைகளையும்,கால்கலையும் இறுகப்பற்றி தொற்றியவராக/
அடித்துப் பெய்கிறமழைக்கும்,பொய்த்துப்போகிறகால வெள்ளாமைக்கும் நடுவாய் நின்று போரிடுகிற குணமும்
பிடிவாதமும் அவர்களை இறுக்கம் கொள்ளச் செய்து விடுகிறது.
அப்படிக்கொண்ட இறுக்கம் கற்றுகொடுத்த
விடாப்பிடிதன்மைக்கு வாழ்க்கைப்பட்ட பிழைப்பு.
ஏறிவிட்டார் வண்டியின்மீது. வழுக்கிய காய்க்கட்டுகளைப்
பற்றியும், பதனமாகவும்/ லேசாக ஆரம்பித்த மழை தனது கனம் காண்பித்த
நேரத்தில் அடுக்கிய கட்டுக்களின் மேல் கயிறு போட்டு இறுக்கிக்கொண்டு வண்டியை பத்திகொண்டு
வருகிறோம்.
ஒற்றையடிப்பாதையது.கரிசல் மண் தரை.காட்டை விட்டு கடந்து விட்டால்
பாதைவந்து விடும் .கடினம் வாய்ந்த தரையில் வண்டி பதியாது.காட்டின்
நடுவில் இருந்த நாங்கள் மெதுமெதுவாய் ஊர்ந்து,ஊர்ந்து பாதையின்
தூரத்திற்கு பாதியை எட்டி விட்டோம்.
குட்டைக்காளைஎப்போதுமேஒத்துழைப்புத்தருவதுதான்.மயிலைக்காளையை மட்டும்நம்பி விட முடியாது.குட்டைக்காளை இடத்து மாடு,மயிலை வலத்து மாடு.நிதானிக்க முடியாது அதன் குணத்தை.ஒரு குனம் வந்தால் ஓடும்,பாரம் இழுக்கும் உழைப்பைக் கொடுக்கும், தன்னை முழுமையாய் அர்ப்பணித்து விடும் உழைப்புக்கு ஒரு குணம் வந்தால் படுத்து விடும்.
அப்படியெல்லாம் படுத்துவிடக்கூடாது என்கிற நினைப்புடனும் முடிவுடனும் பைதா பிடித்துத் தள்ளிக்கொண்டு வந்தவனாய்/
அப்படியெல்லாம் படுத்துவிடக்கூடாது என்கிற நினைப்புடனும் முடிவுடனும் பைதா பிடித்துத் தள்ளிக்கொண்டு வந்தவனாய்/
ஒன்று,இரண்டுமூன்றாவதுகாட்டைக்கடந்துகடந்ததும் வண்டிப்பாதை வந்து விடுகிறது.
யப்பா கொஞ்சம் நிம்மதி.செருப்பில்லாத கால்கள்,பிசுபிசுத்த மண்.என்னதான் தடம் பதிந்து கடினம் ஏறி விட்ட போதிலும் லேசாகத்தான் பதிந்தது வண்டியின்
சக்கரம். பைதாவை சுற்றியிருந்தஇரும்புப் பட்டையைக் காணவில்லை. தரை மறைத்துக் கொள்கிறது. இருந்தாலும் வண்டி நகர முடியாத அளவுக்கெல்லாம்
இல்லை.ஓடுகிறது.
வண்டியின் பின்னே நான்.பாரம் அதிகமாகி விட்டதாலோ அல்லது வண்டியின் பின்னே நான் நடந்து
வருகிறேன் எனிற நினைப்பினாலோ,,,,,,,,,,,மாடுகளின் பிடிகயிற்றை
தனது வலது தோளில் போட்டுகொண்டு வண்டியை ஓட்டிச்செல்கிறவராய் சித்தப்பா/
நாங்கள்போய்க் கொண்டி ருக்கிறோம்,மழை பெய்து கொண்டிருக்கிறது.மழையும் பெய்து கொண்டிருக்கிறது. நாங்களும் போய்க்கொண்டிருக்கிறோம்.
வண்டியின் முன்பாக
சித்தப்பா,பின்பாக நான்.இரண்டு பேருக்கு நடுவே பாரம் சுமந்த வண்டியும் அதை
இழுத்துகொண்டு சென்ற மாடுகளும்,நாங்கள் கடந்த பாதையுமாய் வந்து கொண்டிருந்த பொழுது
கனத்துப்பெய்த மழையின் ஊடாக பளிச்சென்ற ஒரு இளம் மின்னல்.வெட்ட வெளியில் இப்படி
ஒரு மின்னல்.பயம்கொண்டுவிடுகிறது மனது. கண்களை பொத்திக்கொள்கிறேன்.இதை
உணர்ந்தவராகவோ, நிதானித்தவராகவோ வண்டியை
நிறுத்திவிட்டு எனதருகாமையாக வந்து விட்டார் சித்தப்பா.வந்து எனது தோள் தொட்டு
உச்சி மோந்தவர் வண்டி மீது ஏறி அமர்ந்து என்னை வண்டியோட்ட சொல்லி விட்டு அவர்
பின்னால் நடந்து வருகிறார்.
8 comments:
தொடர் பதிவிற்காகக் காத்திருக்கின்றேன் அய்யா.
கற்பனை கலந்த அனுபவமா...?
சில இடங்களில் சிரமப்பட்டேன் புரிந்து கொள்ள
தொடருங்கள்
வணக்கம் ஜெயக்குமார் சார்,
நன்றி தஙகளது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் ஆத்மா சார்.நன்றி தங்களின் வருகைகும்,கருத்துரைக்குமாக/
இன்று வலைச்சரத்தில் உங்க பதிவை பகிர்ந்துள்ளேன்.வருக! கருத்திடுக!
மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.in/
எள்ளுக்காய், சிகப்பு டவுசர், இடி மின்னல் பயம், பரிவு வாழ்வியலை அழகாக எழுதுகிறீர்கள். எனக்கும் ஒரு சிகப்பு டவுசர் இருந்தது. அந்த ஞாபகம் இப்போது கண்முன்னே நிக்கிறது.
வணக்கம் உஷா அன்பரசு அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் விச்சு சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment