1 Jan 2013

வானவில்,,,,,


              
நினைப்பதுதான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,நடந்தேறி விடுகிறதா என்ன?

வேகத்தடைகள் தாண்டும் லாவகத்துடனும்,தடை தாண்டிப்போகிற வேகத்துடனுமாய் போக வேண்டும் என்று நினைப்பதுதான்.ஆனால் நடை முறையில்,,,,,,,,,,,,

ரயில்வேலைன்ராமமூர்த்திரோடு,கௌவர்மெண்ட்ஆஸ்பத்திரி.ஹெட்போஸ்ட்ஆபீஸ் வழியாகச் சென்று அல்லம்பட்டி முக்கு ரோட்டில் இருக்கிற கடையில் டீசாப்பிட்டு விட்டு வர வேண்டும். முடிந்தால் அங்கிருந்து சுற்றி வந்துமுதல் கேட்வழியாகவீடுவரவேண்டும் சைக்கிளில் என்பதுவே அவனது பல நாள் திட்டமாய் இருக்கிறது.

இதெல்லாம் முடியா விட்டால் கூட பரவாயில்லை.ராமமூர்த்தி ரோடுவரைசென்று அங்கு இருக்கிற  பாய் கடையிலாவது டீசாப்பிட்டு வரலாம் என்கிற நீண்ட நாள் திட்டத்தை செயல் படுத்த நீ,,,ண்,,,ட நாட்களாக மதுள் படம் வரைந்து பார்க்கிறான் முடியவில்லை.

ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இங்கிருந்து வடமலைக்குறிச்சி வரை சைக்கிளில் சென்று வந்தவன்தானே?இப்பொழுது உடல் பருத்து விட்டது.சுகம் கண்டு விட்டது.கைக்குப் பக்கத்தில் இருக்கிற கடைக்குக்கூட சைக்கிளில்சென்றுவர வருத்தமாயிருக்கிறது.வைத்து விட்டதொந்தியைகரைக்கவேண்டியும்,உடலில்சேர்ந்து கொண்ட சோம்பேறித்தனத்தை உதறி  விடவுமாய் இப்படிசைக்கிளிங்போகலாம் என நினைத்தான்,

தினசரியா அல்லது நாட்களின் நகர்வுகளில் தேர்ந்தெடுத்த தினங்களிலா?எதில் செல்வ -தானாலும் இவனுக்கு விருப்பமே/

அதற்காகமூத்தபையனின்சைக்கிளையெல்லாம்துடைத்துசுத்தம்செய்துவைத்திருந்தான்அவன் வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி கல்லூரி படிக்கிறவனாகிப்போன பின்பு அவனது சைக்கிள் சும்மாத்தான் கிடக்கிறது.ஆனால் அதில் ஒரு வம்பு இருக்கிறது. சைக்கிளை கிழக்கே மிதித்தால் மேற்கே செல்கிறது.

RR சைக்கிள் கடையில் கூட ஒரு பழைய சைக்கிளுக்கு சொல்லியிருந்தான்.இதுவரை அதுபற்றி அவர்கள் சொல்லவில்லை முதல் தகவலாக்க்கூட/ஆனால்ஒன்று தெளிவாகச்  சொன்னார்கள்.”முன்பு மாதிரி பழைய சைக்கிள் விற்பனைக்கு வருவது இல்லை” என.சரி இவர்களிடம் கதையாகாது என SRN சைக்கிள் கடையில் சொல்லி வைத்த இரண்டு நாட்களில் காயலான் கடையிலிருந்து தேடி எடுத்துவந்தது போல ஒரு சைக்கிளைக் காட்டினார்கள்.தலையில் அடித்துக்கொண்டான அவன்/(அவனது தலையில்தான்)

போன வருடம் இதே நாளுக்கு இரண்டு நாட்களுக்குமுன்புஒரு லேடிஸ்  சைக்கிள் 950 ரூபாய்க்கு வந்தது.வாங்கிப்போட்டிருக்கலாம்.பார்க்கவும் ஓட்டவும் நன்றாக இருந்தது. வாங்கவில்லை,பலகாரணங்களால் தட்டிப்போய்விட்டது.

சின்னசின்னப்பயல்களெல்லாம் ஸ்டைலாகசைக்கிள்ஓட்டுவதைப்பார்க்கும்போது ஆசையாகத் தான் இருக்கிறது,ஆனால் அவர்களைப் போல அவனது வயதில் இல்லாவிட்டாலும் ஏதோ கொஞ்சம் ஓட்டலாமில்லயா,,,,?

இப்போது நினைத்து என்ன செய்ய? வேண்டாம் எனச்சொல்லி விட்டு உரலுக்குள் தலையை விட்ட கதைதான்.அந்தக்கதையின் நீட்சியே இப்போது வேறு ரூபத்தில் தொடர்வதாக.

இரவு தூங்க ஆகிப்போகிற தாமதம் அவனை காலையில் அல்லது அதிகாலையில் சீக்கிரம் எழ விடாமல் பண்ணி விடுகிறது.அவனது மனைவி கூட நித்தம் சொல்லி அலுத்துப் போனாள்.காலையில் வெள்ன எந்ரிதிருச்சி எனக்கு வீட்டு வேலையில தாவது  உதவி பண்ணாட்டிகூட பரவாயில்ல.ஒங்க ஒடம்ப்பாத்துக்கவாவது வாக்கிங், எக்ஸர்ஸைஸ்ன்னு ஏதாவது பண்ணிக்குங்க என்பாள் .

அவளது சொல்லிலும்,செயலிலும் எந்தக் குற்றமும் இல்லை,அவதுகவலைஅவள் பாடு அவளுக்கு.

காலையில் எழுந்ததும் உடலில் இறக்கைகளை மாட்டிக்கொண்டு இயந்திரங்களாகிப் போகிற பெண்களுக்கு மத்தியில்  இவள் மட்டும் விதிவிலக்கா என்ன?இறக்கை கட்டிக் கொண்டுபறக்கிற,வதைபடுகிறவாழ்வின்மிச்சசொச்சங்களைஇதுமாதிரிகணவனிடமும், மகன், மகள்களிடமும்பேசுவதன்மூலம்தீர்த்துக்கொள்கிறவர்களில்அவனதுமனைவியும் ஒருத்தியாய்/

55 ரூபாய்க்கு வாங்கிய ப்ளாஸ்டிக் குடத்தைஇரண்டுவருடங்களாகவைத்து பாதுகாத்து வருகிறாள்.கோடு போட்ட குடங்கள்அவை,ஒன்றுபச்சையில் கோடிட்டது, ஒன்னொன்று  சிவப்பில்.மேலே பரணில் இன்னமும் இரண்டு கிடக்கிறது.வெளிர் பச்சையில் ஒன்றும், இளம் மஜ்சள் நிறம் காட்டி மற்றொன்றுமாய்.இவைஇரண்டும்கோடுகளற்றுவெறும் அடர் நிறம் காட்டுபவையாகவே/

நன்றாயிருக்கிறதே ஞாயம். நான்கும் ஒன்று சேர்ந்து அடுத்தடுத்து வாங்கியதுதானே அதில் இப்படி இரண்டைஓரம்கட்டிபரணிலும்,இரண்டை மட்டும் புழக்கத்தில் வைத்திருப்பது எந்த விதத்தில்ஞாயம்எனஅவைகள் கேட்டிருக்கக்கூடும் அவைகளுக்கு வாய் இருந்திருந்தால்,,,,,,? என்கிற நினைப்புடன் படுக்கச்செல்கிறேன்.

எது செய்தாவது இந்த தொந்தியை குறைக்க வேண்டும்.அதற்காக நாளை அதிகாலை எழுந்து சைக்கிளிங் போக வேண்டும் என்கிற நினைப்புடனாய்/

9 comments:

 1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
 2. பதிவைத் துவக்கியவிதமும் தொடர்ந்த விதமும்
  முடித்த விதமும் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வணக்கம் ரமணி சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வணக்கம் அவர்கள் உண்மைகள் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. சைக்கிளிங் போனால் வயிறு குறைந்துவிடும் என்று நினைப்பது நல்லதுதான், உடற்பயிற்சி செய்தால் இன்னும் நல்லது. அல்லது அவரது மனைவிக்கு தினமும் உதவி செய்யலாம் அல்லவா.

  அருமையா எழுதி இருக்கீங்க, வாழ்த்துகள்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. சைக்கிளிங் செல்வதைவிட மனைவிக்கு உதவினால் உடற்பயிற்சியுமாச்சு, உங்கள் மனைவியின் புன்னகையையும் ரசிக்கலாம். இரட்டை பரிசு...

  ReplyDelete
 8. வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. வணக்கம் செம்மலை ஆகாஷ் சார்,நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete