பையிலிருந்து உருண்டு தரை
தொட்டவடை பாய் கடையில் வாங்கியதாய்/
வடையை சுட்டவர் தியாகராஜன் மாஸ்டராயும்
மாவாட்டியவர் ரோஸியக்காவுமாக/
பெரியசாமி கடையில் வாங்கிய
கடலை எண்ணெயும்,
அம்மா கடையில் வாங்கிய வெங்காயமும்,
கருவேப்பிலையும்,மிளகாயும்
பஜாரில் வாங்கிய அரிசியும்,பருப்பும்
சம அளவில் கலந்து அரைத்தெடுத்து
சுட்டவைகளை வாங்குபவர் கையும்,
விற்பவர் மனதும் நூழிலையில்
வித்தியாசப்படுவதாகவே உணர்கிறேன்.
No comments:
Post a Comment