25 Jan 2013

சங்கடங்கள் நெளிகிற தருணம்,,,,        
உடைந்துசிதறியகண்ணாடிக்கிளாஸின்துண்டுகள்நாலாபுறமும் சிதறித்தெறித்தோடி காட்சிப் படுபவையாக/

கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு  என எந்த திசையில் கரம் நீட்டியபோதும்சரி, அல்லது காலை அகட்டி வைத்த போதும் சரி.அவ்வளவுக்குள்ளாக சிறியதாய் காட்சிப்பட்டுத் தெரிகிற கடையது.சின்னதாய் தீப்பெட்டி சைசில் எனச்சொல்லலாம்.

அதிமுக்கியமாய் தென்படுகிற சாலையின் வலப்புற திருப்பத்தை ஒட்டி அமர்ந்திருக்கிற கடையது. மாலைநேரம்நான்சென்றவேளை.பொதுவாககொடுக்கிறகாசுக்குவாங்குகிற டீயை  நான்கு அல்லது ஐந்து மடக்குகளில் குடித்து விட்டுகடையைவிட்டு”யூடேர்ன்" அடித்து வருகிற ரகத்தில் இருந்திருக்கவில்லை நான்.

அந்த டீக்கடை,உழைப்பைஅதன்ஆத்மார்த்தத்தையும்மனதில்ஏந்திக்கொண்ட உழைப்பின் மக்களை தன்னகத்தே இருத்தி வைத்திருக்கிற பகுதியது.

வழிகிற வியர்வையை தனது உடலின் வரிகளாக்கிக்கொண்டவர்கள் சூழ்ந்து நிற்க நடுவாய் நீள்கிற டீக்கிளாஸ் நிரப்பட்ட திரவத்துடன் கொடுக்கிறவரின் கைக்கும், வாங்கிறவரின் கைக்குமாய் உரையாடுகிற அல்லது உறவிடுகிற நேரமாய் அமைந்து போகிற ஒரு மாலைநேரப் பொழுதில் நான் போயிருந்தேன் அங்கு.

டீ மாஸ்டர் வலப்புறமும்,டீக்குடிப்பவர்கள் இடப்புறம் நீண்டிருந்த பெஞ்சிலுமாய் அமர்ந்திருந்தஅந்ததீப்பெட்டிக்குள்நான்உள்ளே செல்வது கடினம் அல்லது உசிதமல்ல  எனப் பட கடையின்வெளியேயேஅடைகொண்டவனாய்நின்றுகொண்டுடீக்கு சொல்கிறேன்.நான் டீக்கு சொல்லும் முன்பாகவே அவர் சரி என தலையாட்டுகிறார்,

என்னுடைய கேட்டலும் அவருடைய வனிப்பும் ஒரே நேர்கோட்டிலும் ஒரே புள்ளியிலும் சந்தித்திருக்கும் போலும்.இது மிதந்து செல்கிற வேளையில் அதுவும் அது மிதந்து வந்த வேளையில் இதுவுமாய் நேர் கோட்டில் முத்தமிட்டிருக்கலாம் என்பதாகவே நினைக்கிறேன்.

பத்து பேர் வரை இருக்கலாம்.சிலர் டீக்குடித்துக் கொண்டிருக்க சிலர் டீவாங்கிக் கொண்டிருக்க இன்னும் சிலர் சொல்லியடீக்காய்காத்துக் கொண்டிருந்த அந்த பொன் மாலை வேளையில்தான் எனது நுழைவு அங்கு.

விளிம்போரம் நெளிந்து தெரிகிற ஈயத்தட்டில் பரப்பப் பட்டுதெரிந்த நான்கைந்து வடைகளில் ஒன்றை எடுத்து சாப்பிடுவதா அல்லதுவடைத்தட்டைதாங்கி நின்றதாய் காட்சிப்பட்ட வரிசையான இரண்டு மூன்று பாட்டில்களில் அடைபட்டுத் தெரிந்த முறுக்கு,கடலைமிட்டாய்,கடலைப்பருப்பு,இதில்ஏதேனும்ஒன்றைவாங்கிச் சாப்பிடலாமா  என நினைத்த வேளையில் என் நாவும் ஆசையும் சுமந்து போட்ட ஓட்டு வடைக்காகவே இருந்தது.

ஒரு உளுந்த வடையைஎடுத்துகடித்தவேளைசொன்னடீகைக்குவர காத்திருக்கிறது. மாஸ்டர் நீட்டிய கரத்திலிக்கிற கிளாஸ் என் கையைக்கவர ஆசைப்பட்டு வாங்கி கொள்கிறேன்.நாவின் சுவையறும்புகள் தூண்டப்பட/

மற்ற,மற்றதைபோலல்லாமல்அந்தக்கடையில்டீகொஞ்சம்நன்றாகஇருக்கும்.அதுதான்  அங்கு அடிக்கடி படையெடுத்து பயணிக்க வைக்கிறதின் ரகசியமாய் அமைந்து
விடுகிறது.

பஜார்ப் பக்கம் போனால் அவரது கடை,அதை விட்டால் அதோ தெரிகிறதே தூரமாய் அவரது கடை என இருவரில் யாரவது ஒரு கடையில் நிற்பதும் டீக்குடிப்பதும் உறுதி.

வலது கையில் வடை.இடது கையில் டீ.ஒரு கடி,ஒரு குடி,,,, என்கிற சொல்பதத்தைத் தாண்டி அவசர,அவசரமாய் வடையைமென்றுவிழுங்கிவிட்டு டீயைக்குடிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தவேளையில்உள்ளே அமர்ந்து டீக்குடித்துக் கொண்டிருந்தவர்களில் மூன்று பேர் எழுந்து விட அந்த இடத்தில் ஆசுவாசமாய் அமர்ந்து டீ சாப்பிடலாம்  என கடையினுள்ளே நுழைகிறேன்.

இரண்டு படியேறி உள்ளே நுழைந்து பெஞ்சில்அமரலாமெனநினைக்கிற வேளையில் எனது இடது தோளில் தொங்கிய கைப்பை அங்கு டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கிளாஸ்களுள் ஒன்றை தட்டிவிட்டு விடுகிறது தன் மென்மைத்தனம் காட்டி.

கீழே விழுந்த  கிளாஸீம் திசைகொன்றாய் வஞ்சகமின்றி தூள்பறந்து காட்சிப் படுகிறதாய்/

நல்ல வேளையாய்டேபிளின்மீதிருந்தகிளாஸ்கள்அத்தனையும்விழுந்து விடவில்லை, மூன்றில் ஒன்று என்பது பரவாயில்லை என்ற போதும் கூட அது ஒரு பரபரப்பையும் பதட்டத்தையும் விதைத்து விட்டுச்சென்று விடுகிறது.  “அடடா, ஐய்யையோ, பாத்துப் -போகக்கூடாதா,பைய்ய இங்க வச்சிட்டுப் போகவேண்டியதுதானே?” என கொஞ்சம் கோபமும் எரிச்சலுமாய் வழக்கமானவார்த்தைகளுடனுமாய்நெசவுபட்டுத்  தெரிந்த சொல்லாடல்களுக்கு மத்தியில் அவர் விழுந்து உடைந்த கிளாஸ்களின் நொறுங்கல்களை தனதுச் செருப்புக் கால்களால் ஓரம் தள்ளிவிட்டுநீங்க உக்காருங்க என்கிறவராய் சொல்லிச் செல்கிறார்.

அவர் சொன்னச்சொல் என்னில்  தங்கியிருக்க அதை தாங்கி ஏற்றவனாய் சற்றே சங்கடம் மேலிட கொடுத்த டீயை குடித்தவனாய் வருகிறேன்.கடையில் விழுந்து  நொறுங்கிய  டீக்கிளாஸின் சிதறல்கள் என்னில் உருவம் காட்டியவாறு நின்றிருந்த வேளையிலும், பொழுதுகளிலுமாய்/

க்ளாஸ்கள் உடைபடாத டீக்கடைகள் அரிதுதான்என்கிறபொழுதிலுமாய் உடைபட்ட கிளாஸின்சிதறல்கள்ஏற்படுத்திவிட்டசங்கடத்தைப்போக்கடீக்கடைநோக்கி செல்ல வேண்டும்  திரும்பவுமாய், போய் முதல் வேளையாக டீக்கடை உரிமையாளரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இதோ வருகிறேன் தோழர் உங்களிடம் மன்னிப்புக்கேட்க/ மன்னிப்புக்கொடுப்பீர்களா?

2 comments:

  1. அப்ப இன்னும் மன்னிப்பு கேட்கலயா?சுடச்சுட பிளேன் ரீயும் வடையும் சுவையோ சுவைதான்.

    ReplyDelete
  2. வணக்கம் சித்தாரா மகேஷ் அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

    ReplyDelete