குடித்து முடித்த தேனீரின் சுவை
இன்னும் நாவின் அடியில் ஒட்டிக்கிடப்பதாகவே/
நான் சென்ற வேளை எனக்கான
தேனீரை கொடுத்து விட்டு
அடர் நிறத்தில் உள்ள பனியனை
ஒரு கோப்பை தண்ணீரில்
முக்கியெடுத்து அலசுகிறார்.
உடம்பில் போட்டால்
வயிற்றுக்கு மேல் வந்து விடுகிறது.
உடலை இறுகப்பற்றி இம்சை செய்கிறது
ஆகவே அழுக்குத்துடைக்கப்
போட்டு விட்டேன் என்கிறார்.
தண்ணீரில் முக்கியெடுத்த
கலர் பனியனில் ஆங்காங்கே
அழுக்கும் வெண்மைத்திட்டுகளுமாய்
மாவு படிந்து காணப்பட,
பனியனை அவர் கையிலெடுத்து
உதறிய வேளை நான்
கடையை விட்டு வெளியே வருகிறேன்.
7 comments:
Nice
வணக்கம் வேல் முருகன் சார்.நன்றி
யதார்த்தக் கவிதை. நன்றி அய்யா
நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்,தங்களது மேலான வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
பார்வைகளின் வித்தியாசம்
வணக்கம் எழில் மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் எழில் மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment