11 Feb 2013

மலர்முகம்,,,,,,,


                          
அந்த சந்தில்தான் மனோகரியக்காவின் வீடு இருந்தது. ஒண்டுக்குடித்தன அளவில் இல்லா
விட்டாலும் கூட பெரிய வீடும் இல்லை.

வாடகை வீடுதான்.மாடிப்போர்ஷன் அது.படியேறியதும் விரிகிற ஹால்,சமையலறை, சமையல் அறையை ஒட்டியேஇருந்தலெட்ரின்,பாத்ரூம்என்கிறதாய்வரைந்துஅடுக்கப்பட்டுத் தெரிந்தது.

வீட்டின்சொந்தக்காரர்கூடஅடிக்கடிசொல்லுவார்வாடகைவசூலிக்கவராததினங்களிலும் கூட/ இந்தவாடகையிலஇந்தமாதிரிஅமைப்பாஒருவீடுஇந்தஏரியாவுலகெடைக்காதுமாஅதுக்காகவே  நீங்க நூறு,யெறநூறு வாடகை கூட்டிக்குடுக்கணும் பாத்துக்கங்க” எனச் சிரிப்பார்.

சுவரில்அடிக்கப்பட்டிருக்கிற ஐவரிக் கலரின்பெயிண்ட்உதிர்வைக்காட்டி“கூடிய சீக்கிரம் வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சிருவம்மா” என்பார் “போனமாசமே நெனைச்சேன், பெரியவளுக்கு  படிப்பு செலவுஹாஸ்டல்செலவுன்னு போயிருச்சுமா,என்ன செய்ய?படிக்க வச்சுட்டம், அதுவும்  எஞ்ஜினியரிங்,காலேஜூ,காசு தண்ணியா கரையுது. என்னத்தயோ ரெண்டு படிக்க வச்சுட்ட -ம்னா வேலைக்குபோறாளோ இல்லையோ,கட்டிக்குடுக்குற யெடத்துல கௌரவமா இருக்குமா இல்லையா அதுக்குத்தான் இத்தன பாடும்.நீங்களும் பொம்பளப்புள்ள வச்சிருக்கீங்க, என்ன படிக்கிறா, நல்லா படிக்கச் சொல்லுங்க, அந்தக்காலம் மாதிரி இல்ல என, இந்தக் காலத்துல அவுங்கபடிப்பும்முன்னேத்தமும் முக்கியமாஇருக்குஆமாம்” என நிறைய பேசியவாறும் சிரித்த வாறுமாய் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டுப் போவார்.

வம்பாகக் கொடுத்த போதும் காபி,டீயெல்லாம் வேண்டாம் எனசொல்லி  விடுவார். அவர் போகும்போது மனோகரியக்கா வைக்கிற கோரிக்கைக்கு கண்டிப்பாக செவி சாய்க்க மறக்க மாட்டார்.

எங்களது தெருவுக்கு அடுத்த தெருவில் இருந்தசந்துஅது.அந்தச்சந்துவழியே போனால் மெயின் ரோட்டுக்குச்சென்று விடலாம்.

நீண்டதானசந்துஅது.ஒருமுப்பதுஅல்லதுநாற்பதடிநீளம்இருக்கலாம்.சந்தின்ஆரம்பத்தில்
இடதுபக்கமாய்ஒருவீடுஅதற்கடுத்துஇருந்தவெற்று வெளிதாண்டி வலதுபக்கமாய் மனோகரிய -க்காவின் வீடு இருந்தது.

ஈர மண் பூத்திருந்த வீதி அது,எந்நேரமும்பார்ப்பதற்குஈரமாகவும்சுத்தமாகவும் இருக்கிற வீதி அது.சந்தையடைத்து   கோலம் போட்டு வைத்திருப்பாள்.

அதிகாலை ஐந்தரை ஐந்துக்கெல்லாம் முழிப்பு வந்து விடுகிற நாட்களன்றில் வந்து விடுகிற டீ ஆசையை தணிக்க அந்த சந்துவழியேதான்அவன்டீக்கடைக்குச் செல்வான்.

டீக்கடையா அல்லது அது பெட்டிக்கடை என முதலில் யாரையாவது வைத்துக்கண்டு பிடிக்க வேண்டும்.தொந்தி பெருத்த பெரியவர் விடாப்பிடியாய் டீப்பட்டறையின் முன்பு நின்று கொண்டு கிக்காய் ஒருடீப்போடுகிறகாட்சியைகாண்பதற்காகவாதுஅந்தஅதிகாலை நேரங்கள் அவனுக்கு உதவியிருக்கின்றன  பெரியதாக.தவிர மனம் பிடித்துப் போன பெரியவர் அவர். அன்பும், பிரியமும்,வாஞ்சையுமாய் பேசுகிற அவரைப்பற்றி பேசுகிற கணங்களில் மனோகரியக் -கா சொல்வாள், “பாத்துருக்கேன் அவர,அவருக்கு இப்பயெல்லாம் இருந்தா எங்க அப்பா வயசு இருக்கும்.அவரும்இப்படித்தான்யாருகையையும்  எதிர்பாக்கமாட்டாரு முடிஞ்ச வரைக்கும்  சொந்தக்கால்ல நிக்கணுன்னும்வாரு.அப்பிடியே  நிக்கவும் செஞ்சாரு,”

“அவரு ஒரு டைப்புப்பா  கூலி வேலை பாத்தாக்கூட அவருக்குன்னு ஒரு ஒழுங்கு இருந்துச்சி. கறி புளி பெழக்கம் கெடையாதுதண்ணிவெண்ணிகெடையாது,அந்த சொக்கலால்   பீடிய மட்டும் விடாமமடியிலகட்டிக்கிடுத்திரிவாரு, அவருவேல பாக்குற மில்லுல ஒரு தடவ ஸ்ட்ரைக்குன்னு,மில்லுக்கு வெளிய உண்ணாவெரதம் இருக்காங்க, இவரு ஒருவாரமா வீட்டுப் பக்கமே  வரல,வீட்டுக்கும் ஒரு தாக்கலும் இல்ல,மில்லுல ஸ்ட்ரைக்குன்னு மட்டும் தெரியும், மத்தபடி அவரு எங்க இருக்காரு,என்ன செய்யிறாரு, எது பத்தியும் தெரியல. நான்தான் போனேன் அவரத்தேடி/

நல்லாஇருந்தாஅப்பயெல்லாம்நான்ஓன்இடுப்புஒயரம்தான்இருந்திருப்பேன்.மில்லுக்குப் போற  வழியும் தெரியாது. எப்பயோ ஒருக்கா அப்பாகூட சைக்கிள் பின்னாடி உக்காந்து போயிருக்கேன்.அது ஞாபகம் வர அப்பிடியே அங்கன போயி அப்பாமடியில போயி விழுந்துட்டேன். அவ்வளவு கூட்டத்துலயும் என்னயை தூக்கிவைச்சுட்டுகண்ணீரு விட்டாரு,  ஆளே உருக்குலைஞ்சு மெலிஞ்சு போயி நிக்குறாரு. மெகமெல்லாம் ஒரேதாடி .எனக்கு நெனைவு தெரிஞ்சு அவர அப்படிபாத்ததில்ல,வாரத்துலமூணுநாளுஷேவிங் பண்ணீருவாரு. பாக்குறதுக்கு மழு மழுன்னு பளிச்சின்னு   இருக்கும்  அவரு மொகம், ஒருபவுடர் பூச்சு கெடையாது,ஒருமேக்கப்கெடையாது.அவருஎங்கூட பேசிகிட்டிருக்காரு. கண்ணீரு தாரை தாரையாவழியுது,நான்கண்ணீரஏங்சின்னக்கையாலதொடைக்கிறேன்,அவருகண்ணுஅதையும் மீறி கண்ணீர்  வடிக்குது.அன்னைக்கு அவரு சொன்னது இன்னைக்கும் ஏங்மனச விட்டு  மறையல/மில்ல மூடப் போறங்கமா நம்ம பொழப்பு நடுத்தெருவுக்கு வரப்போகுதும்மா ன்னாரு. அவரு அப்பிடி சொன்ன ஒரு மாசத்துல மில்ல மூடிட்டாங்க, பொழப்பு நடு வீதிக்கு வந்துருச்சி, / 

மில்லுல அவுங்க யூனியன்ல இருந்தவரு.வேற வேலை தெரியல அவருக்கு,ஒடம்பு வளைஞ்ச அளவுக்கு மனசு வளையல/வேற எங்கனயும் வேலைக்குப் போறதுக்கோ இல்ல ஒருத்தர் கிட்டப் போயி கைகட்டி நின்னு உத்தியோகம் பாக்குறதுக்கோ மனசு ஒத்துவரல.

தினசரி பேப்பர் போட ஆரம்பிச்சாரு.அப்பயெல்லாம் வீடு பூராம்கட்சிநோட்டீஸாத்தான்  கெடக்கும்.வீட்டுக்குவெளியிலஎந்நேரமும்ஏதாவதுஎழுதிதட்டிபோர்டுசாத்திவச்சிருப்பாங்க/  எந்நேரமும் தோழர்களும் நண்பர்களுமா வீடே களைகட்டித்தெரியும்.என்னஇப்படி பொம்பளப் புள்ள இருக்குற யெடத்துல கொண்ணாந்துக்கிட்டு கட்சிவேல பாக்குறேன்னு எந்நேரமும் வயசுப்பயல்க வீட்டு முன்னாடிகும்பலா இருந்தா என்ன அர்த்தம்ன்னு அம்மாதான் கெடந்து சத்தம் போடும். அப்பா சொல்லுவாரு அதுக்கு ”ஏய் சும்மா இரு நீ, நம்ம இப்பிடியே நாள்க் கணக்குலநம்மபொண்ணவிட்டுட்டுவெளியூருபோயிட்டு வந்தாக் கூட அவங்க பத்தரமா பாத்துக்குருவாங்க.அந்த நம்பிக்கைக்கு எந்தபங்கமும் வந்துராது.  அதுக்கு நான் முழுப் பொறுப்பும்பாரு.அந்தளவுக்கு எங்க வீட்டுக்கு வந்த தோழர்கள நம்புவாரு,இத்தனைக்கும் இவரு நாப்பது தாண்டி நிக்கிறாரு,அவுங்க எல்லாம் வாலிபப் பசங்களா/

எங்க வீட்டுக்கு எதுத்தாப்புல இருந்த ஆனந்தா ஹோட்டல் மட்டும் இருந்துருக்காட்டி தோழர்க பாடு ரொம்ப செரமம்.அவுங்களுக்கான சாப்பாடு, டீக்கெல்லாம்  அவுருதான் ஒட்டு மொத்தக் கட்டுக்குத்தகை/ ஏதாவது ஒருவேலஎதுசம்பந்தமாவது நடந்துக்கிட்டே இருக்கும்.

தட்டிபோர்டுஎழுத,போஸ்டர்ஒட்ட,கொடி கட்ட  தோரணம் கட்ட,,,,,,,, இப்பிடி ஏதாவது ஒன்ன சொமந்துக்கிட்டேதிரிஞ்சஎங்க அப்பாவுக்குத் தொணையா,தோளோடுதோளா நின்னாங்க தோழர்க,எல்லாம்அந்தஏரியாக்காரவுங்கதான்,சுத்திச்சுத்தி அவுங்க வீடுகளெல்லாம் அங்கன தான் இருந்தப்பயும் கூட ஏதாவது வேல நடக்குற தெனங்கள்ல ஆனந்தா ஹோட்டல்தான்  அவுங்ளுக்கு வயித்தாதரவு.

அவுங்களையும் சும்மா சொல்லக்கூடாது. அப்பாவ தோழர் தோழர்ன்னு சுத்திச் சுத்தி வருவாங்க/

அதுஒருநேரம்.அப்பிடியெல்லாம்இருந்தப்பவீட்லசாப்பாடுக்குவழியில்லாமஇருந்துருக்கோம்.  செலவுக்கு பணம் இல்லாமகையப்பெசஞ்சிக்கிட்டுநின்னுருக்கோம்.ஒருதடவைன்னா எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு.கௌவர்மெண்டுஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு  போயிருக்குறாரு எங்ப்ப்பா.நடுச்சாமம். பையங்க யாரயும்கூப்பிடமுடியல/கையில பைசா இல்ல.விசயம் கேள்விப்பட்டு வந்த ஆனந்தா ஓட்டல் ஓனர்தான் எங்க அப்பாவ ரெண்டு சத்தம் போட்டுட்டு கூப்புட வேண்டியதுதான எங்களயெல்லாம் நாங்கஎன்ன அந்தளவுக்காதூரமா போயிட்டோம் -ன்னு  வருத்தப்பட்டவருஎங்கஅப்பாகையிலவம்படியா பணத்தக் குடுத்துட்டு போயிருக்காரு. இதெல்லாம்எனக்குத் தெரியாது,  கண் முழிச்ச பின்னாடி எங்க அப்பா சொல்லிச் சொல்லி கலங்குனாரு.இப்படியெல்லாம் மனுசங்க இருக்காங்க தெரிச்சுக்க அப்பிடிங்குறமாதிரி/

இப்ப அவுங்க ரெண்டு பேருமே இல்ல, அன்னைக்கு வாலிபப் பசங்களாத்தெரிஞ்சவுங்க இன்னைக்கு அவுங்க பொண்டாட்டிபுள்ளைகளோடஇருக்குறதஎங்கயாவது எப்பவாவது பாக்க முடியுது,

அவுங்கள்ல சில பேர் பேசுவாங்க,சிலபேர் பேசாம போயிருவாங்க,எதுக்குவம்புன்னு கூட இருக்கலாம். நானும் கல்யாணம் பண்ணி இங்கேயேவந்துட்டேன்.அதையெல்லாம் இப்ப  நெனைச்சாலும் சந்தோசமாஇருக்குடா,ஆனா ஒண்ணு அப்ப பணம் காசு இல்லாம இருந்தப்ப இருந்த சந்தோசம் இப்ப இல்ல என்றாள்.

டீக்கடை பெரியவர பாக்கும் போதெல்லாம்ல்லாம்  எங்க அப்பா ஞாபகம் தான் வரும். என மனோகரியக்கா அடிக்கடி சொல்வதும் அவன் கேட்பதும் வாடிக்கையான ஒன்றுதான் என்ற போதும் அவள்அவளது அப்பாவைப் பற்றிசொல்கிறஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமான தோற்றமும் பரிணாமும் கிடைத்திருக்கிறது.

இவ்வளவு பேசுகிற அவளேதான் சொல்வாள் சரிசரி பேச்சு வாக்குல,கோலத்த மிதிச்சிட்டுப் போயிறாத என/

இப்பிடி தெருவ அடைச்சு கோலம் போட்டு வச்சிருந்தா எப்பிடி கோலத்த மிதிக்காம போறது?,

ஏன் மிதிக்கணும் இப்பிடி ஒரு ஓரமா ஒதுங்கிப்போ,அது கூடயா சொல்லிக்குடுக்கணும் ஒனக்கு?

சொல்லிக் குடுக்குறதெல்லாம் இருக்கட்டும் ஒருபக்கம், இப்பிடிதெருவ அடைச்சு கோலம் போடுறத நீங்க விடப்போறதில்ல,நானும் இங்கிட்டு நடக்குறத நிப்பாட்டப் போறதில்ல என சொல்லிக் கொண்டே தினசரி அந்த சந்து வழியாகவும் மனோகரியக்காவின்  வீட்டை பார்த்தவாறுமாய் கடக்கிறான்  அந்தப் பாதையை/

9 comments:

 1. தொடர்வதை தொடர்ந்து ரசிப்பது ஒரு கலை...

  ReplyDelete
 2. எளிமையான எதார்த்தமான மனிதர்களின் வாழ்க்கை. அருமை சார்

  ReplyDelete
 3. மனித வாழ்வியலைச் சொல்லிச் செல்லும் யதார்த்த கதை....

  ReplyDelete
 4. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வணக்கம் பாலா சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. வணக்கம் வேல் முருகன் சார். அருமையான பதிவுஎன்பதை இப்படியான
  ஒரு எழுத்தில் கூறியிருக்கிற தங்களுக்கு நன்றி.

  ReplyDelete