17 Feb 2013

பனிக்குல்லா,,,,,



                             
தூக்கம் கெடுத்து விட்டேன் ஸாரி.கொடியில் தொங்கிய குல்லாவை தேடி வீடு முழுவதுமாய் அலசிய போதும் கூட கண்ணுக்குத் தெரியாமல் போய்விட உன்னை எழுப்ப வேண்டியதாகிப் போகிறது.

பண்ணிரெண்டு மணியின் இரவுப்பொழுதது. அப்போது தான் தூக்கம் விழிகளை இழுக்க கண்ணயரப் போகிறேன்.கொஞ்சம் குளிர்வது போல் உள்ளது.நான்எனதுமனைவிமற்றும் மகன்  மூவரையும் உள்ளிழுத்து வைத்திருந்த வீடு அது.

மிக்கேல் தோழர் அடித்த பிங்க் கலர் பெயிண்ட் காட்டியசுவர்கள் வீட்டை அழகு படுத்திக் காட்டியது.

சமையலறை ,ஹால்,வராண்டா,ரூம்இவை எல்லாற்றிற்குமாய்  ஒரே நிறம்தேர்ந்தெடுத்து வாங்கி வந்தவரும் பெயிண்ட் அடித்தவரும் அவரேயாகிப் போகிறார்.

நல்ல தொழில்க்காரர்.அவரின் கை வண்ணத்தையும் தொழில் நேர்த்தியையும் பேசிய சுவர்கள் என்னைப்பார்த்து கையசைத்தாயும்,கண்ணடித்ததாயும் தெரிய பதிலுக்கு நானும் இரண்டும் செய்து விட்டு தூங்கப்போகலாம் என எத்தனிக்கிறவனாய்.

இதில் அதிமுக்கியமானதொரு விஷயம் தண்ணீர் குடிக்கவேண்டும், இல்லையெனில் உடல் விஞ்ஞானம் கோபிக்கக் கூடும்.அப்புறமாய்,,,,,,,,,,,,,,,,,,,,,,சார் வையக்கூடும்.அவர்ஹோமியோபதி மருத்துவம் கற்றவர். வம்பு எதற்கு?

”ஆணாய்பிறப்பெடுத்துவிட்டாலேகடைசிவரைவசவுதாங்கித்தான்ஆகவேண்டும்போல்
இருக்கிறது.சிறுபிள்ளையாய் இருக்கையில் பெற்றோர்களிடம், பள்ளியில் படிக்கையில்  ஆசிரி -யரிடம், வேலைக்குச்சேர்ந்ததும்அதிகாரிகளிடம்,திருமணமானதும் மனைவியிடமும், பிள்ளை -களிடமும்எனமாற்றிமாற்றிவசவுவாங்கிஉள்வைத்துக்கொள்கிறலாக்கராய்ப் போய்  விடுகிறதே  மனது” என்கிற யோசனையுடன் தண்ணீரைக் குடித்து விட்டு லேசாக உடல் நடுக்கிய குளிருக்கு பனிகுல்லாவை மாட்டினால் நன்றாக இருக்கும் எனத் தேடுகிறேன்.

ஓடுகிற மின் விசிறியின் விசையை நிறுத்தினால் குளிர் கொஞ்சம் மட்டுப்படும்.ஆனால் மின் விசிறியை நிறுத்தினால் கொசு ரீங்காரம் பாட ஆரம்பித்து விடும்.தூக்கம் கலைந்து மகனும் எழுந்து விடுவான்.சென்ற வாரம்தான் புதிதாய் கண்டன்சர் மாற்றிய காற்றாடி அது.அது மாட்டிய மறு கணத்திலிருந்து இப்படித்தான் வேகம் பிய்த்தெடுத்து ஓடுகிறது. விட்டால் சுவற்றிலிருந்துபிய்ந்தெழுந்துவந்துகால்முளைத்துஓடிவிடும்போலிருக்கிறதே காற்றற்ற திசை --களில்  அல்லது வீடுகளில் காற்று வழங்க/

வீட்டிற்கு வெளியே மின் கம்பத்திலிருந்து வீட்டிற்கு இணைப்புக் கொடுக்கிற மின் வயர்கள்  இரண்டு பிரிந்துதொங்குகிறது.அதைசரிசெய்யவேண்டும்.வீட்டிற்குவந்த எலெக்ட்ரீசியன் 600 ரூபாய் வரை ஆகும் அதை மாற்ற என்றார்.அவர் சொல்வதிலிருந்து கூட ஒரு நூறு ,இருநூறு சேர்த்துக்கொள்ளவேண்டும்.எப்போதுமேஅதுதானேகணக்குசரிஎன்ன செய்ய?அப்படித்தான்.

வீட்டின் பின்னால் செப்டிக் டேங்கிலிருந்து கசிகிறநீர்அங்கேயேதங்கிஅசிங்கம் பண்ணி விடுகிறது. அதற்கும் ஒரு வழி பண்ண  வேண்டும். நாளை காலை எழுந்ததும் முதல் வேளையாக தண்ணீர் லாரி தேடிப்போய் தண்ணீர் பிடிக்க வேண்டும்.நேற்று எங்கள் தெருவுக்கு வர வேண்டியதண்ணீர் லாரி தவணை தவறிப் போனதாய் அறிந்தேன். நாளை வந்தால் சரிஇல்லையெனில்  சைக்கிளில்  குடத்தைக் கட்டிக் கொண்டு லாரி தேடி  அலைய  வேண்டும்.  தண்ணீருக்குகான அலைச்சல் வாழ்நாளின் பாதியை சாப்பிட்டுவிடும் போல்
இருக்கிறதே( “ஆனால் அந்த தண்ணீர் தடங்கலில்லாமல் கிடைப்பதாக அல்லவா சொல்கி -றார்கள்”).

என்னை சென்னைக்கு கூப்பிட சுந்தர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பார் எனத் தெரியவில்லை.ஒரு வேளை அவரும் குல்லா தேடிக்கொண்டிருக்கலாம். குல்லா தேடுகிற இரவு மனிதர்களா நாம்.சொல்லுங்கள்,,,,,,,,,,,சார்.போகலாம்தான் சென்னைக்கு, கொஞ்சம் விட்டுவிடுதலைஆன மாதிரி இருக்கும்.புதுமண்,புது மனிதர்கள்,புது வாசனை என பார்த்து விட்டு வரலாம். கம்ப்யூட்டர்,கணக்கு வழக்கு,கூட்டல்,கழித்தல், மண்டைக் காய்ச்சல், வேலை, டென்சன்,,,,,,,, என்பதிலிருந்து மூளையை கொஞ்சம் கழட்டி அனுப்பி வைக்கலாம்தான். ஆனால்அதுலேசாய் இருக்கவில்லை.லீவ்மற்றும்பணப்பிரச்சனையில்வந்து நிலை கொள்கிறது,

பணம்,பணம்,பணம் பாலாய்ப்போன இதன் தேவை மட்டும் அதிகம் இல்லையென்றால் நிம்மதியாகஇருக்கலாம்.அடுத்தமாதத்திலிருந்துஅரிசிவிலை60ரூபாய்ஆகப்போகிறதாமே? பத்து நாட்களுக்கு முன்பாக அரிசி எடுக்கப்போனபோதுகடைக்காரர் சொன்னார்.

ஜன்னல் கதவின் மேல்கிடந்ததுண்டில்கட்டியிருந்தசின்னச்சின்னகட்டங்கள் ஆரஞ்சுக் கலர் காண்பித்துச்சிரித்ததாய்.பத்மஜோதி டெக்டைல்ஸில் எடுத்தது.வீட்டில் இருந்த துண்டுகள் இரண்டும் நைந்து நூல் பிரிந்து காட்டஇதற்குமேலும்தாங்காதுஎன இரண்டு  துண்டுகளை எடுத்து விடலாம் என முடிவு செய்து எடுத்த துண்டு அது.ஒன்று மஞ்சள் கட்டம் என்றால் இன்னொன்றுஊதாக்கலரில்பூவரைந்ததுஒன்றை விட ஒன்று நன்றாகத் தெரிய இரண்டிலும் ஒன்று இருக்கட்டும் என நினைத்து எடுத்து வந்தேன்.

எப்போதும் எந்த வேலையாய்ப் போகிற போதும் சிரித்து வாய் நிறைய கூப்பிடுகிற கடையின் முதலாளி அன்பும், பிரியமும், வாஞ்சையும் மிகுந்த மனிதராகவே தென்படுகிறார். “வெலக் கொஞ்சம் கூடுனாலும் இதையே எடுத்துக்கங்க சார்,குடுக்குற காசுக்கு வொர்த்” என்றார்சரிதான் ரைட் என எடுத்து வந்த துண்டுகளில் ஒன்று ஜன்னல் கதவின் மீதும் இன்னொன்று உள் ரூமில் கட்டியிருந்த கொடியின் மீதுமாய் தொங்கி அசைகிறது மின் விசிறியின் காற்றில்/

வீட்டின் சுவற்றில் தொங்கிய மாதந்திர காலண்டர்,முகம் பார்க்கிற கண்ணாடி ஷெல்பில் இருந்த படித்த படிக்காத புத்தகங்கள்,முடி சிக்கிக் கிடக்கிறசீப்புஅதன் அருகில் இருந்த தேங்காய்எண்ணெய்பாட்டில்,பல்பொடிடப்பாஇன்னும்இதர,இதரவானவற்றையெல்லாம்பார்த்த  கண்களில் குல்லா மட்டும் அகப்படவில்லை.ஆகவே உன்னை எழுப்பி விட்டேன்.

உன்னை எழுப்பிய மறுகணம் நிமிர்ந்து பார்க்கையில்தான் தெரிகிறது.ஊதா பூப்போட்ட துண்டுக்கு பின்னாலும் அடியிலுமாய் கொடியில் ஒட்டிக்கிடந்தது குல்லா.அதைக்கூடப் பார்க்காமல் ,,,,,உன் தூக்கம் கெடுத்து விட்டேன் ஸாரி.

2 comments:

SURYAJEEVA said...

உங்கள் வீட்டில் குல்லா, நீங்கள் சென்னையில் இருப்பதால்... பெரும்பாலும் நடுநிசியில் நாங்கள் TORCH LIGHT தான் தேடுகிறோம்...

vimalanperali said...

வணக்கம் சூரிய ஜீவா தோழர்,நான் சென்னை இல்லை,விருதுநகர். பெரும்பாலான இரவுகளில் நாங்கள் தேடுவது டார்ச் லைட்டையே/
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/