18 Feb 2013

கண்ணாடிப்பூ,,,,,


       

அழகுஆயிரம்உலகம்முழுவதும்”கரண்ட்கட்டாகிப்போனஅதிகாலையின்5மணிக்கு இப்படியான ஒருபாடலை செல்போனில் கேட்பது தனி சுகம்தான். இன்னும் இருள் பிரியாதகாலைவேளைஎங்கும்சூழ்ந்திருக்கிறநிசப்தம்புழுப்பூச்சிகளும்எறும்புகளும்   இன்னும்பிறஜீவராசிகளின்நடமாட்டத்தைதவிர்த்துவேறொன்றும்அற்றபொழுதாய்.

மனித  நடமாட்டத்தை பார்க்க வேண்டுமானால் மெயின் ரோட்டுக்குப்போக வேண்டும். இங்கிருந்து டேப் வைத்தால் ஒரு கிலோமீட்டரைக் காட்டி நீளும். இந்நேரம் பால் டிப்போ திறந்திருப்பார்கள்.பால்ஊற்றுகிறவர்கள் மணிஒலிக்க சைக்கிளிலும்இருசக்கரவாகனத்திலுமாய்  தெருக்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பார்கள்.டீக்கடைகள் திறந்திருக்கும்.  வரிபோட்ட கிளாஸிலும், பேப்பர் கப்பிலுமாய் முக்கால்வாசியேஅளவுகாட்டுகிற டீயைஅந்நேரம் நாவின் சுவையறும் -புகளில் முத்தமிடவைத்து குடிப்பது தனி சுகமே. 

மூடியிருந்த கேட்டை திறக்கலாமா, வேண்டாமா? இன்னும் இருள் பிரியாத

பொழுதிலும்,  மனித நாடமாட்டம்இன்னும்சுழியிடஆரம்பிக்காதஇந்நேரத்திலுமாய் கதைவைத் திறந்து வெளியில் அமர்வது ஆபத்து அல்லது பயம் கலந்த தயக்கம் என்ற போதிலும்கூட பறந்து  திரிகிற கொசுக்களுக்கு அல்லவா மிகவும் பயப்பட வேண்டியிருக்கிறது.

 கொசு,கொசு,கொசு,,,, எங்கு பார்த்தாலும்,எப்போது பார்த்தாலும் கொசுவாகவே/இன்னும் கொசு பறக்காதஇடம்மொன்றைநான்பார்த்தில்லை. கொசுபறக்கிறது, மனிதர்கள்நடக்கிறார்கள். கொசு கடிக்கிறது,மனிதர்கள் அடிக்கிறார்கள், கொசு கடிக்கிறது,சலிப்புற்றவர்களாய்  கையால் விரட்டி விட்டுப்போய் விடுகிறார்கள்.  

இந்நேரம் அடர்க்கலரில் தொந்தியின் மீது சரிந்து இருக்கிற பனியன் தெரிய நிற்கும் பெரியவர் டீக்கடை திறந்திருப்பார். நாகர்கோவிலார்கடை பாதிமூடிய நிலையில் இருக்கும்.பெருக்கி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கொண்டிருப்பார் -கள்.  இன்னும் அரைமணி அல்லது முக்கால் மணியில் மூன்று ரூபாய் காய்கறி வந்து விடக் கூடும்.வாரத்திற்கு மூன்று தினங்கள்,இந்தந்த நாட்கள் என எழுதிப் போட்டிருப்பார்கள். 

 சலூன்கடை இப்போது திறந்திருக்க வாய்ப்பில்லை. ஆறறை அல்லது ஆறே
முக்காலுக்கு கடையில் பத்திமணக்க உட்கார்ந்திருப்பார்.அவரது கடையின் முதல் வாடிக்கையாளர் அவரேஎனஅறியலாம்இரவுஎந்நேரம்தூங்குவார்எந்நேரம் விழிப்பார் எனத்தெரியவில்லை. பதினைந்து கிலோ மீட்டர்  தூரத்திலிருக்கிற ஊரிலிருந்து முதல் பஸ்பிடித்துவந்து விடுகிறார்.“சிரமத்தைப் பார்த்தால் பிழைப்பு நகராது” என்கிறார்.அவர்.பூட்டியிருக்கிறகேட்டையும் அதைதாண்டிய வெற்றுவெளியையும் நடையையும் வெறித்தவாறு  வராண்டாவில் அமர்ந்திருக்கிற  என் முன் இன்னும் இருள் பிரியாமல் இருக்கிறஇளம் காலைப்  பொழுது  காட்சிப்படுகிறதாய்.  
எழுந்துமுகம்கழுவி விட்டுசட்டையை மாட்டிக்கொண்டுகிளம்பலாம் டீக்குடிக்க எனநினைத்து  கேட்டைத்திறந்த வேளை பாட்டு முடிந்து வெளியுலகு காட்சிப் படுகிறது.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுகமான ரசனை...

கரந்தை ஜெயக்குமார் said...

அதிகாலைப் பொழுதினை அற்புதமாய் கண் முன் கொண்டுவந்துள்ளீர்கள்

உஷா அன்பரசு said...

தினமும் ஒவ்வொரு காட்சிகளின் ரசனை மனம் கவர்கிறது..

உஷா அன்பரசு said...

தினமும் ஒவ்வொரு காட்சிகளின் ரசனை மனம் கவர்கிறது..

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு மேடம்,
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/