24 Feb 2013

ஞாயிறு போற்றதும்,,,,




ஞாயிறுகளின் காலைத் தூக்கம் மிகவும் இனிமையானதுதான்.நைந்து போன அழுக்குப் பாயில் தலையணை இல்லாமல் கசலையாய் படுத்துக் கிடந்தாலும் ஞாயிற்று கிழமைகளின் காலைத் தூக்கம் ,,,,,,,,,
     மலர்கள் செரிந்து நிறைந்து கிடக்கும் பூந்தோட்டத்தினுள்ளும்,கலர் கலரான கண்ணாடிகள்,அழகழகான வேலைப் பாடுகள் நிறைந்த வீட்டினுள்ளும்,தலை நிறைந்த சிந்தனையும்,உடல் நிறைந்த உழைப்பும்,கண் நிறைந்த பார்வையும்,வாய் நிறைந்த பேச்சுமாய்,செவி நிறைந்த கேட்டலும்,புலங்கள் நிறைந்தவிழிப்போடுஇருத்தலுமான உழைப்பாளியின்,தொழிலாளியின்,
சாதனையாளரின் அயர்ந்த தூக்கமாய்,,,,,ஞாயிறுகளின் காலை தூக்கம் மிக இனிமையானதுதான்.
   எந்த அவசரமும் இல்லை.எந்த பதட்டமும் இல்லை.காலை எழுந்தவுடன் காபி,டிபன்,சாப்பாடு என மனைவியும்,பிள்ளைகளின் பள்ளி புறப்பாடு,எனது அலுவகப் புறப்பாடு என நானும் அற்று வருகிற ஞாயிறுகளும், ஞாயிறுகளின் காலைத் தூக்கமும் மிகவும் இனிமையானதுதான்.
     வழக்கமில்லாத வழக்கமாய் அந்த ஞாயிறு காலை வெகு சீக்கிரமாய் எழுந்து விட்டேன்.அதிகாலைஐந்துமணி.வீடே அமைதியாய்.மனைவியும்,பிள்ளைகளும் கலைந்து படுத்திருந்தார்கள்.பாயிலும்,போர்வையிலுமாக/
      முகம் கழுவி துடைத்து விட்டு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன்.ரோட்டோரக் கடையில் டீக் குடித்து விட்டு வீடு போகும் போது எனது மனைவி விழித்திருந்தாள்.
    “அதிசயம்,இன்னிக்கு பெய்யிற மழை எல்லாம் ஒங்க தலையிலதான்.”என நீட்டி முறித்தாள். அந்த அதிகாலை நேரத்திலும்,கலைந்திருந்த பொழுதிலும் அவள் அழகாகத் தெரிந்தாள்.
       சொன்னபோது வெட்கப்பட்டாள்.முன் வராண்டா,ஹால்,கிச்சன் பெட்ரூம்,பாத்ரூமென 550 சதுரஅடி கொண்ட வீட்டில் ஒவ்வொரு அடியாக பார்வையை நகர்த்துகிறேன்.புதுசாக பார்பது போல.
            வராண்டாவிலுள்ளசெருப்புகள்,சைக்கிள்,பெட்ரூமிலுள்ளகட்டில்,பீரோ,
தலையணை,சேர்,டேபிள், படுத்துறங்கும் பிள்ளைகள் ,அடுப்படி எல்லாம் கடந்து கொல்லைப் புற வழியாகப் போனால் பின் பக்கத்தோட்டம்.
      பதினைந்து குழி நிலத்தில் ரோட்டடி, வீடு கட்டியது போக மீதி இடம் தோட்டமாக முளைத்துக் கிடந்தது.
       வேப்பமரம்,தென்னை மரம்,பன்னீர் மரம்,பூச்செடி,பூமரம்,,,,,,(பின்னே பப்பாளி மரம் இல்லாமலா?) எல்லாம் விரிந்து குளுமையாய் கிடந்தது.
    சுத்தமான காற்றும் சுகாதாரமான இடமுமாய் காட்சியளித்த அந்த இடம் எனக்கு ரம்யமாய் காட்சியளித்ததில் ஆச்சரியம் இல்லை.இப்படியான அழகு ததும்பும் ஆச்சரியங்களை காணக் கிடைக்கும் போது நீங்களும்,நானும்,நாம் எல்லோருமே மிகவும் ரசித்து மகிழ்ந்துதான் போகிறோம்.
     ரம்யங்களை ரசித்தலும்,வீட்டின் அழகில் கரைந்து  போவதுமான பாக்கியம் எனக்கும்,உங்களுக்கும்,நம்மில்பெரும்பாலானோருக்குவாய்க்கப்பெற்றிருக்கிறதுதான்.
   அப்படி வாய்க்கப் பெற்றிருக்கிற நாம் பாக்கியவான்களாய்,புண்ணியம் செய்தவர்களாய் ஆகிப் போனோம்.
வாய்க்கப் பெறாதவர்கள்????????/

14 comments:

கார்த்திக் சரவணன் said...

ஞாயிறு காலை... வர்ணித்த விதமே அழகு...

திண்டுக்கல் தனபாலன் said...

வாய்க்கப் பெறாதவர்கள் - ரசிக்கும் மனோபாவம் இல்லாதவர்கள் - பாவம்...

cheena (சீனா) said...

அன்பின் விமலன் - ஞாயிறு போற்றுதும் - அருமையான பதிவு - ஞாயிற்றுக்கிழமை காலைத் தூக்கம் கொடுத்து வைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அனுபவிக்க ஆனந்த மாய் இருக்கும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

ரசிக்கும் மனமிருப்பவன்..நேசம் நிறைந்தவனும் ஆகிறான்..என உணரவைத்த பதிவு!

மாலதி said...

மிக சிறந்த இடுகை காணும் காட்சிகளில் எல்லாம் இன்பம் கொட்டிக் கிடக்கிறது என்பர் ஒரு அறிஞ்சர் உண்மையில் நம்மை சுற்றி கொட்டிக் கிடக்கும் புதையலை சுவைக்க மாட்டோம் என்கொதேடிக்கொண்டு இருப்போம் சிறந்த சிந்திக்க வைக்கும் பதிவு பாராட்டுகள்

vimalanperali said...

வணக்கம் ஸ்கூல் பையன் சார்,
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சீனா சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமேஷ் வெங்கடபதி சார்.
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மாலதி மேடம்,
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

ezhil said...

ஞாயிறை நன்றாக அனுபவித்திருக்கிறீர்கள் தெரிகிறது.... இயற்கையை ரசிக்கத்தெரிந்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள்... நாங்கலும் ஞாயிறுகளில் தேனீர்க்கோப்பையுடன் தோட்டத்து அருகில் உள்ள படியில் அமர்ந்து செடிகளுடன் பறவைகள் , அணில்களை ரசிப்போம்

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

மாதேவி said...

ஞர்யிறு விடிகாலை தரும் அமைதி அந்த ஆனந்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

ரசித்து எழுதியுள்ளீர்கள்.

vimalanperali said...

வணக்கம் மாதேவி அவர்களே/
நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/