26 Feb 2013

கைத்துட்டு,,,,,,


                      
எந்தப் பக்கம் கையை விட்டபோதிலும் அவரது உடம்பிலிருந்து ரூபாயை எடுத்து விடுகிறார். விட்டால்  எட்டு திசகளிலும் இருந்து எடுப்பார் போலிருக்கிறது.

வலதுபக்கம்கையைவிடுகிறார்.மடித்துக்கட்டப்பட்டிருந்தகட்டம்போட்டலுங்கியை மீறி வெளித் தெரிந்தஅண்டர்வேர்பாக்கெட்டிலிருந்துரூபாயைஎடுக்கிறார்இடதுப்பக்கம் கையை விடுகிறார். மேல்ச்சட்டைப்பையிலிருந்து நோட்டுக்களாய் எடுத்துப்போடுகிறார்அதுபோலவே சட்டையின்  உள்பைஅண்டர்வேர்பாக்கெட்டின்இடதுபைகட்டியிருந்தலுங்கியின்சுருட்டியமடிப்பிலிருந்து,,,,,     என எல்லாப்பக்கமிருந்தும் எடுகிறார்.எல்லாம் மூன்றாய்,இரண்டாய் மடிக்கப்பட்டிருந்த பத்து ரூபாய்,இருபது ரூபாய்,ஐந்து ரூபாய்  நோட்டுக்கள் கசலையாய்/

நான் மற்றும் எனது சக ஊழியர் இருவருமாய் அலுவலகம் விட்டு வந்துகொண்டிருந்த நேரமது ,நேற்று இரவு கண் மூடிக்கொண்ட மின் வெட்டினால் சரியாக தூங்காத தூக்கம் இப்போது வந்து இமைகளை இழுக்க ”தூக்கமுன் கண்களை தழுவட்டுமே”என அசரீரி ஒலிக்கிறது. அல்லது ஒலிப்பத்தாய் படுகிறது.

ஆகா இதெல்லாம் சரிப்படாது.இரு சக்கர வாகனத்தில் குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும் அது எப்படி தூக்கம் கப்ப வண்டியை ஓட்டுவது சரியாக இருக்கும்? உடலும் மனமும்,புத்தியும் ஒரு சேர  மிகவும் கவனமாக பயணிக்கா விட்டாலும் கூட ஏதோ ஓரளவு பயணித்து ஆக வேண்டுமே என்கிற உயர்ரக எண்ணத்தில் தற்சமயம் தூக்கம் விலக்க ஒரு டீசாப்பிட்டலாம் என்கிற முடிவில்தேநீர் கடை முன்புநிற்கிறோம்.வழக்கமாகடீ சாப்புடுகிற கடைதான்அது.சக்திதாசன் கடை.காலை,மாலைஇருவேளையும்  பெரும்பாலும் அங்குதான் டீ சாப்பிடுவேன் நேரமிருக்கிற தினங்களில்/

டீக்கடைகள் எப்போதும் ஏழைகளையும், அன்றாடர்களையும் தன்னுள் தக்கவைத்துக் கொண்டும் உள்ளிழுத்துக் கொள்கிறதுமான உயிர் உருவாய்த் தெரிகிறது. கோயில்களுக்கு அடையாளாய் இருக்கிற கோபுரம் போல டீக்கடைகளுக்கு அடையாளமாய் பாய்லரும், பால்ச் சட்டியும்,டிக்காக்‌ஷன் பையும் போலும்/

நாங்கள்சென்றநேரம்சூடாக வடையும் பஜ்ஜியும் இருந்தது வேறுவழியில்லை.அந்த விலைக்கு அப்படித்தான் சுட்டுத் தரமுடியும் ஏதோ ஒருமாவை பிசைந்து உள்ளே நறுக்கிய வெங்காயத் துண்டுகளையும், மிளகாய்த் துண்டுகளையும் வைத்து சுட்டெடுத்த வடையும், பஜ்ஜியும் பார்க்க செந்நிறக்கலர்கொண்டுஎண்ணெய்பூசிமாலைவெயிலில் மின்னும். இரண்டு ரூபாய்க்கு பின்எப்படித்தரமுடியும்அவர்களால்கேட்கமுடிகிற போதும் கூட இங்கு இவ்வளவுதான் விற்க முடியும்,அதற்குமேலானால்விற்கமுடியாது.வாங்கவும்மாட்டார்கள்.ஸ்கூல்போகிற பிள்ளைக ளுக்கும்கூலிவேலையில்சம்பாரிக்கிறவர்களுக்கும் இதுதான்லாயக்கு.இரண்டுஅல்லது மூன்று  வடை,அல்லதுபஜ்ஜிகளைபிய்த்துப் போட்டு  தண்ணீரான சட்னியும், சாம்பாரும் விட்டுச் சாப்பிட்டால்அந்நேரம்வயிறுநிறைந்த திருப்தி  என டீக்கடை உரிமையாளர் சொன்ன போது தஞ்சாவூரில் ஒரு திரீ ஸ்டார் ஹோட்டலில் ஒரு டீ 88 ரூபாய்க்கு குடித்த ஞாபகம் வருகிறது.(வேண்டாம்,வேண்டாம் எனச்சொல்ல அலுவலக மேலாளர் கொடுத்த பார்ட்டியில் நடந்த விபத்து அது.)அம்மாதிரியான கொடுமையான விபத்துக்கு இது மிகவும் தேவலாம்.

நானும் என்  உடன் வேலை பார்ப்பவருமாய் சென்றமாலைப்பொழுதுக்குடீயும் ,வடையும் ரெடியாகஇருந்தது.நான்ஒருகடி,ஒருகுடிஎன்கிறவகையில் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்த போது உடன்வந்தவர் எதுவும்வேண்டாம்எனச்சொல்லிவிட்டார்.(உடம்பைப் பேணுகிறாராமாம்) குடித்தடீக்கும்,கடித்தவடைக்குமாய்கொடுக்ககாசுதேடியபோதுபையில்சில்லறைகள்  தவிர்த்து நூறுரூபாயாய்தட்டுபட்டது.”சில்லறைஇல்லண்ணே”,என்றவாறுமுழுத்தாளாய்க்   கொடுத்த போதுஎங்களுக்குமிச்சச்சில்லறைகொடுக்கஎத்தனித்தபோதுதான்இப்படி.  

எண்ணன்னே  இப்படி என்ற போது அவர் சொல்கிறார். பலச்சரக்குக்கு, பாலுக்கு, திடீர்ன்னு சீனி வாங்க,,,,,,,,இப்பிடி எல்லாத்துக்கும் தனித்தனி சார்.ஒங்கள மாதிரி எல்லாரும் குடுக்குற போது அதத அங்கங்க வச்சிருவேன் சார் என்கிறார்.

அவரது உடம்பில்  எந்தப்பக்கம் கைவிட்ட போதிலும் பணம் வருகிறது.விட்டால் எட்டு திசையிலிருந்தும் பணம் எடுப்பாரோ?

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கொடுத்து வைத்தவர்...?

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

விமலன் உங்களின் படங்கள் மனதைக் கவர்கிறது. பதிவுகள் போலவே

ezhil said...

வித்தியாசமான மனிதர்கள்.... சில நேரங்களில் நடுத்தர வர்கத்தினர் இப்படியான பட்ஜெட் போட்ட வாழ்க்கையால் நிம்மதி காணலாம்...

ezhil said...
This comment has been removed by the author.
மாதேவி said...

இப்படியும் மனிதர்கள்!!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விஜி நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மாதேவி அவர்களே/
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/