6 Feb 2013

வலைவிரிப்பு,,,,,


                      
அப்படி என்ன இருக்கிறது அதில் என சொல்ல முடியவில்லை.அதே நேரம் அதில் ஒன்றும் இல்லை எனவுமாய் அறுதியிட்டுக்கூறிவிட முடியவில்லை.
இயக்கினால் இயங்குகிறது.இல்லையென்றால் இயங்க மறுத்து மௌனம் கொண்டு விடுகிறது.

நடக்கவிருக்கிற ஒரு நிகழ்வைப்பற்றி பேசவும் ஆலோசிக்கவுமாய் கூடிய மாலைநேரக்கூட்டத்தில்பங்கேற்றுகொண்டு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில்  மாலையில்அழைத்தநண்பரின்அழைப்பைநோக்கிச் சென்றவனாய் உந்துண்ட சமயமது.

அவருடன் பேசியும், சிரித்தும் விட்டு அவரது கம்பூட்டரில் அவர் சொன்ன வேலையை பார்த்துக்கொடுத்து விட்டு மின்சாரம் தன் கண்னை மூடிக் கொண்ட  இரவு நகர்வின் 9 மணியில் வீட்டிற்குக் கிளம்புகிறேன்.

சாலையும்,சாலையில் விரைந்த வாகனங்களும் அவை உமிழ்ந்தவெளிச்சமும் மிதமான பாதசாரிகளின் நடமாட்டமும் சுகந்தமான மென் காற்றும் தவிர சாலையின் தெளிவுபட்டிராத வரை படத்தின் கைபிடித்துக்கொண்டு எனது இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறேன்.

நான் வாகனத்தை ஸ்டார்ட் பண்ணுகையில் எதிர்படுகிற வொர்க் ஷாப் சந்து வழியே சென்றால்  ராம்மூர்த்தி  ரோட்டிற்கு சீக்கிரம் சென்று  விடலாம்.

முன்பெல்லாம் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமாவிற்கு போய் விட்டு இந்த வழியாகத்தான் போயிருக்கிறேன்.பார்த்த  சினிமாவின் நினைவுகளுடனும், அதன்நாயகநாயகிகளுடன்கைகோர்த்துக் கொண்டுமாய்/

அப்போது சைக்கிள், இப்போது இருசக்கர வாகனம் அப்போது இயங்க வேண்டியிருந்த கால்கள் இப்போது கைகளின் இயக்கம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.அவைதானேவாகனத்தின் ஆக்ஸிலேட்டரை திருக்க வேண்டும். பிரேக்பிடிக்கவேண்டும்என்கிறவனாய்வாகனத்தை இயக்குகிறேன் ராமமூர்த்தி சாலை வந்து விடுகிறது இப்படியே நேரே சென்றால் எனது வீட்டிற்கு செல்கிற பாதை வலப்பக்கம் திரும்பினால்பஜாருக்குச் செல்லலாம். 

தேனையம்மாள் ஸ்டோருக்கு அந்தப்பக்கம்தான் செல்ல வேண்டும்.  முறுக்கி விடுகிறேன் ஆக்ஸிலேட்டரை/அந்த இருட்டிலும் பூபோன்று பயணிப்பதாய் ஒரு மலர்ந்த நினைப்பு என்னுள் .மண்ணும் மனிதர்களும் ஒன்றினைந்ததாய் அமைந்த பயணாமாய் அது.

ஏதாவதுடீக்கடையில்நிறுத்திகலங்கலாகவும்,ஸ்டாரங்காகவும்ஒருடீக்குடித்தால் என்ன?வேண்டாம் இந்த ரீதியில் போனால் உடலில் வலது பக்கம் டீயும், இடது பக்கம் ரத்தமும் பிரிந்து ஓட ஆரம்பித்து விடும் போலிருக்கிறது.

எஞ்சின் ஆயில் விளம்பரங்களைப்போல் எந்தக்கடை டீ சிறந்தது என மனதின் உள்ளே ஒரு விளம்பர தகடு நகன்று கொண்டே இருக்கும்.அதில் எந்தக்கடை எங்கெங்கு,அதில் யார்,யார் மாஸ்டர்,எப்படிடீ ப்போடுகிறார்கள்  என்கிற உள் ரகசியம் பொதிந்திருக்கும்.

விழிபடர்ந்த டீக்கடையை மனம் மூடிய சங்கடத்துடன் கடந்து RNB ஜவுளிக் கடையைக்கடக்கும் போதுதான் உறைக்கிறது.ஒர்க ஷாப் சந்து வழியே வந்து இங்குபஜாரின்துவக்கம்தொடுவதைவிடுத்துநண்பரைபார்த்த இடத்திலிருந்து  நேரடியாய் இங்கு நூல்ப் பிடித்திருக்கலாம்.என்கிற நினைவு உதிரும் முன் சென்றடைந்தஇடம் தேன்னையம்மாள் ஸ்டோராக இருக்கிறது. சரக்குகள் வாங்கும் போதுதான் உறைக்கிறது.சென்ற மாதமே வாங்க நினைத்து வாங்காமல் விட்டுப்போன கொசு அடிக்கிற பேட்டை இன்றாவது வாங்கி விட வேண்டும்.

மிதமான ஊதாக்கலரில்  டிசைன் போடப்பட்டிருந்த பையினுள்ளே இருந்த பேட்டை எடுத்துக்காண்பித்தார்கள்.அரை வெள்லைக்கலரில்இருந்த கைபிடி. அதைத்தாண்டி இன்னும் வளர்ந்திருந்த கைபிடியின் நீளம்சிவப்புநிறம் காட்டி பச்சை நிறத்துடன் கைகோர்த்து வலைப்பின்னலைக் காண்பித்தது.

டார்ச் லைட் இணைந்த பேட் 200 ரூபாய் எனவும் ,அது அல்லாதது 150 எனவுமாய்ச் சொன்னார்கள். எனது ஓட்டு 200 ரூபாய் பேட்டுக்கே.கலரும் அழகாயிருந்தது.கைபிடியும் பிடிக்கவும் கைக்கு அடக்கமாய் இருந்தது.

மனதுக்குபிடிபட்டுப்போன அந்த அடக்கமும்,அழகும்தான் என்னை மற்ற பொருட்களுடன் அந்த பேட்டை வாங்க வைத்தது.வாங்கி வந்து விட்டேன் வீட்டிற்கு.நான் வந்து விட்டிருந்த நேரம் தூங்கிவிட்டிருந்த மகன்.

நேற்று வாங்கி வந்திருந்த பேட்டை இன்று மாலை இரவு நெருங்கி வருகிற வேலை பள்ளி விட்டு வந்ததும்கையிலெடுத்துவிட்டான்.

சுவிட்சைப்போட்டுபேட்டை வேகமாகவோ, மெதுவாகவோ வீசுகையில் அதில் படுகிற கொசுக்கள் டப்டப்பென உதாநிற சிறு தீப்பொறி ஒன்றின் நடுவில்  சிக்கி டப்,டப்பென்கிற சப்த்துடன் சாகிறது பரிதாபமாய்/கொவின் மேல் இருக்கிற் கோபமா அல்லது அதை ஒழிக்க நினைக்கிற தீவிரமான வழிகளில் இதுவும் ஒன்றா?என்கிற மெல்லிய குழப்பத்துடன் அவனது கையிலிருந்த கொசு பேட்டை நான் வாங்கி இயக்குகையில் கொசுக்கள் பல் அதில் அடிபட்டுச்சாகின்றன டப்டப் என்கிற ஓசையுடன்/

ஓசை ஒலிபடகொசுக்கள்சாகிறபோதுகாற்றின்திசையில்நாசியைதொட்ட வாசம்   கருகிய ரோமத்தின் வாசனையை நினைவு படுத்துவதாக/

அடித்து முடித்த கொசுக்கள் கீழே விழ இன்னும் அடிக்க முடியாத கொசுக்கள் எனது உடலின் மீதும்,உட்கார்ந்திருந்த எனது  காலடியிலுமாய் படர்ந்து  பரவியிருக்கிற அவைகளை எப்படி அடிப்பது என்கிற  யோசனையுடனும் அவைகளின் மீது எழுந்த பச்சாதாபத்துடனுமாய் பேட்டை எனது மகனிடம் கொடுக்கிறேன்.அதிலும் இந்தஉடல்கனத்தகொசுபண்னுகிற அழிச்சாட்டியம்  இருக்கிறதே என்கிற நினைப்புடனும்,அவைகளும் நம்மைப் போலவே தாய், தந்தை உறவு வைத்து  குடும்பம் நடத்துமா என்ன என்கிற யோசனை மேலிடவுமாய்/

அப்படி அதில் என்ன இருக்கிறது என சொல்லி விட முடியவில்லை,அதே நேரம் அதில் ஒன்று இல்லை என அறுதியிட்டும் கூறிவிடவும் முடியவில்லை. ஆனால் அதில் ஒன்று மிகவும் கெட்டியாக படிந்திருப்பது புலனாகிறது. உயிரெடுக்கிற சூன்யம்/

4 comments:

 1. டப்டப்... டப்டப்... தினமும் வேலை அது தானே...

  உங்களின் சிந்தனையே தனி...

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete