3 Mar 2013

கேக்,,,,,,


                     
பிய்த்துத்தின்றகேக்கின்சிதறல்கள்சட்டையின்மீதும்,பேண்ட்டின்மீதுமாய்விழுந்து சிதறுகிறது.

ஒன்றல்லஇரண்டல்ல.பரவலாய்பட்டுசிதறியவைகளைஎண்ணிப்பார்க்கிறஎண்ணமுமில்லை.,நேரமுமில்லை,விட்டுவிடுகிறேன்.கீழே தரையில் சம்மணமாக அமர்ந்திருந்தவன் மேலேழுந்து ஐந்தரை அல்லது ஐந்தே முக்கால் அடியாகவளர்ச்சிகாண்பித்துநிற்கையில்ஒட்டியவைகளைத் தட்டிவிடுகிறேன்.அவையும்சிதறிவளர்ச்சிகாட்டிநின்றஎன்னிலிருந்து  கீழே தரை தொட்டு நின்ற நான் அமர்ந்திருந்த இடத்தை இட்டு நிரப்புபவையாய்/

பாலமணம் ஊரின் பெயர்.ஆவணப்பெயர் வேறாக இருக்கலாம்.அது இப்போது மருவி, மருவி பாலமணமாய் நிற்கிறது.பாலமணம்,பாலமணம்,பாலமணம்,,,,,,,என யாரும் தோள் தொட்டு அழைக்காமலும்,கைபிடித்து இழுக்காமலும் உடன் வருகிற பெயராகிப் போகிறது.  

அந்தப்பெயர் தாங்கிய ஊரின் வழியாகத்தான் அனுதினமும் எனது பயணம் சீராகவும், அதுவுமற்றுமாய்/நேற்றைக்கு முன் தினம் சனிக்கிழமை.அரை நாள்அலுவலகம் முடிந்து  வருகிறநேரம்சிறிதுதாமதமாகிப்போகிறது.நல்லபசிஅரைப்பள்ளிக்கூடம்ஆனபோதிலும் மதியம் மூணுமணிக்குப்போனால் பசிக்கும் தானே?அலுவலகமும்,அதன் வேலையும், வேகமும் ,உள் விவகாரமும் வயிற்றுக்குத் தெரியுமா என்ன?தெரிய ஞாயமில்லை. வேண்டுமானால் ஒன்று தெரியும். தண்ணீர் குடிக்காமல் சாப்பிடாமல் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து ஒன்றுக்குக் கூடப் போகத் தோணாமல் வேலைபார்க்கத் தோணுகிறது. அப்படியெல்லாம் முடித்து விட்டு வந்த மூன்று மணிக்கு இப்படி பேயாய் பசிக்காமல் என்ன செய்யும்?

டீக்கடையும்ஹோட்டலுமாய்சேர்ந்துகைக்கோர்த்துக்கொண்டிருக்கிறநளபாக்கடையது.,,,,,,,,,, ஹோட்டல்எனபெயர்தாங்கியிருந்ததுசாப்பாடுஇல்லைபுரோட்டாதான்இருக்கிறது என்றார்கள்.

என்னது இந்நேரம் புரோட்டாவா? வேண்டாம்டா சாமி.அதற்கு டீஎவ்வளவோ தேவலாம்  என்கிற நினைப்பு எனக்கு வந்த மறு நிமிடம் என்கைக்கு டீ வருகிறது.வரி போட்ட கண்ணாடி கிளாஸினுள் இருந்த கலர் திரவம் நாக்கின் சுவையறும்புகளைத் தொட்டுஉள்ளே பயணிக்கிற நேரம் பசி மறைந்து டீப்பட்டறையின் ஓரம் அடுக்கப்பட்டிருந்த கேக்குகள் கண்களையும் மனதையும் கவர டீக்கு காசு கொடுக்கையில் அதில் நான்கை வாங்கி விடுகிறேன்.

கிராமத்துப் பலகாரங்கள் எப்போதும் மனம் பிடித்துப்போகிறது.வாங்கி வந்த கேக்குகளை இன்று வரை வைத்து  சாப்பிடுவேன் என நான் நினைக்கையில் அப்படி சாப்பிட்ட கேக்கின் சிதறல்களே என்னில் விழுந்து கீழேயும் தரை தொட்டு வண்ணக்கோலமிட்டு காட்சியளிப் பைவையாக/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

நல்ல வேலை புரோட்டா சாப்பிடவில்லை...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக என சொல்கிற அதே வேளை மனம் லேசாய் உள்ளுள் உறுத்தாமல் இல்லை.எனது பதிவுகளுக்கெல்லாம் உடனடியாக கருத்துத்தெரிவித்து என்னை ஊக்கப்ப்படுத்துகிற தங்களைப்பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்கிற நினைப்பு கைகூடவில்லை என்கிற உறுத்தலே அது.

நினைக்கிறேன் நேரம் கைகூடுகையில் நிச்சயம் செய்கிறேன்,அதற்கு தங்களின் உயரிய அனுமதியும்,இசைவும் வேண்டும்/