10 Jun 2013

பூங்காற்று,,,,


       
வரக்கூடாது என்கிற எண்ணமெல்லாம் இல்லை.இல்லை பிடிவாதமோ அல்லது மனச் சோர்வோஏதும்கிடையாது.இன்றுகாலையிலிருந்துநினைத்துஇப்போதுதான்வாய்க்கப் பெற்ற நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு போகலாம் எனத்தோனியது.

காலைஅலுவலகஅவசரம்,இப்பொழுதுமாலைஅதுஎதுவுமற்றநிதானம்.தங்கப்பாண்டித்தோழர் கடையில் டீக்குடிக்கும் போது தோனிய எண்ணம் இது.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போக வேண்டும் என நினைத்தது இப்பொழுது தான் கைவரப்பெற்றதாய்/பாலவனத்தம் கடக்கும் போது இல்லாத டீயை விருதுநகரில் குடித்துக் கொள்ளலாம் என்கிறஎண்ணத்துடன் வந்து சேர்ந்து மையம் கொண்ட இடம் தங்கப் பாண்டித் தோழர் டீக்கடையாக/

டீக்கடைகள் பொதுவாக டீக்கடைகளாக மட்டுமே  இருப்பதில்லை.பல்வேறு சிந்தனை களை விரித்து விதைக்கிறவையாகவும், விதைபாவுபவையாகவுமாய்/இதில் தோழர் டீக்கடை ரொம்பவுமே ஸ்பெஷல். டீயைக் குடித்து முடித்தகையோடு வந்த யோசனை தான் டாக்டரிடம் போகவேண்டும் என்பதான  எண்ணம்.

ஹோமியோபதி டாக்டர் அவர்.டாக்டர் போல தோற்றமளிக்காத டாக்டர். இப்போது இவன் பார்க்கபோகிற இடத்தில் கிளினிக் வைத்து சிலமாதங்கள்தான் ஆகிறது. கைக்கடக்கமான சின்னதான இடம்.பெட்ரோல் பங்கும், ஆரம்பப்பள்ளியும்,டீக்கடைகளும்,லாரிஆபீசுகளுமாய் சுற்றிகுடிகொண்டுள்ள இடத்தின் மையத்திலிருந்த தெருவில் அமைந்திருந்த கிளினிக் அது.

வைத்தியம் பார்க்கப்போன நாளன்றின் மழைபொழுதில் வெகுதயக்கதிற்குப் பிறகும், நீண்ட யோசனைக்குப்பின்புமாய் கேட்கிறான்.அதென்ன கிளிக்கிக்கிற்கு அப்படி ஒரு பெயர் என/ “அம்மாவின் பெயரையும்,அப்பாவின் பெயரையும் சேர்த்திணைத்ததில் விளைந்தது இது. மனதுக்குப் பிடித்திருந்தது.வைத்து தைத்துவிட்டேன் அதையே கிளினிக்கின் பெயராக.தவிர அம்மா,அப்பாவின் நினைவுகளை இதில் பதிக்காமல் வேறெதில் பதிக்க?என்கிற மனம் போர்த்திய இனிய நினைவு காரணமாய் அமைய வைத்துவிடுகிறேன் அதையே என்கிறார்.

இளைமையின் அடையாளமும்,சிறுவயதின் சுவடும் அவரின் உடல் போர்த்திக் கிடந்ததாக/ படித்து  முடித்து விட்டு வந்து ஒருவருடம் தான் ஆகிறது என்றார்.அவர்தான் கேட்கிறார் இவனிடம் திரும்பத்திரும்பவுமாய்/

ஏதாவது மனச்சோர்வின் காரணமாகவும்,ஊசலாட்டத்தின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனுமான விட்டேத்தியான மனோநிலையில் அப்படி வராமல் இருந்து விட்டானா என அறிகிற பொறுப்புணர்வுடனும்,மருத்துவக்கூறுகள் நிரம்பிய கேள்விக ளை உள்ளடக்கியுமாய் கேட்கிறார்.

இவ்வளவு நீண்ட காலமாக இந்த தொந்தரவு இருக்கிறது என்கிறீர்களே,பின் ஏன் ஒரு முறை வைத்தியம் பார்த்துவிட்டுப்போனபின்பாய் பலமாதங்கள் கழித்துதான் வருகிறீ ர்கள் அது எதற்கு எனவும் ஏன் அப்படி எனவுமாய்/

அவர் அப்படி அழுத்தி,அழுத்திக்கேட்கையில்தான் இப்படியெல்லாம் சொல்ல வேண்டி யிருக் கிறது. வர்க்கூடாது என்கிற பிடிவாதமோ அல்லது மனச்சோர்வோ இல்லை. அதிகரித்துப் போகிற வேலை அல்லது மிகுதியாகிப்போகிற சோம்பேறித்தனம்தான் இப்படியெல்லாம் செய்ய வைத்து விடுகிறது.அடுத்த முறை கண்டிப்பாக வருகிறேன். மாத்திரை தீர்ந்து போகிற நாளன்றிலேயே. என சொல்லிவிட்டு கிளினிக்கை விட்டு வெளியே வருகிறேன்,வெளியே மென் தூவலாய் வீசிய காற்று/

3 comments:

 1. ஆதரவான வார்த்தைகள் = தென்றல் காற்று...

  ReplyDelete
 2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. பூங்காற்றுதான் உங்கள் வரிகள்... அதைவிட அந்த புகைப்படம் பூங்காற்றை வீசித்தான் செல்கிறது....

  ReplyDelete