21 Jun 2013

லேசுப்பட்டதாய்,,,,,


           
 எதிர்பார்ப்புகளே இங்கு கனவுகளாய் விரிவதாகியும்விளைவதாயும்தெரிகிறது.

எங்கும் ,எதிலும்,எப்பொழுதும் நிறைந்திருக்கும் பரம்பொருளைப்போல கனவுகளின் வாக்கிய மே பிம்பங்களாய் நம்கைபிடித்தும்,மனம் பிடித்துமாய் நிறைந்திருக்கிறது.

இதில்பகல்கனவுக்குத் தரப்படுகிற முக்கியத்துவம் வேறு எந்த வேளையிலும் அழையா விருந்தாளியாய் வந்து போய் விடுகிற  கனவுக்கு தரப்படுவதில்லை என்பதே எளிய கணக்காக/

காலை,மதியம்,இரவு மூன்றில் எவ்வேளையானாலும் கூட உயர் உடல் அயர்ச்சியின் காரண மாகவந்துசற்றே கண்ணயர்ந்து விடுகிற வேளையில் சட்டென சொல்லாமல், கொள்ளா மல்பிரவேசித்துவிடுகிற கனவு சமயாசமயங்களில் கனம்சுமந்தும்,லேசாகவும்/

சுமக்கிற கனம் எதைப்பொறுத்தது என்பதே கனவுவிற்குரிய பலனாகவும் அது விளை விக்கப் போகிற செயலாயும் இருப்பதாய்ப்படுகிறது.

அன்றொரு நாள்,,,,,, முதல் நாள் இரவு சற்றே அதிகமாய் விழித்து விட்ட காரணத்தால் மறுநாள் அலுவலகம் விட்டு வந்து கையில் தேநீர் டம்ளருடன் அமர்ந்திருந்த அவனை சற்றே கண்ணயர வைத்து விடுகிறது அசதியும், முதல்நாள் விடுபட்டுப்போன தூக்கமும்/

கண்ணயர்விற்கும்,விழிப்பிற்கும் இடையிலாக வந்துவிட்ட கனவு கனம் தாங்கியதா அல்லது லேசானதாதெரியவில்லை.ஆனால்திரை கட்டிய தியேட்டரில் சினிமாப் படம் போல வந்தெழுந்து செல்கிறது ப்ரஜெக்டர் மற்றும் ஆபரேட்டர் உதவியில்லாமல்/

இப்படி நால்வழிச்சாலையில் பயணித்து வருகிற வேகத்துடன் எந்த சிக்னலிலும், ட்ராபிக்கின் இடைஞ்சலிலும் மாட்டிக் கொள்ளாமல்  நண்பர்கள் தோழர்கள் மற்றும் உறவினர்கள் உடன் வேலைபார்ப்பவர்கள்இன்னும்இன்னுமான,,,,பிறர்களை காட்சிப் படுத்துகிற கனவு எப்போது மே எதிர்பார்ப்புகளையும்,ஆசைகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.

இருக்கட்டும் அதனால் என்ன?எப்பொழுதும் போல சம்பவங்களும், நண்பர்களும், தோழர்களும் இன்னும் பிறர்களுமாய் வந்து போகட்டும்.நம் எல்லோரின் கனவிலுமாய்/

கண்ணயர்விற்கும் விழிப்பிற்கும் இடையிலாய் வந்து விடுகிற கனவு எப்பொழுதும் கனம் தாங்கி --யதாயும்,லேசாகவும்/

13 comments:

 1. நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 2. கனவுகள் சொல்லிச்செல்கிற கதைகள் இங்கே ஏராளமாக/

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. கால் முளைத்த கனவுகள் உருக்காட்டி சிரிக்கிறது.நிறைய,நிறையவாக/

  ReplyDelete
 5. கண்ணயர்விற்கும்,விழிப்பிற்கும் இடையிலாக வந்துவிட்ட கனவு கனம் தாங்கியதா அல்லது லேசானதாதெரியவில்லை.ஆனால்திரை கட்டிய தியேட்டரில் சினிமாப் படம் போல வந்தெழுந்து ..

  ஆட்டிப்படைக்கும் கனவுகளைப் பற்றி அழகாக சொல்லி விட்டீர்கள்..

  ReplyDelete
 6. வணக்கம் ரிஷபன் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. "எவ்வேளையானாலும் கூட உயர் உடல் அயர்ச்சியின் காரண மாகவந்துசற்றே கண்ணயர்ந்து விடுகிற வேளையில் சட்டென சொல்லாமல், கொள்ளா மல்பிரவேசித்துவிடுகிற கனவு சமயாசமயங்களில் கனம்சுமந்தும்,லேசாகவும் "

  உண்மை வரிகள்.கனவுகளைப் பற்றி அழகானதோர் பதிவு.

  ReplyDelete
 8. வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. வணக்கம் விமலன்.எனது முதல் வருகை இது. கனவுகள் பற்றி சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.
  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 10. வணக்கம் அம்மா ரஞ்சனி நாராயணன் அவர்களே/நன்ரி தங்கள்து வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. ''..வேலைபார்ப்பவர்கள்இன்னும்இன்னுமான,,,,பிறர்களை காட்சிப் படுத்துகிற கனவு எப்போது மே எதிர்பார்ப்புகளையும்,ஆசைகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது....''
  இதை முழுவதுமாக நான் ஒத்துக் கொள்கிறேன்.
  நல்ல கருத்துகள் அல்லது சிந்தனை என்பேன்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete