எப்படிப்போதும் இட்லிகள் நான்கு.
நன்கு சாப்புடுகிற வயதிது என
என் பற்றி அவர் ஆதங்கப்படாத நாட்களில்லை .
ரோட்டோரம் கடை வைத்திருக்கிற கோவிந்தசாமி.
என்னிடம் சொல்வது போலவேஎன் உறவுகளிடமும்,
நண்பர்களிடமும், தோழர்களிடமும் ,
அக்கம் பக்கத்துக்காரர்களிடமும் சொல்லி
வருத்தப்படாத நாட்களில்லை.
தூசு அப்பிய கூரையும்,அழுக்கு நிறைந்த பெஞ்சும்,
சுத்தமற்ற நீருமாய் இருந்த அந்த டீக்கடை
நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையின்
ஆக்ரமிப்பு அகற்றலுக்கு உட்பட்ட நாட்களிலும்
தப்பிப்பிழைத்த நாட்களிலுமாய்,,,,,,,,
அவரது கடையில் சாப்பிட்ட
நான்கு இட்லிகளே எனக்கு
போதுமானதாய் இருந்திருக்கிறது.
இந்த ஐந்து வருடங்களில்/
அப்போதெல்லாம் அவர் காட்டிய அன்பும்,
பிரியமும்,பாசமும்,வாஞ்சையும் ,,,,
இப்போது அதே இடத்தில் முளைத்துள்ள
பவனில் இல்லை.
4 comments:
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...
வாழ்த்துக்கள்.
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
படம் அருமை....
வணக்கம் சே.குமார் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல்த்னபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும் ,கருத்துரைக்குமாக/
Post a Comment