30 Jun 2013

ரெடி ஸ்டார்ட்,,,,,

                        
டீக்கடைக்காரர்தான்சொன்னார். இவ்வளவு அவசரப்பட வேண்டாம். சிறிது நேரம்நிற்கட்டும். அப்புறமாய் எடுங்கள்,எடுக்கும் என்றார்.

சரி அதற்குள்ளாக ஒரு டீ சாப்பிட்டு விடலாம் சொன்னவரின் கடையிலேயே என்கிற யுக்தியும் யோசனையும் மேலிட ஒரு டீயை சாப்புடுகிறவனாகிப்போகிறான்.

போஸ்ட்ஆபீஸ் தாண்டிய படேகர் ரோட்டின் வாசல் அது.பிஸியான சாலை என சொல்ல முடியாவிட்டாலும் அது அற்றுமாய் இருக்கிற சாலை என்கிற அடையாளக் குறிக்குள் தன்னை காட்சிப்படுத்திகொள்கிற சாலையாய்/

மல்லாங்கிணறிலிருந்துபாண்டியன் நகர்வழியாக தனதுநீளம் காட்டி விரைந்து வருகிற சாலையது.கருப்பாய் தன் நிறம் காட்டி ஒரு பெரிய மலைப்பாம்பின் நகர்வுடன் தன் இருப்பைக்காட்டிக்கொள்கிற ஒன்றாய் பாண்டியன் நகர் தாண்டி போஸ்ட் ஆபீஸ் வந்ததும் மேலும் நேரே போகும் எண்ணமற்று இடது புறமாய் வளைந்து நகர் நோக்கிச் செல்கிறதாய்/

ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கிலான வாகனங்களையும் மனிதர்களையும் தன் மாரி
லேந்தி அன்றாடம் கடக்க வைக்கிற வித்தையை செய்து முடிக்கிற வேலையில் இருக்கிற சாலைஅப்படியேநேர் முகம் காட்ட மனமில்லாமல் ஏதோ இளங்காதலனிடம் பொய்க்கோபம் காட்டி முகம் திருப்பிக்கொள்கிற காதலியைப்போல வலது புறம் நோக்கி திரும்பி கோபம் காட்டாமல் நகர் நோக்கிச்செல்கிறதாய்/

அப்படியெல்லாம் ஓட்டம் காட்டுகிற அந்த சாலையைத் தாண்டியதுமாய் விரிகிற பட்டேல் ரோட்டின் வாயிலில்தான் இந்த சொல் விரிவும் பதிவும்நடந்தததாய் /

மஞ்சுளா டாக்டரின் வீட்டிற்கு எதிராய் முளைத்திருந்த திடீர் டீக்கடை  அது,கடந்து போனமாதம் வரை கண்ணில் படாத கடை  இப்போது எப்படி?,,,,

ஒரு வேளை  திருச்செல்வமதி மில் வேலையாட்களை வைத்து வியாபாரம் நடக்கலாம் என்கிற உத்தேசத்தில் கடையைஊணியிருக்கலாம்.இனி அதன் வியாபார அளவைப் பொறுத்து  கடையின் வேர் கீழ்வரை இறங்கிச்செல்லும்.

நகராட்சியின் ஆக்ரமிப்பு அகற்றலோ அல்லது நெடுஞ்சாலைத்துறையின் ஆக்ரமிப்பு அகற்ற லோ தெரியவில்லை.அங்கு வரிசையாக இருந்த கடைகளைஅகற்றியபின்ரொம்பநாள்கழித்து போடப்பட்டிருந்த கடையாய் இது.அதுவரைகடைகளில்லாமல்மில் வேலைக்காரர்கள் மிகவும் தான் திண்டாடிபோனார்கள்.

இப்போதென்ன ஒரு காலத்தில் திருச்செல்வன் மில்லின்  ஒரு சிஷ்ப்ட்டிற்கு வருகிற வேலை யாட்களின் எண்ணிக்கை 30 பேருக்குக்குறையாமல் இருக்கும்,மூன்று சிஷ்ப்ட். மும்மூனா 9என 90பேர்வரைதன்னில்அடைகாத்துவைத்துஓடிக்கொண்டிருந்தஸ்பின்னிங் மில்/

ஒருஊதாக்கலர்சேம்ப்ஒருடேப்ரிக்கார்டர்இப்படித்தான்அடையாளப்பட்டார்கள்அந்த மில்லில் வேலை பார்த்தவர்கள்.இவர்கள்தான் இன்னார் என.

வரிசையாய் நின்ற கடைகள் நான்கு நன்றாகஓடிய முன் பனிக்கால இரவுகளிலும்,அது அற்ற நாட்களிலுமாய் நான்கில் ஒன்றில் மட்டுமே கணக்கு வைத்து வாரம் தவறாமல் பணம் கொடுத் து விடுகிற வேலையாட்களும்,வஞ்சகமற்று நான்கிலுமாய் கணக்கு வைத்து வாரக்கடைசி சம்பளதன்று உழப்பித்திரிகிறவர்களையும் தன்னகத்தே வைத்து சுமந்து திரிந்த கடைகளாய் காட்சிப்பட்டஅவைகள் வெறும் டீக்கடைகளாக மட்டும் இல்லை.அரிசிமாவும், உளுந்தமாவும் அரைச்சிசுட்டதோசையும்இட்லியும் மொச்சையும், வடைகளும் காட்சிபட்ட கடைகளாயும் மில் வேலைக்காரர்களின் பொழுது போக்கு இடமாயும்/

90பேரில்60,70பேர்வரைஒரேயூனியல்இருந்தநேரம்ஓடிய மில்லின் ஓட்டமும், வேலைக்காரர்க ளுக்கு கொடுக்கப்பட்ட சம்பளமும்,போனஸீம்,இன்னும் பிற பிறவான ஊக்கத் தொகைகளும் யூனியன்பிரிந்துஇரண்டு,மூன்றாய்போன பின்பாக இல்லாமல் போனது, மில் நிர்வாகமும் ஆலை நட்டம் என ஆட்களைக்குறைத்தது.

கேட்டுப்போனபோது அப்படித்தான் செய்வோம் என்கிற பதில்நிர்வாகதரப்பிலிருந்து வர முனைப்பான யூனியன் ஸ்டரைக்கில் இறங்கிவிட அதன் எதிர் யூனியன்ஆட்கள் நிர்வாகத்தின் தூண்டுதலின்பேரில்வேலைக்குச்சென்றார்கள்.  பின் என்ன ஸ்டரைக் அர்த்தமற்றுப் போனது.

இவைகளை காட்சிப் பொருளாயும், செய்ய ஏதுமற்றவர்களாயும் பார்த்துக் கொண்டிரு ந்த கடைக்காரர்களின் குறைந்து போன வியாபாரம் போலவே மில்லிலும் வேலையாட்கள் குறைக்கப்பட்டு இப்போது மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வேலையாட்களாக அந்த மில்லில் தன்னை தக்க வைத்துக் கொண்டும்,புதுப்பித்துக்கொண்டுமாய்/

ஆனால் ஆக்ரமிப்பில் அகற்றப்பட்ட  டீக்கடைகள் திரும்பவுமாய் தன்னை புதுப்பிக்க மறந்து போனதாய் அல்லது மறுத்ததாய்  என ஏதோ ஒன்று நடை பெற்றுப்போனதொரு நாட்களின் நகர்வுகளில் தான் மஞ்சுளா டாக்டர் அங்கு வீடு கட்டி குடிவருகிறார்;

மில் குவார்ட்டர்ஸின் அடுத்த சுவராய் இருந்த மஞ்சுளா டாக்டரின் வீடு சற்றே பெரிதாகவே அவர்களது மனம் போல/

குடல் இறக்க ஆபரேசன் பண்ணவேண்டும், என  வேறொறு டாக்டரிடம் போய் நின்ற போது அவர் அம்புக்குறியிட்ட இடம் மஞ்சுளா டாக்டரின் கிளினிக்காகவே இருந்தது. அவர் கொடுத் த தைரியமும்,அவரது நம்பிக்கைவார்த்தைகளுமே அவனை உடனே குடலிறக்க ஆபரேஷனு க்கு சம்மதிக்க வைத்தது.20ஆயிரங்களில் நின்றவர் ஆபரேஷன் முடிந்ததும் பதினைந்து போதும் என எல்லை கோடு கீச்சினார்.

சந்தோசமும் ,சங்கோஜமாய் அவன் பணம் கொடுத்த நாட்களிலிருந்து இன்றுவரை அவரிடம் இருக்கிற மரியாதை இன்னும் கூடிக்கொண்டே போகிறதே தவிர குறையவில்லை.

மஞ்சுளா டாக்டர் குடிகொண்டிருக்கிற வீட்டைத்தாண்டி செல்கிற போதெல்லாம் அவனது நினைவு இதுவாகத்தானிருந்திருக்கிறது.

அந்த சாலை வழியே அப்படியே நூல்ப்பிடித்துச் சென்றால் ரயில்வே ஸ்டேஷனுக்கும், அப்படியே நகர் நோக்கியுமாய் சென்று விடலாம்.இடையில் வருகிற வேர் ஹவுஸ் கோடவுன்  எப்போதும் லாரிகளால் நிரப்பட்டு/

மாதத்தின் பாதிநாட்களில் அந்த சாலை லாரிகளிக்கு மட்டுமே சொந்தமாகிப் போகிறதாய். வடக்கத்திகாரர்களிலிருந்து,தெற்கத்திக்காரர்கள் வரை அங்கு ட்ரைவர் கிளீனர்களாக தென்படுவார்கள்/

அப்படி தென்பட்ட ஒரு நாளில் பட்டேல் ரோட்டின் வாசலில் சிலதப்படிகளே சென்ற அவனது இருசக்கர வாகனம் மிகச்சரியாக டீக்கடை முன்பாய் நின்று போகிறது.

அப்போது டீக்கடைக்காரர் சொன்ன வார்த்தைகளே மேற்ச்சொன்னதாய் பதிவாகிப் போக அவனும் அவர் சொன்ன ஒரு வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்தும்,அவரது கடையில் ஒரு டீயைக்குடித்து விட்டுமாய் பின் தனது இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்கிறான்.அவன் குடித்த டீக்கு வண்டியும் ஸ்டார்ட் ஆகிறது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

காட்சிகளை ரசித்தேன்...