சுருங்கித்தெரிகிற
அந்த முதிய விழிகளிலிருந்து
வழிகிற கண்ணீரின்
ஆழம் எதைச் சொல்லிச்செல்வதாக?
80 ஐ எட்டித்தொடப்போகிற
வயது கொண்ட
அவர் மாதங்களின்
முதல் வாரத்திற்குள்
முதியோர் பென்சன் வாங்க தவறாமல் வந்து விடுகிறவராக/
வலுவிழந்த வாழ்வின்
அடையாளங்கள்
இன்னுமாய் ஒட்டிக்கிடந்த
உடல் சுமந்து
மழையில் நனைந்த கோழியாய் நடுநடுங்கி வருகிறார்.
கட்டிய மனைவி
இல்லாது போயிருக்க,
பெற்ற பிள்ளைகள்
திருமணம் செய்த இடங்களில்
தங்கி விட தனித்திருந்த
அவர்
தன் உடல் திங்கும்
நோய்க்கு மருந்து வாங்கவே
இந்தப்பணத்தை
செலவிடுவதாய் சொல்கிறார்.
சுருங்கித்தெரிகிறஅந்த
முதிய விழிகளிலிந்து வழிகிற
கண்ணீரின் ஆழம்
எதைச்சொல்லிச்செல்வதாக/
9 comments:
பலரும் இவ்வாறு... வருத்தம்...
முதியவரின் வலிகளை இன்று பலரும் உணர்வதில்லை எல்லோருக்கும் வயதாகும் என்பதை அறிவதில்லை.
அந்திமதில் தனிமையின் துயரை அழகாய் அப்பட்டமாய் எடுத்துக் காட்டியுள்ளீர்கள் ஐயா.
//கண்ணீரின் ஆழம் எதைச்சொல்லிச்செல்வதாக//
வலி நிறைந்த கவிதை.
வணக்கம் வேல் முருகன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் சே,குமார் சார்,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment