15 Jul 2013

மின்சாரம்,,,,


நூற்றி ஐம்பத்தைந்து ரூபாய் 
மின்சாரக்கட்டணம் கட்டவேண்டும் 
என தேனீர் ஆற்றிக்கொண்டே 
சொன்ன கடைக்காரர் 
தொப்பை சரிந்து சிரிக்கிறார். 
 இனிப்பு பணியாரமுமாக  
கடையை நிரப்பிக் காட்சிப் படுத்துவார்.
போகும் தினந்தோறும்
ஏதாவது ஒன்றைப்பற்றி
பேசுபவராகவே உருவகப்படும்
அவரில் மனைவி,மக்கள்,குடும்பம்,
வரவு,செலவு,கடன்பாக்கி
பொருளுக்கு கட்டவேண்டிய தவணை,
என்பதே அவர் பேச்சகவும்பதிவாகவும்.
"சேவக்கூவ" கடைதிறக்கும் அவர்
இரண்டுரக வடைகளும்,
வடை,இனிப்பு,பீடி,சிகரெட்,கலர்,
சாந்திப்பாக்கு,பான்பராக்,
இவைகளுடன் தேனீர்,என்கிற வரிசையில்
"ஒன்றை வைத்துத்தானே இன்னொன்று போனி"
எனப்பேசும் அவரது கடையில்
இப்போதெல்லாம்
வெறும் தேனீர் மட்டுமே இருந்தது.
"வீட்டுக்காரிகீழ விழுந்ததுல
இடுப்பு ஒடிஞ்சுபோச்சு.
படுக்கையில கெடக்குறா ,
ஒம்போதுமணிக்கு கடை எடுத்துவச்சிட்டு
அவளுக்குப்போயி நாந்தான்
எல்லாம்பாக்கணும்."என்ற அவர்
காதருகே வந்து மெதுவாக கேட்கிறார்.
"சார் மலம் கழிக்கும் கோப்பை
எங்கு என்ன விலையில்கிடைக்கும்" என./ 

12 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இன்பமும் துன்பமும்

திண்டுக்கல் தனபாலன் said...

பாசமான பொறுப்பு...

விரைவில் அவரின் துணைவியார் நலம் பெறட்டும்...

கார்த்திக் சரவணன் said...

இவரல்லவா கணவர்...

Tamizhmuhil Prakasam said...

அன்பும் அனுசரணையும் கொண்ட அவரது கவனிப்பால், அவர் பூரண நலமடைய பிரார்த்தனைகள்.

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வனக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார் நன்றி தங்களதுவருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஸ்கூல் பையன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வனக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

கவியாழி said...

கணவனாக மனிதனாக அருமை

Ranjani Narayanan said...

வாழ்க்கை எப்படி புரட்டிப் போடுகிறது!
அன்பான கணவனின் பரிவான உபசரிப்பில் சீக்கிரம் உடல் நலம் தேறட்டும் மனைவி.

vimalanperali said...

வணக்கம் கவியாழி கண்ணதாசன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரஞ்சனி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/