15 Jul 2013

அகம்,,,,,,,


போகும் போது சென்ற வேகத்திலெல்லாம் 
இப்போது செல்லஇயலாது. 
அன்பின் மனிதர் செல்லத்துரைப்பாண்டியன் 
கட்டிக்கொடுத்தஎழுதுபொருள்,மற்றும் , நோட்டுக்கள் 
அடங்கிய பார்சல் ஒன்று இருந்தது. 
தொழிலின் பக்தி கட்டிய பார்சலில் பளிச்சிட்டது. 
நோட்டுக்களும்,புத்தகங்களுமாய் 
அடுக்கியவைகளை இறுகக்கட்டிமுடிந்திருந்தான். 
அவன் காதலியை மனதினுள் , 
உள்வைத்து பூஜிப்பதைப்போலவே./ 
இங்கிருந்தது இப்படியே தூக்கி எறிந்தாலும் 
பார்சல் அவிழாது போல/ 
அதே சைக்கிள், அதே சாலை,அதே நான்தான் 
என்கிற படிமம் அப்படியே நிலைகொண்டிருந்த போதும் 
போகிற போது சென்ற வேகத்திலெல்லாம் 
இப்போது திரும்ப இயலவில்லை, 
போகும்போது இருந்த வெற்றிடமும் 
இப்போது இல்லை சைக்கிளிலும்,என்னிலும்./

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/பூஜிப்பதைப்போலவே.../ அருமை...

Tamizhmuhil Prakasam said...

கருமமே கண்ணாய், செய்யும் தொழிலே தெய்வமென, செவ்வனே செய்தவரை வாழ்த்தி எழுதிய கவி அருமை ஐயா.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார் நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாய்/

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார் நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/