21 Jul 2013

கிளிஞ்சல்கள்,,,,,,,


                              
அன்பின் மனிதர் வீரநாகு அவர்களுக்கு வணக்கம்.நலம் நலமறிய ஆவல். உங்க ளை எப்படி அழைப்பது என்பதுவே எனக்குள்ள பிரதான பிரச்சனையாக/

அண்ணன்என்றா,நண்பர்என்றா,தோழர் என்றா,இல்லை சார் என்றா,,,,,,? சார் எனக்கூப்பிட்டு விடலாம்தான்,இருந்தாலும் சாரில்இருக்கிறஅந்நியம் கொஞ்சம் கெட்டிதட்டிப்போனதானவே/அதை தவிர்ப்பதற்காகவே இந்த மாதிரி வார்த்தை களைஅகராதியிலிருந்துஎடுத்துவிடலாமேஎனநினைப்பதுண்டுஅவ்வப்பொழுது

ஆனாலும்அவ்வப்பொழுதுஅதற்குஆட்பட்டுப்போகிறதன்மைநம்மைஆட்கொ ள்கிற கொடுமை இருக்கிறதே அதை சொல்ல வெளி இல்லை இங்கு/

நானும் தோழர் கோட்டை அவர்களுமாய் வந்த பயணம் நீண்ட நெடியது அல்ல. அதே நேரத்தில் அது அல்லாமலும் இல்லை.

பயணங்கள் கற்றுத்தருகிற பாடங்களும் அதுகாட்சிப்படுத்துகிறகாட்சிகளுமாய் மிகவும்,நெகிழ்வுக்குள்ளானதாயும்,நெருக்கமேற்படுத்திச் சென்றுவிடுவதுமாக
வே/

அல்லம்பட்டி முக்குரோட்டில்தான்தோழர்கோட்டைஅவர்களைப் பார்க்கிறேன். வருடங்கள் சிலவற்றிற்கு முன்பாய்அறிமுகமானஅன்பின்மனிதர். நல் உள்ளம் பட்டுத்தெரிகிறவர். ஒற்றைக்கையெழுத்தில் இரவோடு இரவாய் அவர்களது வேலையும் வாழ்வும் பறிக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட நாட்களின் பொழு தொன்றில் அறிமுகமான மனிதர்.அவர் சார்ந்திருந்த தொழிற்சங்கம் அவரை அறிமுகம் செய்துவித்த நாட்களில் கோட்டை யாய் தெரிந்தவர் வருடங்கள் சிலவற்றின் சிரமம் சுமந்த நகர்தலில் பணி கிடைத்த பின்னான நாட்களின் நகர் வுகளில் தோழராய் காட்சிப்பட்டு உள்ளம் தொட்டவர்.

விருதுநகர் டூ பாலவனத்தம் செல்கிற சாலையது.அல்லம்பட்டி முக்கு ரோடு திருப்புகையில் இடது கைகாட்டிதிரும்புகிறேன்.திரும்பியதும்எதிர்ப்படுகிற பஸ் டாப்பில் யாராவது தென்படுகிறார்களா யாராவது என ப்பார்த்தவாறு நின்ற பஸ்ஸைக்கடந்தும் வந்த குரல் பின்பிடரிவழியாகசெவிகளில்நுழைந்து என்னை ப்பிடித்துநிறுத்தியகணங்களில்அவரும் நானு மாய் பயணித்து வந்த இடம் சக்தி அண்ணனின் டீக்கடையாய் இருந்தது. 

ஒரு டீ ,ஒரு வடை அதற்கான காசு,,,,,,,,,,என்கிறஅடைப்புக்குறிக்குள் மட்டுமாய் அடங்கித்தெரியாமல் கடைக்கு வருகிற சக மனிதர்களிடம் அன்பும் வாஞ்சை யுமாய் தெரிவுபட்டுத்தெரிகிறவர்.அவரின் கடையில் தான் நின்றோம் சற்றே
 இளைப்பாறுதல் கருதி/

பணி முடிந்து வருகிற மாலை வேலையிலும் பணியின் அழுத்தம் பிள்ளையார் சுழியிடுகிறகாலைவேளையிலுமாய்அவரதுகடையில் தரப்படுகிற டீயே எங்களு க்கு ஊக்க பானமாய் /

ஊக்கம்தருகிற பானங்களில் இன்றளவும் டீயே முதன்மையாய் நிற்பதாய் உழைப்பின் மனிதர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.நாவின் சுவையறும் புகளில் படர்ந்து தொண்டை வழிபயணப்பட்டு வயிற்றை நிரப்புகிற அந்த நேரத்தில் அவர் தந்த டீக்கு நன்றி சொல்லி விட்டு ரிலாக்ஸாக கிளம்புகிறோம்.

கிராமத்துச் சாலையது.எனக்குத்தெரிய ஒரு காலத்தில் இரு புறமுமாய் முள் மூடிப்போயிருந்தஒற்றைச்சாலைஇன்றுசுத்தம்செய்யப்பட்டதன்இரண்டு  பக்கத் தையும் காட்டிக் கொண்டும், கை கோர்த்து கொண்டுமாய் தெரிவுபடுகிற இரட்டைச்சாலையாய்.

ஒரு பக்கம் போக,ஒரு பக்கம் வர என மனிதர்களும் மற்ற வாகனங்களு மாய் பயணித்துக் கொண்டிருந்தசாலையாய் காட்சிப்பட்டுத்தெரிந்த அதில்  நானும் தோழர் கோட்டையுமாய் சென்று கொண்டிருந்த வேளையில் அரிச்சலாய்  தூரத்தில் தென்பட்டீர்கள். நீங்களும் உங்கள் உடன் வேலை ராமச்சந்திரன் அண்ணனுமாய்/கண்ணில் பட்ட  இருவரின் உருவம் தாங்கி நெருங்கி விடுகி றோம் உங்களை இதோ வந்து விடுகிறோம் என்கிற சொல்தாங்கி/ உங்களைப் பார்த்ததுமாய் பிரேக்கிட்டு விட்ட வண்டியிலிருந்து இறங்கியதோழர்கோட்டை  உங்கள் இருவரின் தோள்தொட்டும் உங்களின் மீது நட்பு படர விட்டுமாய் வணக்கம் சொல்லிவிட்டு உங்களுடன் வேலை செய்ய கைகலப்பிற்கும், உழை ப்பின் முஸ்தீப்பிற்குமாய் முன் கை எடுக்க தயாராகையில் எப்படியிருக்கிறீர்கள் என உங்களை கேட்ட ஒற்றைக் கேள்விக்குவிரிவானபதில்வருகிறது உங்களிட மிருந்து/அந்த விரிவான பேச்சின் ஒரு வரி சுருக்கம் இதோ,,,,,,நீங்களெல்லாம் இருக்கும் போது எங்களுக்கு என்ன தோழர் என்பதுதான் .

அன்பான பேச்சும் கனிவான உபசரிப்பும் உங்களின் உருவாய் ஆகித் தெரிகிற போது எங்களுக்கென்ன மனக்கவலை என்கிற சொல்தாங்கி பிரயோகித்த கணங்களில்நானும்,நான்வளர்ந்தசூழலும்  உங்களைப் போலவேஇருந்ததால் ஒருவேளைஅப்படிஇருந்திருக்கலாம்.என்கிறபதில்வருகிறது என்னிடமிருந்து.
ஒரு விவசாயக்கூலியாய் வளர்ந்த என்னை வறுமையும்,அறியாமையும் போர்த் தியிருந்தசமயத்தில்அதிஷ்டவசமாயும்,என்சகோதரியின்தயவாலும்  கிடைத்த பணியும்பணி சுமந்த நிறுவனத்தில் சூழ்க்கொண்டிருந்த முற்போக்குவாதிகளின் மற்றும் தொழிற்சங்கவாதிகளின் தொடர்பாலும்இப்படியாய்தெளிவுபட்டு தெரிந் திருக்கலாம்நான்.அந்தத்தெரிவுஉங்களுக்குஇப்படியாய்காட்சிப்படலாம்.ஆனாலும்இன்னும்என்னுள்அந்தவிவசாயக் கூலி குடிகொண்டுதான் இருக்கிறான் என்கிற சொல்தாங்கி உங்களிடமிருந்து விடைபெற்ற போது கட்டம்போட்ட சட்டையிலிருந்த ஐந்து பட்டன்களில் ஒற்றை பட்டனை மாற்றி மாட்டியிருந்த உங்களின் பின்னால்  நின்ற பனை மரத்துடன் கைகோர்த்துக்கொண்டும்,அதை ஒட்டி வேர்விட்டுமாய் வளர்ந்திருந்த ஆலமரம் மரம் ஒன்று விழியில் விழுந்து படர்கிறதாய்/

விழுந்த காட்சி விரிவுபட அபூர்வங்கள் இப்படித்தான் அடிக்கடி பனை மரத்து டன் சேர்ந்து வேர்விட்டு வெளிப்படுகிற ஆலமரமாய் காட்சிதரும். நம் நட்பும் தோழமையும் இப்படித்தான் என்கிற சொல்லுடன் உங்கள் மூவரிடமிருந்துமாய் விடைபெற்றுக் கிளம்புகிறேன். அடுத்து உங்களைச் சந்திக்கும் போது எப்படி அழைப்பது என்கிற மெகாசைஸ் கேள்வியுடன்/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

டீ இல்லாத பதிவுகளை தேடிக் கொண்டிருக்கிறேன்... ஹிஹி...

வாழ்த்துக்கள்... நன்றி...

vimalanperali said...

டீ இல்லாத நாட்கள் போல ஆகிப்போகுமே,டீஅல்லாத பதிவு,
நன்றி தங்கள் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

டீ சாப்பிட்டப்படி படித்த பகிர்வு...
அருமை.

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/