26 Jul 2013

நெருடல்,,,,,,,,,


    

என்னை பார்க்கிற பொழுதெல்லாம்
தலையை குனிந்து கொள்கிறாள்.
அல்லதுபார்வையை வேறுபக்கம்
திருப்பிக்கொள்கிறாள்.
இல்லையெனில்
வான்வெளி ஆராய்ச்சி
செய்பவளாகிப் போகிறாள்.
அவள் எனக்கு சொந்தமோ,
சுற்றமோ,அக்கம்,பக்கமோ
கிடையாது.
அவளை நான் முன்,பின் பார்த்து
அறிந்தது கூட இல்லை.
கணக்கு ஆரம்பிக்க வேண்டும்
ஒருநாள் நான் வேலை பார்க்கும்
வங்கிக்கு வந்திருந்தாள்.
விபரம் கேட்டு விண்ணப்பம்
நிரப்பிய போதுதான்
அறிந்து கொண்டேன்.
அவள் விதவை என.
எனது மகளின் வயதைவிட
இரண்டு வயது குறைவான
அவளுக்கு
“ஒரு வயதில் குழந்தை இருக்கிறது”
என்றாள்.
பிழைப்பிற்கு மில்லில்
வேலை பார்க்கிறேன் எனவும்,
மில் வேலையில் வரும்
பணத்தை சேமித்து வைக்க
வேண்டும் என 
கணக்கு ஆரம்பித்துச் சென்றவள்
என்னை எங்கு பார்த்தாலும்
தலை குனிந்து கொள்கிறாள்.
அல்லது பார்வையை
வேறுபக்கம் திருப்பிக்கொள்கிறாள்.
இல்லையெனில் ,,,,,,,,,,,,,,,,,/ 

8 comments:

கவியாழி said...

அறிந்து கொண்டேன்.
அவள் விதவை என.//முடிந்தால் உதவி செய்யுங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

புரிகிறது...!

MANO நாஞ்சில் மனோ said...

உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்க சார்...!

கரந்தை ஜெயக்குமார் said...

புரிந்து கொண்டேன்

vimalanperali said...

வணக்கம் கவியாழி கண்ணதாசன் சார் நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/முடிந்தால்
உதவுவது மனித இயல்புதானே?

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் நாஞ்சில் மனோ சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/