தரை தொட்ட வண்ணத்துப்பூச்சி,,,,,
அவனதுசெய்கைகள்யாவிலும்முழுதானசம்மதமில்லை எங்களுக் கு.
அதற்காக அவனது செய்கைகளும்அர்த்தங்களும்அற்றுஇந்தவீட்டின் இயக்கம் இல்லை.
அவனின்அம்மாசொல்கிறாள். “பள்ளிக்கூடத்திற்குப் போற எந்த அவ சரமும்,பதட்டமும் அவன்ட்ட இல்ல,அந்த கவனத்த விட்டு வெளை யாட்டுகவனம் தான் அவன் மனசுல இருக்கு.காலையில கண்ணு முழிச்சதுலயிருந்து அவன் ஸ்கூல் விட்டுவந்துவீட்டுப்பாடம் எழுதி, படிச்சு முடிச்சி தூங்குறவரைக்கும் ஒண்ணொன்னுக்கும் அவன தெண்டாயிதம் போட வேண்டியிருக்கு..இவனோட கத்திகத்தியே எனக்கு அல்சர் கூடிப் போச்சு”,என்கிறாள்.“சரி,சரிவுடு அவன கூப்புட் டு ஒரு இண்டர்வியூ நடத்தீரலாம்,மெரிட்ல பாஸ்பண்றானா? இல்ல.. . ..” என்கிறேன் நான்.
அவனது உலகத்தில் படிப்பு ஒன்றும் எட்டிக் காய் கசப்பு இல்லை. டியூசன் இல்லாத பள்ளிப்படிப்பில் தினசரியான வீட்டுப் பாடம், படிப்பு, பரிட்சை அதில் தக்க வைத்துக் கொள்ளுமளவிற்கு மார்க் எல்லாமே அவனில் பிசகற்றே இதுவ ரை.பெரியஅளவிலான பின் னடைவு என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.
காலையில் எழுந்து முகம் கழுவப் போகிறவன் தண்ணீர் நிரம்பிய ப்ளாஸ்டிக் வாளியில் என்னசெய்வான்?அதில் அவனுக்குத் தெரிவது தான் என்ன என பிடி படுவது இல்லை எங்களுக்கு.
கோபம் கட்டவிழ்ந்த ஒரு நாள் காலை வேலையில் சொல்கிறான். “வாளியில இருக்குற தண்ணியில ஏங் மொகம் நெளிநெளியாவருது. பாதி முகம் மறைஞ்சு மீதி பாதி முகம் தெரியுது.அப்ப இந்த மீதியும் மறைஞ்சுட்டா பழைய முகம் வருமா?ரெண்டு,மூணு பேரு ஒரே நேரத்துல பாத்தா இப்படி ஒவ்வொருமொகமா பாதியும், மீதியுமா தெரியுமா?” எனக்கேட்ட அவனைதூக்கி முத்தமிடுகிறேன்.
மனித மனம் கொண்ட எல்லோருக்கும் சாத்தியப்படுகிற செய்கை தான் எனக்கும் சாத்தியப்படுகிறது அந்நேரம்.சரி ரைட் விட்டுவிடலா ம் என சொன்ன போதும் அப்படியெ ல்லாம் லேசில் விட்டுவிட முடி யாது எனத் தோன்றுகிறது.
முகம் கழுவும் போது கேட்ட கேள்வியும் அதை பார்த்த பார்வையுமே அவனின் அனைத்து செய்கையிலும்.
வீட்டின்பக்கவாட்டாககிடந்தவெற்றிடத்தில்நின்ற வேப்பமரம், சவுக் கு மரம்,பன்னீர் மரம் இத்தனையும் மூன்று வருடங்களாக நிழல் காத்து நிற்கிறது. சுற்றிலும் வேலி கட்டப் பட்ட அந்த இடம்தான் அவனது விளையாட்டு மைதான மாகவும்,பொழுது போக்கு மைய மாகவும் தோட்டமாகவும்.வானொலி,தொலைக்காட்சி,கம்ப்யூட்டர், செல்போன்,டிஷ் ஆண்டனா இவைகள் ஏதுமற்ற இந்த பொழுது போக்கு மையத்தில் அவனுக்கான விளையாட்டு சாதனங்கள் மரங் களும்,மண்ணும்,குச்சிகளும் அங்கு நின்ற அடி குழாயும் மட்டுமே.
அந்த குச்சிகளை ஒன்று விடாமல் பொறுக்கி ஒடித்து அடுக்கி வைத் து விட்டு எனது மனைவியை கூப்பிட்டுக் கொண்டு போய் காண்பிப் பான். என்ன வேலை இருந்தாலும் போட்டது போட்டபடி வர வேண் டும். இல்லையென்றால் அவன் முகம் தொடாமலேயே சுருங்கிப் போன இலையாகிவிடும்.கேஸ் தீர்ந்து போனால் எரிப்பதற்காக என்பான்.சொல்லும் போதே அவனது முகத்தை பார்க்க வேண்டுமே, ஆயிரம் வாட்ஸ்தான்.
நாற்பது,அறுபது,நூறு வாட்ஸ் பல்ப் எல்லாம் சரிதான்,ஆயிரம் வாட்ஸ்பல்ப் போட்டால் எப்படி பிரகாசிக்கும் நம் தோட்டம் என்பான். அலுவலகம் விட்டு உடல் தொங்கிப் போய் வரும் என்னிடம்.
பிரகாசிக்கும் தோட்டத்திலேயே இரவு சமைத்து சாப்பிட்டுவிட்டு அப்படியே மரங்களுடன் பேசியவாறே தூங்கிப் போக வேண்டும் என்பான்.ஆளுக்கொரு மரம் எனபொறுப்பு எடுத்துக் கொண்டு அதை வளர்த்து பெரியதாய் ஆக்க முழு சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடி குழாயிலிருந்து எத்தனை வாளி தண்ணீரை அடித்து ஊற்றுவது என சொல்லிவிட்டுப் போகும் அவன் அது சம்மந்தமான செயல் பாட்டிற்கு மறுப்புச் சான்றிதலெல்லாம் எதிர்பார்பது இல்லை எங்களிடம்.செயல் பாடுகளை மனதில் கூர் தீட்டியவனாகவே எந்நேரமும்.அது பாடம்,வீடு எது சம்பந்தப் பட்டதாயினும் சரி.
ஒரு ஞாயிறின் காலை வேளை சாப்பாட்டுத்தட்டின் முன் அமர்ந்து விட்டு அவனை தேடிய போதுதான் தோட்டத்தில் அவன் அமைக்கப் போகும் டெண்ட் பற்றி விவரித்தான்.சாப்பாட்டுக்குப் பின் ஈரக் கையைக் கூடத் துடைக்காமல் எந்நேரமும் பாடங்களில் தலை நுழைத்துத் திரியும் அவனின் +2 படிக்கும் அண் ணனை கூட்டிக் கொண்டு போனான் டெண்ட் அமைக்க.எதற்காக இந்த டெண்ட் என்றபோது சொன்னான்.
நமக்கு குடியிருக்க வீடு இருக்குப்பா,பாவம் காக்கா,குருவிங்க எல்லாம்......?மனம் தொடும் இந்த மாதிரியான கேள்விக்கு என்ன பதிலை சொல்லுவது என சொல்லுங்கள்.
அடிகுழாயை சுற்றி சிமெண்ட் தளம் போடப்பட்ட பிற்பாடான ஓர் நாளில் தளத்தில் நீர் உற்றி வாகு பார்க்கிறான்.நீர் இறங்கி மரங்க ளுக்கு எப்படி செல்லும் என.
அப்படியே மிக்ஸி,கிரைண்டர்,மசால் சாமான்,பாத்திரங்கள் பற்றி பேசத் தவறுவ தில்லை.அதிலும் பாத்திரம் கழுவுகிற அந்த ஸிங்க் இருக்கிறது பாருங்கள்,அது மாதிரி பெரியதாக நம் தோட்டத்தில் இருந்தால் நாம் நீச்சலடித்துக் குளிக்க வசதியாக இருக்கும் என்பான்.
நீச்சல் குளத்திற்கு இவ்வளவு இடம் தேவைப்படுமா? என பெரிய கம்பை எடுத்து அளக்க ஆரம்பித்து விடுவான்.சரி அது இருக்கட்டும் இப்போதைக்கு ஆவதுஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் அகல குழி பறித்து அந்தக் குழிகளுக்கு நீர் செல்ல ஒரு வாய்க்கால் அமைப்பது. அதுவே முக்கிய வாய்க்காலாகவும்,உப கிளைகளாகவும் இருக்கு மாறு பார்த்துக் கொள்வது அவசியம் என சும்மா கை கட்டி நின்று பார்த்துக்கொண்டிருந்த என்னையும் உள்ளே இழுத்துப் போட்டான் அவனது வேலைகளில்.
இது எப்படியிருக்கு?...... என்றான்வாய்க்காலை அமைத்து தண்ணீரை ஓடவிட்ட மறுகணம்.இதுக்காக படுக்கப் போன மனுசன இந்த மத்தியான வெயில்ல வேலை செய்ய விடாட்டி என்னடா?அப்புறமா சாய்ங்காலமா பண்ணிக்கிற வேண்டியதுதானடா?என்ற எனது மனைவியின் பேச்சை மறுதலித்தவாறே மரங்களை சுற்றி வருகி றான், பிரயாசையோடும்,வாஞ்ச்சை யோடும்.
தோட்டத்தின் நடுவாக அவன் செய்து வைத்திருந்த களிமண் பொம்மை களை எடுத்து ஓரம் கட்டி விட்டும்,மண்ணில் வரைந்தும்,கற்களை அடுக்கி வைத்து விட்டு வியர்வை மினு,மினுக்க நிற்பான்.அந்த அழகும், அவனிடம் நிரந்தரமாய் குடிகொண்டிருந்தஉழைப்பின் வாசமும்,அவனது அன்றாட செயல் பாடுகளை அர்த்தமுள்ளதாக்குகிறது.
மாதாமாதம் வீட்டிற்கு பலசரக்கு கொண்டு வரும் கணேஷ் தோழரை ரொம்பப் பிடிக்கும் அவனுக்கு.இவனை மாதிரியேதான் அவரும் உழைப்பின் வாசத்தோ டேயே திரிபவர்.அந்த ஒற்றுமைதான் இருவருக்கும் போலும்.அவரின் எதிரே எதும் கேட்பதில்லை.அவர் போன பிறகே அவனது கேள்விகள் ஆரம்பமாகும்.
“அவர் இவ்வளவு சிரமப்பட்டு இந்த வெயிலில் இவ்வளவு சரக்குகளை கொண்டுவராவிட்டால்என்ன?
கொஞ்சம், கொஞ்சமாககொண்டுவரவேண்டியதுதானே?” என்பான்.
அதோடு அரிசி,பருப்பு,மளிகை விலையையும் சரிபார்த்து எடுத்து வைக்கச் சொன்னால் தயங்கமாட்டான். அரிசிவிலை பற்றி கலவைப் பட்டு அடுத்த தடவ வெலக்கொறச்சலானஅரிசியவாங்கனும்மாஎன்பான்.அவனது அம்மாவிடம்.
கேஸ்சிலிண்டரின்பில்லைப்பார்ப்பான்.பாலுக்கும்,காய்கறிக்கும்,
இதரவைகளுக்கும் ஆகும் செலவை அறிந்து கொள்ள ஆவல் கொள்கிறான்.
இருசக்கரவாகனத்தின்பெட்ரோல்செலவு,புத்தகங்கள்,பேப்பர், சேலை,பேண்ட்,சட்டை, பள்ளி சீருடை என வளரும் பேச்சுக்கு தடுப்புச் சுவர் எல்லாம் கிடை யாது.
கல்யாணம் முடிந்து ஒரு வருடம் கழித்துத்தானே குழந்தை பிறக்கும் என கேட்கிறான்.நன்றாகப் படித்தால்தான் நல்ல இடத்திற்கு வேலை க்கு ப் போகலாம், நல்ல இடத்தில் வேலை பார்த்தால்தான் நல்ல குடும்பத்தில் பெண் எடுக்கலாம் என்கிற எனது பேச்சிற்கு இப்படியாக எதிர் கேள்விவருகிறது வருகிறது அவனிடமிருந்து.
இவைகளை கேலியாக எடுத்துக் கொண்டு புறந்தள்ளுவதா அல்லது .........என புரியவில்லை.
இப்படி அவனது அன்றாட நகர்வுகளில் உள்ள அக்கறையை பிணைவயும் வைத்து அவனை எங்களது குடும்பத்தின் ஒரு நாள் தலைவன் ஆக்கலாமா, என்பதே எங்களது முழு நேர சிந்தனையாக உள்ளது இப்பொழுது.
ஆயினும் .........அவனது செய்கைகள் யாவிலும் முழுமையான சம்மதமில்லை எங்களுக்கு.
அதற்காக அவனது செய்கைகளும்,அவற்றின் அர்த்தங்களும் அற்று இந்த வீட்டின் இயக்கம் இல்லை.
4 comments:
சின்ன சின்ன கேள்விகள்... ஏக்கங்கள்... ஆதங்கங்கள்... அனைத்தும் ரசிக்க வைத்தன... இதை விட என்ன வேண்டும்...? வாழ்த்துக்கள் சார்...
பிள்ளையின் ஆசைகள், கனவுகள், கேள்விகள், உழைப்பு, அக்கறை என
அனைத்தையும் அழகாய் சொல்லியுள்ளீர்கள். தங்களது பிள்ளைக்கு இனிய வாழ்த்துகள்...
வணக்கம் திண்டுகல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
Post a Comment