வழக்கம் போல அன்றும் முக்கு ரோட்டில் இருக்கிற பாஸ்கர் கடையில் டீசாப்பிட்டுக் கொண் டிருக்கிறேன்.
தொடர்ச்சியாய் பத்து நாட்களாய் பெய்து தீர்த்த மழை இப்பொழுதான் ஒரு இரண்டு மூன்று நாட்களாய் இடைவெளி விட்டு பின்வாங்கியிருக்கிறது. குடைகளையும், ரெய்ன் கோட்டுகளையும் அவரவர் வீட்டிற்குள் வைத்து விட்டு கொஞ்சம் கை வீசி நடந்த பொழுதாய் இருந்தது இன்று.
காக்கைகளும்,குருவிகளும்,மைனாக்களும் இன்னும் பிறவைகளுமாய் தங்களது கூட்டை விட்டு சுதந்திரமாய் சுற்றித்திரிந்த நேரம்.சற்றே அகன்று விரிந்து பறந்த விசாலமான வெளியில் அமைந்திருந்த கடையின் முன்னும்,பக்கவாட்டிலும்,
கடையினுள்ளுமாக பேருந்தை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் அங்குதான் நிற்பார்கள்.
அங்கிருந்து பக்கத்திலிருக்கிற,மற்றும் தொலைதூர ஊர்களுக்கு செல்கிற பேருந்துகள் அந்த வழியைத்தான் தேர்ந்தெடுக்கும்.
1,2,3,,,,,,,,,,,என வரிசையாக சில கிலோமீட்டர் தூர வித்தியாசத்தில் அடுக்கப்பட்டிருக்கிற ஊர்களுக்கு அதுவே பிரதான சாலையும் கூட/சாலையும் சாலை இருக்கிற வெளியும்,கடையு ம் ,கடையின் சுற்று வெளியும் கொஞ்சம் காய்ந்து ஈரமற்றும் சொதசொதப்புஇல்லாமலும். பரவாயில் லை கொஞ்சம் நன்றாக இருக்கிறது.ஆசுவாசமாயும் கூட/
சாலையில் வாகனங்கள் செல்கின்றன.மிதி வண்டிகள் போகின்றன.மனிதர்கள் நடக்கிறார்கள்.கூடவே காற்றும் அவர்களினூடாக புகுந்து பயணிக்கிறது.அதன் பயணம் மிடிவில்லாததாக,சாலைகளின் விரிவைப்போல/
ஆவி பறக்கிற டீயை ஊதிக்குடிக்கிற ஆர்வத்தில் இருக்கிற போதுதான் அந்தக்குரல் என்னை ஈர்க்கிறது.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்,ஏதாவது வண்டி வருதா சொல்லுங்க”என கையிலிருக்கிற நீளமான அலுமினிய குச்சியை இறுகப்பற்றி தூக்கிப்பிடித்தவறாய் கேட்கிறார்.
அவர் கேட்டுக்கொண்டிருக்கிற போதேஅவரது குரலை கடந்து இரு சக்கர வாகனங்களும், வேன்களுமாய் செல்கின்றன.அப்படி செல்லும் வேன்களும்,இருசக்கர வாகனங்களும் அவரை ஏளனப் பார்வை பார்த்தவாறும்,அவரது குரலை இழுத்து தரையில் போட்டு மிதித்து விட்டு சென்றவாறுமாய்/
டீக்கடைக்காரார்தான் சொன்னார்.அவர் பக்கத்து ஊரில் ஆசிரியராக பணிபுரிவதாகவும், அவருக்கு பார்வை சரியாகத்தெரியாது எனவும் /
அப்போதுதான் அவரை முழுமையாக கவனிக்கிறேன்.அடர்நிறத்தில் மிக சாதாரணமான நூல்ச்சேலை,அதற்கேற்ற நிறத்தில் சட்டை,காலில் சாதாரண செருப்பு,இருகப் பிண்ணியிருந்த ஜடை,வட்டமான குங்குமப்பொட்டு,அதிகமாய் இல்லாத பவுடர் பூச்சு,,,,, என மிகவும் சாதாரணமாயும்,எக்ஸட்ரா மேக்கப் எதுவும் இல்லாமலும் பார்வையற்றவர்களின் உற்ற துணையான அலுமியக்கம்புடன் நின்றார்.அதுதான் அவர்களுக்கு துணை போலும்.
“பார்வையற்றவர் எப்படி பாடம் எடுப்பார் பிள்ளைகளுக்கு”?என்கிற உயர் காழ்ப்புணர்ச்சி காரணமாய் அவரை அறிந்தவர்கள் யாரும் அவரை ஒரு பொருட்டாகவே நினைக்காத மனோ நிலையுடனேயே/
“பார்வ நல்லா உள்ளவுங்களே பாடம் ஒழுங்கா எடுக்குறதுல்ல,இந்த லட்சணத்துல இவுங்க எப்பிடி”?,,,,,,,, என என்னுடன் வேலை பார்ப்பவர் ஒரு அர்த்தப்பூர்வமான(?/)கேள்வியை எழுப்பு கிறார்.
அதேகேள்வியும்சந்தேகமும்,எனக்குஅன்றாடம்தேநீர்தருகிறகடைக்காரருக்கும்,அவரைப் போலவே வெகு சிலருக்கும் இருக்கும் போலும்.அதனால்தான் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காத உயர்ரக(?/) மனோபான்மையுடன்/
அதான் இன்னும் பத்து நிமிஷத்துல பஸ் வந்துருமுல்ல,அதுல ஏறிக்கிற வேண்டியதுதான?ஏன் இப்பிடி அவசரப்படுறாங்க,என்கிற என்னின் பேச்சு அவருக்குக்கேட்டிருக்கும் போல, “இல்ல ஏற்கன்வே லேட்டாயிருச்சு,இன்னும் லேட்டாப்போனா அவ்வளவு நல்லாயிருக்காதுன்னு தான்,,,, ”என தொடர்ந்து பரிதவிப்பவராய் “எக்ஸ்க்யூஸ்மீ ஏதாவது வண்டி வந்தா சொல்லுங்களேன்”என்கிற அவரது குரலை தொடர்ந்துபதிவுசெய்துகொண்டே இருக்கிறார்.தாயின் அரவணைப்பிற்கு ஏங்கும் குழந்தையைப்போல/
அந்தக்குரலைகேட்டவாறும்,அவரை பார்த்தவாறும் டீயை குடித்து முடித்தவனாக அந்தஇடத்தைவிட்டு நகன்றுவிடுகிறேன் கனத்த இதயத்துடனும்,கையறுநிலையில் உள்ளவனுமாக/
நான் அங்கிருந்து நகன்று வெகுநேரம் கழித்த பின்பும் கூட அந்த பார்வையற்ற டீச்சரின் பரிதாபமான மனிதக்குரல் காற்றின் திசைகளில் கலந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
6 comments:
அவரது பரிதவிப்பும், சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்கிற பரபரப்பும் புரிகிறது.... கலங்கவும் வைத்தது...
அவரது கடமையுணர்வுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!
வழமையான சாதாரண நிகழ்வுகளை நீங்கள் எழுதும் விதம் வாசிக்க நன்றாக உள்ளது. சில சம்பவங்கள் உணர்வுப்பூர்வமாக உள்ளது தனிச்சிறப்பு.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் தமில்முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் விச்சு சார்.நன்றி தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/
Post a Comment