ஆமாம் தாயே மறக்கஇயலவில்லை .
கருங்கல் உரலில் நீ இடித்துத் தந்த
எள்ளுருண்டையின் சுவையை.
ஆமாம் தாயே மறக்கஇயலவில்லை .
துவரங்காய் பறித்து
அவித்துத் தந்த நாட்களை.
ஆமாம் தாயே மறக்க இயலவில்லை.
உளுந்தம்காயும் தட்டாம்பயறும்,நிலக்கடலையுமாய்
நீ நிலத்திடமிருந்து
வாங்கித் தந்த நாட்களை.
ஒவ்வொன்றின் அறுப்பிலும்
ஒவ்வொரு சுவையும்,வாசனையும்
உணர்த்தி மறைந்து போன
உன்னையும்,
வீட்டுமனைகளாகிப் போன
விளை நிலங்களையும் மறக்கமுடியவில்லை
5 comments:
இனிய நினைவுகள் அப்படித்தான்...
படத்தில் உள்ளதும்... இனி படத்தில் தான்...!
என்றும் மறவா நினைவலைகள்...
பெற்ற தாயின் அன்பும், நிலத்தாயின் அன்பும் என்றென்றும் போற்றி வணங்க வேண்டியவையே !!!
அழகான வரிகள் ஐயா...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நிலத்தாயும்,பெற்றதாயும் வணங்கப்பட வேண்டியவர்கள் என கருத்துக்கூறிய தங்களின் வருகைக்கு நன்றி/
இனிய நினைவிகலை தொடர வைக்கலாமே?திண்டுக்கல் தனபாலன் சார்,
Post a Comment