27 Jul 2013

பூப்பந்து,,,,,,


  

வீட்டுக்குள் வந்த  குழந்தை
அம்மா என்கிறது.
அத்த்,,,த என்கிறது.
மாமா என்கிறது.
அண்ணா என்கிறது.
அப்பா எனச் சொல்கிறது
தனது மழலை மொழி மாறாமல்.
கைதட்டி சிரிக்கிறது.
முகத்தை கோணல்
காட்டி பழிக்கிறது.
புரியாத பாஷையில்
ஏதேதோ சொல்லி மகிழ்கிறது.
ஒவ்வொரு பொருளாய்
கைகாட்டி கேட்கிறது.
சிலவற்றை இழுத்து
கீழே போட்டும் விடுகிறது.
வீடு முழுக்கவுமாய் ஓடித்திரிகிறது.
தனது கையில் வைத்திருந்த
ப்ளாஸ்டிக் பந்தை
என்னிடம் கொடுத்து
உருட்டு விடச்சொல்லி
தன்னிடமிருந்த பேட்டால் அடிக்கிறது.
வாயில் எச்சில் ஒழுக,,,,,
ஹால்,அடுப்படி,பாத்ரூம்
என ஒவ்வொரு இடத்திலுமாய்
தனது இருப்பை பதிவு
செய்த குழந்தை
நடு ஹாலில் சிறுநீர் கழித்து விட்டு
தனது தாய் அதட்டி அழைக்கவும்
சென்று விடுகிறது.
கணநேரத்தில் பூத்து மலர்ந்த
பூ ஒன்று சட்டென காணாமல்
போனதாய் ஒரு மாயத்தோற்றம்
என்னுள் எழுந்து மறைவதை
அந்த நேரத்தில்
தவிர்க்க முடியாதவனாய் நான். 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வில் படங்கள் எல்லாம் அட்டகாசம்... பாராட்டுக்கள்...

Tamizhmuhil Prakasam said...

சிறு கிள்ளையின் செயல்களை அழகாய் கூறியுள்ளீர்கள். மிகவும் இரசித்தேன். வாழ்த்துகள்.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும் , கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/