சிவப்புக்கலர் ட்ரவுசர் அது.
இடுப்புப்பட்டையில் அழுக்கேறி உடலை
இறுகப்பற்றியிருந்த அந்த டரவுசர்
அய்யாக்காளை டெய்லர் தைத்தது.
பெரியதாக அளவெல்லாம் எடுக்கவில்லை அவர்.
கீழ் நோக்கி ஒருமுறை,மேல் நோக்கி ஒருமுறை
இடுப்பைச்சுற்றிலும்
ஒரு முறை என
நிற்க வைத்து சுற்றிவிட்டுஅளவெடுத்து
தைத்த டரவுசர்.
உழைப்பாளியின் உடலுக்கு இது போதும்
என நினைத்திருப்பார் போலும்.
எனக்குப் பிடித்திதிருந்த கலரில்
தைத்த அந்த ட்ரவுசரில்
இரண்டு பக்கமுமாய் பைகள் இருந்தன.
அதில் காணப்பட்ட பட்டன்கள்
நான்குமே சிவப்புக்கலரில்.
இடுப்பை இறுகப்பற்றியும்,
கீழ் நோக்கிய இறக்கம் சரியாயும் இருந்த
அந்த ட்ரவுசர் என்னிடம்
ஒன்றுதான் இருந்தது.
கலரும் உடல் பற்றிய அதன் இறுக்கமும்
மிகவும் பிடித்துப்போனதால் அதையே
தினமும் துவைத்து
அணிந்து கொண்டேன்.
ட்ரவுசர் அணிந்த வெற்றுடலின் மேல்
நூல்த்துண்டுஒன்று எப்பொழுதும்/
உழைப்பின் தளங்களில்தலையில் கட்டிய
துண்டும் இடுப்பைப்பற்றியிருக்கிற
சிவப்புக்கலர் டரவுசருமாய்
என் பணி நாட்கள் நகர்ந்த நேரங்கள்
எனக்கு மிகவும் பிடித்திருந்தன.
பால்ய நினைவுகளைப்போலவே/
10 comments:
சிறு வயதில் ஒரு உடை பிடித்து விட்டால் அதையே போட்டுக் கொள்வோம்.
நினைவுகளை அசை போட்ட விதம் அருமை
சிவப்பு டவுசரை ரசித்தேன்...
பிடித்த ஒன்றை விடாது பற்றிக் கொள்ளும் பால்ய வயது நினைவுகளை மீட்டெடுத்தது கவிதை வரிகள். அருமை !!!
ரசித்தேன் சுவைத்தேன். படம் அருமை
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
சிறுவயதில் பிடித்த உடையைவிட அணிந்ததை விட அவசியம் கருதி அணிந்தவர்கள்தான் ரொம்பப்பேர்.அதில் சிவப்பும் ஒன்றாய்/தாபல் பைடரவுசரும், தோள்ப்பட்டையோரம் கிழிந்த சட்டையும் ,மஞ்சள்ப்பையும்தானே நன் சிறுவயது அடையாளங்கள்.இன்று போல அன்று வாக்கரிலிருந்து இதர இதரவையான வசதிகள் ஏது/அதுவும் இல்லாத வீடுகளில் அப்பொழுது 100 க்கு 90 வீடுகள் இல்லாதவீடுகள்தானே? அதில் மனம் பிடித்த உடையை விட அத்தியாவசியத்தை மனம் பிடித்தாய் ஆக்கிக்கொண்ட தருணங்களே இங்கு அதிகமாய்/நன்றி முரளிதரன் சார் தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ரசிக்குமளவு இருக்கிற டரவுசராய் சிவப்பு,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக சே குமார் சார்.
பிடித்த ஒன்றை விட கிடைத்த ஒன்றை பிடிக்கப்பண்னிவிட்ட நிலைகள்தான் நம்மில் ஆழமாய் வேருன்றி/நன்றி தமிழ் முகில் பிரகாசம் சார், தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
Post a Comment