15 Jul 2013

விருந்தாளி,,,,


வந்திருந்தவனுக்கு வயது
பதினெட்டிற்குள்ளாய் இருக்கலாம்.
சிவப்பாக இருந்தாலும்
களையகவே தெரிந்தான்.
கலர் பொருத்தமற்று
அனிந்திருந்த ஆடைகள்
நன்றாகவே இருந்தன.
எனது மகனுடன் படித்தவனாம்.
பள்ளி இறுதி முடித்துவிட்டு கல்லூரியில்
காலடி எடுத்து வைக்கப்போகிறான்.
தந்தை கொத்தனார் வேலையும்
தாய் வீட்டு வேலையுமாய் செய்து
சம்பாதிக்கிற பணத்தில்தான்
குடும்பத்தின் ஓட்டம்.
வாரக்கடைசி பள்ளி விடுமுறை நாட்களிலும்,
அரசாங்கம் விடுப்பு அறிவிக்கிற
நாட்களிலுமாய் அவனும்
ஏதாவது வேலைக்குச் சென்றுவிடுகிறான்.
அவனது படிப்பிற்க்கான செலவை ஏற்க/
இப்போது அது காணவில்லை என
என் பையனிடம் சொல்லியனுப்பிவிட்டுதான்
வந்திருந்தான்.
கேட்டின் அருகே தயங்கித்தயங்கி நின்றவனை
கையசைத்துக்கூப்பிட்டேன்.
வந்தவன் பையிலிருந்த
செல்போனை எடுத்துக் காண்பித்து
இதை வைத்துக்கொண்டு பணம் தாருங்கள் என்றான்.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இளமையில் வறுமை... கொடுமை...

ezhil said...

கல்விக்காக கஷ்டப்படுவது வருத்தமாக இருக்கிறது...ஆனால் அவர்களையும் இந்த நுகர்வுக் கலாச்சாரம் ஆட்டுவிப்பது வருத்தமே...

Yaathoramani.blogspot.com said...

முடித்த விதம் அருமை
அதிகம் சிந்திக்க வைத்தது

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Tamizhmuhil Prakasam said...

பணத் தட்டுப்பாட்டினால் கல்வி இழந்த இளம் பிள்ளைகள் எத்தனையோ....அவர்தம் மன வருத்தத்தை எடுத்துக் கூறிய கவிதை அருமை...

vimalanperali said...

வணக்க்ம் தமிழ் முகில் பிரகாசம் சார்.கல்வி இழந்த பிள்ளைகளின் வருத்ட்தங்கள் இங்கே சமூகம் முழுவதுமாய் விரவிக்கிடப்பதாய்/