இறங்கிச் சொட்டிய நீரின் வரிகள் சொல்லிச் சென்ற சேதியை அறிய காத்தி ருந்த பறவைகள்,வண்டுகள்,பூச்சிகள் எல்லாம் இடம் பெயர்ந்து போய் விட்ட நேரத்தில் கீழே நின்றிருந்த எனது மகனின் மீது இறங்கிச் சொட்டிய நீரின் துளி வெடித்த சப்தம் “டப்”என வெடித்துக் கேட்கிறது.
வெடித்துக் கேட்டசப்தம் அங்கிருந்த யாருக்கும் கேட்காததாய் இருந்திருக்கும் போல.யாரும் அப்படியெல்லாம் ஆச்சரியமாக திரும்பிப் பார்த்து விடவில் லை.காக்கா,குருவி,மைனா,இன்னும் நிறைய,நிறையனவாய் நிறைந்து போனவைகள் எல்லாம் எதையும் அறியும் ஆவலற்று திரிந்ததாய் எனது மகன் சொல்கிறான்.
“அப்படியெல்லாம்இல்லை,அததற்கானவேலை அததற்கு,விட்டுவிடு,அதைப் போய் தொந்தரவு செய்து கொண்டு”என நான் பதிலுரைத்த எனது மகனுக்கு வயது பதிமூணு.ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.காக்கி பேண்ட்,ஊதா சட்டை கொண்ட பள்ளியின் யூனிபார்மில் பார்க்க நன்றாக இருந்தான்.
அவனது கலருக்கு ஏற்ற யூனிபார்ம்எனஎனதுமனைவிஅடிக்கடிசொல்லுவாள். கேலி கூடப் பண்ணுவாள்.அந்த கேலிக்கு அவன் சிணுங்கும் சிணுங்கல் இருக்கிறதே,அடேயப்பா,பார்க்க கண்கள் இரண்டு போதாது.
காலையில் எழுந்து பள்ளிக்குக் கிளம்பி அந்த புத்தகமூட்டையை தூக்கி சுமக்கும்பிள்ளைகள்எல்லோருமேவருத்தப்பட்டு சுமப்பவர்களாகிப்
போகிறார்கள்.போதாதஇரண்டுகண்களுடனேயேஅதைபார்த்தவனாகிப்போகி ற நான்அதன்படியேதோற்றமளித்தஅவனைப் பார்க்கிறேன்.
அவன்சொல்கிறான்.“அப்பா திரும்பவும் மழை ஆரம்பித்து விட்டது” என.
“ஆகா என்ன செய்வது மழை பெரியதாக பெய்ய ஆரம்பித்து விட்டால் நமது பாடு சங்கடமே,ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்கிக் கொள்ளலாம்.இங்கு வரிசை யாக நிற்கிற கட்டிடங்களில்,இருந்தாலும் அவை எவ்வளவு தாங்கும் இங்கு காத்துநிற்கிறமனிதர்களை,அவர்களின் எண்ணங்களை,ஆசைகளை,நிராசை களை,வெறுப்புகளை இன்னும்,இன்னுமானவைகளை.”மாலை ஆறு பதினை ந்துக்குப் போக வேண்டிய வண்டி மணி 6.40 ஆகியும் இன்னும் கடந்து போகவில்லை.தென்காசி பாசஞ்சர்.6.15க்கு கிளம்பி இரண்டரை மணி நேரத் தில் தனது இலக்கை அடையும்.அந்த வண்டியின் கிளம்பல் என்று தாமதம் போலும்.அதன் பாதிப்பு கேட் அடைப்பிலும் தெரிகிறது.
கால் மணி நேரமாய் ரயில்வே கேட்டின் அடைப்பு நிலைகொண்டிருக்கிறது என கோபப் பட்டவர்கள் யாரையும் கவனிக்காதவர்களாய் எங்களது பேச்சு ஒரு ஓரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மழை காலம் இது எங்கிருந்து வரு கிறது நீரின் வரிஎனஅறியும்ஆவல்கிளம்பியநேரத்தில் ரோட்டை, ரோட் டோர கட்டிடங்களை,சினிமாதியேட் டரை மனிதர்களை,பேருந்துகளை,சுற்றி நின்ற இரு சக்கர வாகனங்களைமற்றும்எல்லாவற்றையுமாகவும்,அவைகள் நின்ற
ரோட்டடியிலுமாகப் பார்க்கிறேன்.
வேஷ்டிதுண்டு,கைலிசட்டை,பேண்ட்இன்சர்ட்,டீசர்ட்ஜீன்ஸ் என்கிறஆடைக ளில் பொதிந்துகொண்டு,இருசக்கரவாகனங்களில்,பேருந்துகளில்,சைக் கிள்களில்,பாதசாரிகளாக காட்சிதருகிறார்கள்.வடிவமைத்து செதுக்கி,
உதிர்ந்த துகள்கள் போக மிஞ்சிய மனிதஉருவாய் காட்சிதந்த அவரவர்களின் மீது யாதொரு குற்றமும் இல்லை இந்த கணம் வரை. மூடிய ரயில்வே கேட்டில் காத்திருப்பதை தவிர்த்து.
அவர்களதுகாலடியிலும்பக்கவாட்டிலுமாகவும்நின்றுகொண்டிருந்த வண்டிக ளின்ஓரமாயும்முழுவதுமாக பறந்து அமர்ந்திருந்ததூசியும்அழுக்குமாய் காட்சி யளித்ததார்ச்சாலையில் பறந்தகொசுக்கள்,ரீங்காரமிட்ட வண்டுகள்,மாலை யின் மயங்கலில் அடர்ந்த மரம் தேடி அடைந்த பறவைகளின் சப்தம்,,,,,,,,என காட்சியளித்த நேரம்தான் இந்த காட்சியும் பதிவாகிறது.
மழைபெய்யவில்லையே,.காணோமே மழையை என அவனிடம் சொன்னபோது “இல்லை எனது தலையின் மீது இப்போதுதான் இறங்கிச் சொட் டியது” என்கிறான்.
சுற்றிலுமாக பார்த்து விட்டு “இல்லை,மரத்தின் இலையிலிருந்து இறங்கிச் சொட்டியிருக்க வேண்டும்.பெய்து முடித்திருந்த மழையின் மிச்சம் மீதி மரஇலைகளின் மீது ஒட்டி இருந்திருக்க வேண்டும்,அவைதான் இப்பொழுது உன்மீது மழை நீர் வரிகளாக இறங்கிச் சொட்டுவதாய் அறிகிறேன். மற்றபடி
மழையெல்லாம்இல்லை”என்கிறேன்.
ரோட்டடி,வண்டிகள்,கார்கள்,மனிதர்கள்,,,,,,,,,,,,,,,மற்றஎல்லாவற்றையுமாக பார்க்கச் சொல்கிறேன்,ஆமாம் மழை பெய்யவில்லை,என்பதை உறுதி செய்த அவன் என்னைப் பார்க்கிறான்.நான் அவனைப் பார்க்கிறேன்.திரும்பத்திரும்ப எனது பார்வை அவன் மீதும்,அவனது பார்வை எனது மீதுமாக மாறி,மாறி மோதிக் கொண்ட நேரத்தில் மரத்தை அண்ணாந்து பார்த்த நான் அதன் நீள,நீளமானஇலைகளையும்,அதன்அடர்த்தியையும்,அதன் ஆகுருதியையும்,
அதன் வளர்ச்சியையும்,,,,,,,,, கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.ஐம்பது வருட சரித்திரம் உண்டு என்கிறார்கள்.அந்த மரத்திற்கு.
ராமமூர்த்திரோடுஉருவானகாலத்திலிருந்துஇருக்கிறது என்கிறார்கள்.இரு க்கலாம்,ஐம்பதுவருடங்கள்மட்டும்இல்லை.அதற்கும்கூடுதலாகஇருந்தாலும்ஆச்சரியப் படுவதற்கு இல்லை. அவ்வளவு பெரியதாக தனது தோற்றம் காட்டி நின்றதை நான்கு பேர் சேர்ந்தால்தான் சுற்றி வளைக்க முடியும்.“ஆத்தி எத்தத்தண்டி”என்கிற இலக்கணத்துக்கு மாறாததாய் காட்சியளித்தது.
நான்குபேர் சுற்ற,நாற்பதுபேர்அதைபார்க்க,பூக்கள்பூக்க,இலைகள் உதிர,காய்கள் வெடிக்க,மறுபடியும்மறுபடியுமாய்இவையெல்லாம்சுழற்சியாய் நிகழ,,,,,,பார்ப்பவர்க்கும்,கேட்பவர்க்கும் ஒரே சந்தோஷமாகிப் போகிறது. .அந்த சந்தோஷம் நிலைக்க நான்,எனது என்றில்லாமல், நாம், நமது என யோசித்து அல்லது நிலை கொண்டு மரங்களை வளர்க்காவிடில் கூட அதிலிருந்து சொட்டும் நீரை ரசிக்க,ஏற்க கற்றுக் கொள்வோம் வாருங்கள்.
அடுத்து மழை நின்ற கணங்களில் மரதடியில் நிற்கும் யாரும் மழைநீர் சொட்டுவதைக் கண்டு அஞ்சி ஒதுங்கிவிட வேண்டாம் என இதன் மூலம் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
7 comments:
ஐம்பது வருட மரம் கண் முன்னே தெரிந்தது...!
உங்களின் இந்த பகிர்வு நான்கு முறை எனது dashboard-ல் வந்துள்ளது... கவனிக்கவும்...
தொடர வாழ்த்துக்கள்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
"ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்கிக் கொள்ளலாம்.இங்கு வரிசை யாக நிற்கிற கட்டிடங்களில்,இருந்தாலும் அவை எவ்வளவு தாங்கும் இங்கு காத்து நிற்கிற மனிதர்களை,அவர்களின் எண்ணங்களை,ஆசைகளை,நிராசை களை,வெறுப்புகளை இன்னும்,இன்னுமானவைகளை."
அழகான வரிகள் . மிகவும் இரசித்தேன். வாழ்த்துகள்.
நன்றி தமிழ் முகில் பிரகாசம் சார்.தங்களது வருகைக்கும் ,
கருத்துரைக்குமாக/ரசிப்புகளை ட்விதைக்கிற எழுத்துக்கள் இங்கு ஏராளம் அதில் இதுவும் ஒன்றாய்.
மரங்களை நடாவிட்டாலும் ரசியுங்கள் என்பதான உங்களின் வரிகள் அப்படியாகினும் மரம் நடும் ஆசை வராதா எனும் உங்களின் ஆதங்கம் காட்டுகிறது....
வணக்கம் எழில் மேடம் மரங்கள் மனிதர்களின் மனதில் ஒரு சிறு அசைவை உண்டாக்கினாலே அது நடப்பட்டுவிட்டதாகத்தானே/
Post a Comment