காபி கொண்டு வருகிறவர் மீதோ அதை கொதிக்க வைத்து தயாரிக்கிறவர்கள் மீதோ எனக்கு எந்த விதகோபமும்,வருத்தமும் இல்லை.
கசப்பான,அடர்த்தியான,திகட்டலானஅதன்சுவைமீதுகூடஅவ்வளவு வெறுப்பில்லை.
ஏனோ பிடிக்கவில்லை மனதிற்கு எனபதை எல்லாம் தாண்டி அது விலை கூடிய பானம்
அல்லது ஆங்கிலேயர் பானம் என்பதுவே காரணமாகிப்போகிறது அதை வெறுக்க. ஆனாலும்
வேறு வழியில்லை குடித்துவிடுகிறேன்.
தினசரி காலை 10.30மணியிலிருந்து10.45ற்குள்ளாகவும்,மாலை 4.00
மணியிலிருந்து 4.30திற்குள்ளாகவும் நான் வேலை பார்க்கிற அலுவலகத்திலுள்ள 5
பேருக்கும் காபி வரும்.
கலர்மங்கிப்போனசில்வர் டம்ளர்,அளவானஅளவிலும் சிறியதாகவும்/அதனுள்ளேதான் நாங்கள்குடிக்கிறதிரவம்(காபி)அடர்த்தியானகலரில்/
ஒன்று,இரண்டு,மூன்று,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என கடந்து எனக்கு வருகிற போது
அஷ்டகோணலான முகத்து டனும், மனத்துடனும்,சிரிப்புடனுமாய் வாங்கிகுடித்துக்கொள்கிறேன்.
வேண்டாம் என முடிவெடுத்துவிட்டால் அதை உடனடியாக செய்து விட முடிவதில்லை.
அப்படி ஒரு பழக்கமும் இதுவரை கை வரப்பெற்றதில்லை. “விலை அதிகம்,நன்றாக
இல்லை,ஏமாற்றுகிறார்கள்,பிடிக்கவில்லை”என்கிறமாதிரியானநிறையகாரணங்கள்
இருந்தாலு ம், கண்முன்னே விரிந்தாலும் கூட கசப்புகலுடனோ அல்லது சமாதானம்
செய்து கொள்கிற மனப்பாங்குடனோ அங்குதான் போய் நிற்கிறேன்.
நான் எனது என இல்லாமல் நாம்,நமதுஎன யோசிக்கிற பொதுபுத்திகூட அப்படியான எனது செயலுக்கு காரணமாக அமைந்து போகலாம் கூட/
எங்களது அலுவலகம் அமைந்திருக்கிற தூரத்திலிருந்து பத்தடி தூரத்தில்தான் எங்களது அலுவலகத்திற்கு காபி சப்ளை ஆகிற டீ கடை இருந்தது.
கடையின் பெயர் வேறொன்றாக இருந்தாலும் ஈசல் கடை என்பதுவே நிலைத்துப்போனது.
சிறு பிள்ளையிலிருந்து பெரிய மனிதர்கள்வரைஅப்படித்தான் சொன்னார்கள்.
காலையிலிந்து மதியம் 1 அல்லது 2 மணிவரை இயங்குகிற டீக்கடையில் இட்லி, வடை,
மொச்சை,போண்டா,மிக்சர் பக்கோடா சமயத்தில் எப்பொழுதாவது “பால் பன்”என
கிடைக்கும்.
இட்லி வடை என்றால் காரச்சட்னி,தேங்காய் சட்னி, சாம்பார்,மொச்சை, வடை என்றால் அதற்கே ற்றார் ப்போல,,,,,,,,,,/
கொஞ்சம் தூக்கலாக வற்புறுத்துபவர்களுக்கு கூடுதலாக ஒரு கரண்டி சாம்பார்.
பருப்பும்,கடலைமாவும் கலந்து கட்டியிருக்கிற சாம்பாரை ருசிக்க ஒரு கூட்டம் வரும் தனியாக/
அது அவருக்கு தனியாக தெரிந்து போவதுண்டு.அதிகாலைஐந்து,ஐந்தரைக்கு கடை
திறந்ததி லிருந்து,இட்லிக்கு,வடைக்கு,சட்னிக்கு,என கடையில் போய் சரக்கு
வாங்கவும் அடுப்பில் வேலை செய்யவும் என மாறி,மாறிஆளாய் பறந்து
கொண்டிருப்பதனாலும் அவரின் பெயர் ஈசல் என ஆகிப்போனதாய்அறிகிறேன்
இந்தநேரத்தில்/
மச்சான்,மாமா, அண்ணன்,தம்பி ,சித்தப்பா ,பெரியப்பா,அதை ,மதினி என கலந்து
கட்டி உறவுக ளிடமும்,பிறரிடமும்(அனைத்து ஜாதியினரும் கலந்து வாழ்கிற
கிராமங்களில் இன்றளவும் ஒருவருக்குள் ஒருவர் முறைவைத்து கூப்பிட்டு சொந்தம்
கொண்டாடுகிற கிராமங்களில் அதுவும் ஒன்றாய்) அவர் இறக்கை கட்டித்திரிகிற
நேரங்களில் நெசவிடுகிற பேச்சில் பூத்து மலர்கிற உறவு அவரை
பொத்திவைத்திருக்கும் பத்திரமாக/
“வாப்பா நம்ம ஈசல் கடதான,வா ஒரு வடையும் டீயும் சாப்புட்டுட்டுப் போகலாம்
என கையில் காசில்லாதவர்கள் கூட அவர்களது பெயரில் உள்ள கணக்கை நம்பியும்
ஈசலை நம்பியுமாய் டீ சாப்பிட வருவதுண்டு.
டீ,காபி,மொச்ச,பால்பண்ணு,சேவு,மிச்சரு,,,,,,,என எல்லாம் கேட்கிறவர்களிலும்
வாங்கி சாப்பிடு வர்களிலும் பாதிக்கும் மேற்பட்டோர் காசு கொடுப்பதில்லை.
காசு என்னாச்சுப்பா?டேய் காசக்குடுடா,கணக்கு ஏறிக்கிட்டே
போகுதில்ல,,,,,என்கிற அவரது கஷ்டமான தர்மசங்கடமான கேட்டலுக்கு அதெல்லாம்
தருவமப்பா/காசு என்ன ஓடியா போகுது ,,,,,,?ம்,,தரமாட்டோம்/இப்ப என்ன ஐயா
கஞ்சிக்கு இல்லாம இருக்கீங்களாக்கும்,,,,,,,?என்பது போன்ற இடக்கான,எள்ளலான
பேச்சுக்களே அவரது கேட்டலுக்கு பதிலாக வரும்.
அந்தபதிலுக்குஈசலின்சலிப்பும்“இனிமேடீக்குடிக்ககடப்பக்கம் வந்துராதீங்க”,,,,என்கிற
பேச்சும்,பெருமூச்சு மிகுந்த சொல் பிரயோகமுமே பெருமூச்சாக வெளிப்படும்.
அவரது பெருமூச்சை சொல்லின் வெளிப்பாடாக கேட்டவர்கள் “அட சும்மா
இருங்க,ஒங்களுக்கு வேற வேலை இல்ல,” என மொத்தமாய் சிரித்து விட்டுப்
போவார்கள்.
அவர்களில் நான்கைந்து பேர்கள் சரிதான் விடப்பா,அதான் சாய்ங்காலம் ஒண்ணா
ஒக்காந்து சரக்கடிக்கும் போது எல்லா கணக்கும் நேராகிப்போகும் என மனதுள்
நினைத்த வாறும் சொல்லியவாறும் போய்விடுவார்கள்
.
அவர்களதுஎள்ளலும்,புறந்தள்ளலும்.நகைச்சுவையாககலந்துவிடுவதுண்டு.அவர்களும்
ஈசலுமாய் கலந்து தண்ணீ அடிக்கிற சாயங்காலப்பொழுதுகளில்/
அப்படியான உறவுடனும்,ஸ்னேகத்துடனும்,நட்புடனும் பழகி தனது உழைப்பை
விரித்து ஆல்போல் நின்றிருந்த அவரின் கடை அந்த கிராமத்திலிருந்த
எல்லோருக்கும் உரிமை யானதாயும்,நட்பானதாயும்/
“சரி,சரி வா,,,கையில இருக்கும் போது குடு,ஏதொ ஒரு கொணத்துல
பேசீட்டா,அப்பிடியே போயிர்றதா? கோவிச்சிட்டு போறமாதிரி”என்கிற அவரது
சரிக்கட்டலான பேச்சும்,பொத்துத லுமேஅந்தக்கடையைநிலைகொண்டு ஊன்றச்செய்திருக்கிறது.
அப்படியான ஊன்றலும் ,நிலைநிறுத்தலுமாய் இருந்த கடையிலிருந்து அவரது
மறைவிற்குப் பின் அன்றாடம் காலையிலும்,மாலையிலுமாய் வருகிற காபியை குடிக்கிற
போதுதான் இந்த சிந்தனை மேலிடுகிறது.
இன்றைக்கு ஒரு சிறுமி காபி கொண்டு வந்தாள்.கொண்டு வந்ததை வைத்து விட்டு போய் விட்டாள்.
பள்ளிக்கு லீவு விட்டுவிட்டபோதும் பள்ளி சீருடையை அணிந்து கொண்டு
வந்திருந்த அந்த பட்டாம் பூச்சி காபியை கொண்டு வந்து வைத்து விட்டு
பறந்துவிட்டது.
ஒரு பூ,,, புயலாய் புயலாய் நுழைந்து விட்டுப்போனதைபோல ஆகிப்போன நிமிடங்களில் காபியைப்பற்றிய சிந்தனையும் மறந்து போகிறது.
காபி கொண்டு வருகிறவர்கள் மீதோ,அதை தயாரிப்பவர்கள் மீதோ எனக்கு எந்தவித கோபமும், வருத்தமும் இல்லை இப்பொழுதுவரை/
7 comments:
காபி பற்றிய உங்கள் பகிர்வு அருமை...
ஈசல் கடை பெயர் புதுமையாக இருக்கிறது...
இங்கும் ஒரு ஈசல் கடை உண்டு...
சொல்லாமல் சிலவற்றை சொல்லி விட்டீர்கள்... புரிகிறது....
காபி பற்றிய ரசிக்கவைக்கும் பகிர்வுகள்..!
வணக்கம் ராஜராஜேஸ்வரி மேடம்,
நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.என்னுடைய அனைத்துப் படைப்புகளுக்கும் தவறாமல் கருத்துரை இட்டு விடுகிற தஙகளுக்கு என் சிரந்தாழ்ந்த நன்றி/
வணக்கம் சே.குமார் சார்,நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Interesting and Inspiring ..!
http://passiondecode.blogspot.in/
Post a Comment