27 Jul 2013

தோசை,இட்லி,,,,,,,


     சிறியதாகத்தானேஇருக்கும்எனநினைத்துஇரண்டுஊத்தப்பங்கள் வாங்கிவிட்டேன்.
இரண்டு ஊத்தப்பங்கள்,இரண்டு இட்லி,கடையில் அமர்ந்து ஒரு டீ சாப்பிட்டேன்.
       டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலேயே நான் கேட்டது  கட்டி வந்து விட்டது. வெள்ளை கலரில் உள்ள  சட்னி ஒரு பாக்கெட்டிலும், சிவப்புக்கலரில் உள்ள சட்னி இன்னுமொரு பாக்கெட்டிலும்,சாம்பார் ஒரு பாக்கெட்டிலும் என எல்லாம் கட்டி ஒரு கேரி பேக்கில் போட்டு கொடுத்தார்கள்.
      பார்க்க கலராக இருந்தது.ஊதா கலரில் இருந்த  கேரி பேக்,வெள்ளை கலர் நியூஸ் பேப்பரில் கட்டியிருந்த பார்சல்,கண்ணாடி பைகளில் உற்றி முடியிட்டிருந்த சட்னி,சாம்பார்,,,,,,,,என கலந்து கட்டிய கலவையாக/
     அதற்குப் போய் நாற்பது ரூபாய் வாங்கி விட்டார்கள்.ஒரு வேளை உணவுக்கு இவ்வளவா,,,,,,,?என்கிற ஆத்தாமையுடனும்,கோபத்துடனுமாய்(என் மேல்தான்)எழுந்து வந்து விட்டேன் பார்சலை எடுத்துக்கொண்டு.
     எப்போதும் தினசரி வழக்கப்படி ஒரு தோசை,இரண்டு இட்லிகள்தான் வாங்குவேன்.அலுவலகம் முடிந்து கிளம்பும்போதே அந்த நினைப்பு என்னை சூழ்ந்து கொள்ளும்.
     மாலை ஐந்து அல்லது 5.30 மணிக்கு அலுவலகம் முடியும்.அப்போதிலிருந்து கொஞ்சம் நேரத்தை நீட்டித்தும், இழுத்தும், இல்லாத வேலையை உருவாக்கியும் அலுவலகத்திலேயே இருந்து விட்டு 6.30 அல்லது 7.00 மணிக்கு கிளம்புவேன்.
      நான் ரூமுக்குபோகும் முன்பாகவே எனது அறையில் உடன் தங்கியிருப்பவரும் (தப்புத்தப்பு அவரது அறையில்தான் நான் தங்கியிருக்கிறேன்.இந்த ஊருக்கு மாற்றலாகி வந்த புதிதில் அறைக்காக அலைமோதி திரிந்து அறை கிடைக்காமல் அனாதரவாக மழையில் நனைந்து நைந்துபோன கோழிக்குஞ்சாகத் திரிந்தவனை கூப்பிட்டு அரவ ணைத்து ஆதரவளித்தவர் அவர்.சுருங்கச் சொன்னால் 24 மணி நேரமும் அதிகாரி என் கிற அங்கவஸ்திரத்தை தன்மேல் அணிந்து கொள்ளாதவர்.)எனது மேலாளருமான என் பிரியத்துக்குரியவர் போய்விடுவார்.
     அவர் போய்ஓய்வுஎடுத்துக்கொண்டிருக்கிற இடைவெளியில் நான் ஹோட்டல், பார்ச்சல்,கம்ப்யூட்டர் சென்டர் என எல்லா வேளைகளையும் முடித்து விட்டு
செல்லும் போது இரவு 8.00 மணி ஆகிபோகும்.சமயத்தில் 8.30. பின் எனது  தோளில் தொங்குகிற பையையும்,அலுவலககளைப்பையும் இறக்கி வைத்து விட்டு குளித்து, துணி துவைத்து விட்டு சாப்பிடும் போது 9.00,அல்லது 9.30 ஆகிப்போகலாம்.
      அந்நேரம் பார்சலை பிரிக்கையில் காய்ந்து வரட்டி மாதிரி தோசை இலையில் வீற்றிருக்கும்.பக்கத்தில் சட்னி சாம்பாரை துணைக்கு வைத்துக்கொண்டு சாப்பிடு கையில் வெறுத்துகூடப்போகும் சமயத்தில்.ஒரே ஓரு அறுதலான விஷயம் மூக்கை துளைக்கும் அதன் வாசனைதான் ஓரளவு ஆறுதல் தரும்.அதுவும் பிய்த்த தோசையின் துண்டை வாயில் போடுகையில் காணாமல் போகிறதே என்கிற ஆற்றாமை மேலோங்கத் தான் ஊத்தப்பங்களை வாங்கி வந்தேன்.
      வட்ட,வட்டமாய் சிறியதாக மெத்தென ஊற்றியிருக்கிற தோசையில் அளவாய் எண்ணை விட்டு பொன்நிறமாய் தருவார்கள்.அதையும் அதில் உள்ள சின்னச் சின்ன தான குழிகளையும் பார்த்தே சாப்பிட ஆசை வந்து விடும் என்கிற நம்பிக்கையிலும் வாங்கியதுதான்.
     நான்இந்த ஊருக்கு மாற்றலாகி வந்ததிலிருந்து இன்றுவரை பதிவாக இந்த ஹோட்டலிதான் சாப்புடுகிறேன்.வயிற்றுக்கு எந்தக்கேடும் வந்து விடாது என்கிற நம்பிக்கையிலும்,நினைப்பிலுமாய்/
ஹோட்டலுக்கு வந்த நேரம் வழக்கமாக இருக்கும் சர்வரை காணவில்லை.அவர் இருந்தால் ஒரு வேலை விபரம் சொல்லி ஊத்தப்பங்கள் இரண்டு வாங்குவதை தவிர்த்தி ருக்கக்கூடும்.
      எந்நேரம் பார்த்தாலும் உடல் நலமில்லாதது மாதிரி போல இருப்பார்.மூங்கில் கழிக்கு கையும்,காலும் முளைத்தது மாதிரி இருக்கும்அவர் அடர் நிறத்தில் கைலியும்,கை வைத்த  வெள்ளை பனியனும் அணிந்திருப்பார்.
     கடைக்குள் நுழைந்ததும் பளிச்சென ஒரு சிரிப்பு.வாங்க,,,,உக்காருங்க,,,,, என்பார்.
அவ்வளவுதான்,கைகளின் பக்கவாட்டாக முளைத்திருக்கும் இறக்கையை விரித்து விடு வார்.
     40 பேர் வரை அமர்ந்து சாப்பிடக்கூடிய கடையில் ஒரே நேரத்தில் 10 பேருக்கு சப்ளை செய்பராகவும்,அவர்களிடம் மனம் நோகாமல் பேசுபராகவும்/
     “கடையில ஃபேன் இல்லன்னா என்ன சார் நாந்தான் இருக்கேனே ஒங்க ஃபேன்” என்பார்.இது மாதிரி கடையில் நுழைந்ததிலிருந்து சாப்பிட்டுப்போகும் வரை ஏதாவது சொல்லிக்கொண்டும், பேசிக்கொண்டுமாய் இருப்பார் அவர்.
     அவர் இருந்திருந்தால் இம்மாதிரியான விபரீதங்கள் நடந்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
கடைக்காரர்களாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அவர்களுக்கு என்ன தெரியும், நான் வாங்கிய பார்சல் இரண்டு பேருக்கு என நினைத்திருக்கலாம்.  என்கிற நினை ப்புடன் வாங்கி வந்த ஊத்தப்பத்தை  சாப்பிட ஆரம்பிக்கிறேன்.
பொட்டலத்தை பிரித்ததும்தான் யோசனை வருகிறது.இதை எப்படி சாப்பிட என
    
பாதியை கீழேதான் போடவேண்டும். காசு கொடுத்து வாங்கியதை எப்படி மனசார கீழே எறிவது,,,,,,,?என்கிற மனோநிலையுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.    

6 comments:

'பரிவை' சே.குமார் said...

கடையில் வாங்கிச் சாப்பிடுவதில் இது போன்ற சமயங்கள் மனக் கஷ்டத்தைக் கொடுக்கும்....

என்ன செய்வது?

திண்டுக்கல் தனபாலன் said...

ருசிக்கு பிறகு... பசிக்கு சாப்பிட வேண்டியது தான்...வேறு வழியில்லை...

vimalanperali said...

வணக்கம் சே குமார் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

இளமதி said...

// எனது தோளில் தொங்குகிற பையையும்,அலுவலககளைப்பையும் இறக்கி வைத்து விட்டு//..

அடடா... எத்தனை அற்புதமான வார்த்தை விளையாட்டுக்கள் உங்களிடம். ரசிக்க வைத்த வரிகள். சிந்திக்கவும் வைக்கத்தவறவில்லை சகோ!

ரசிக்கின்றேன். வாழ்த்துக்கள்!

vimalanperali said...

வணக்கம் இளமதி அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக்/