அவன் வந்த நேரம்
நான் அலுவலக வேளையாய்/
தோள்களின் இரண்டு
பக்கமுமாய் முளைத்திருந்த இறக்கைகள்
முழு வேகத்தில்
இயங்க ஆரம்பித்திருந்த பொழுது/
இறக்கைகளின்
வேகமும்,படபடப்பும்
சக ஊழியர்களையும்,
எதிரில் வந்து நின்றவர்களையும்
குத்திக்கிழித்துக்கொண்டிருந்த
பொழுது
எதிரில் வந்து
நின்ற அவனை ஏறிடுகிறேன்.
நண்பனின் மகன்
அவன்.
வணக்கம் சொல்கிறான்,நானும்
வணக்கம் சொல்கிறேன்
ஏதோ ஒன்றைச்சொல்லி
அது பற்றி விளக்கம் கேட்கிறான்
நானும் சொல்கிறேன்.
இன்னும்,இன்னுமாய்
ஏதேதோ கேட்டவனுக்கு
அவ்வளவு வேலைகளுக்கு
மத்தியிலுமாய் விளக்கம் சொல்கிறேன்.
அவ்வளவுதான்
இறக்கை படபடக்க அடுத்த
வேலை நோக்கி
நகன்றவன்
நண்பனின் மகன்
பற்றிய நினைவுகளை
காற்றோடு விட்டு
விடுகிறவனாய்/
பிராணவாயுவா,கரியமில
வாயுவா
எதுவெனத்தெரியாமலும்
அதன் தன்மைபற்றி
புரியாமலும்
கலந்து கரைந்து போன நினைவுகளை
மீட்டெடுக்கிறவனாய் என் முன்னே
திரும்பவுமாய்
வந்து நிற்கிறான் நண்பனின் மகன்.
எதற்காக வந்தான்
என்ன தேவைஅவனுக்கு
என அவனிடம்
கேட்பதற்கு எனக்கும் நேரமில்லை
அந்த அவசரச்சூழலில்
சொல்ல அவனுக்கும் நா எழவில்லை.
சிறிது நேரம்
என்னையும் என்பணிச்சூழலையும் பார்த்து
மருகியவறாய்
நின்றவன்போய் வருகிறேன்
எனச்சொல்லி
கிளம்பி விடுகிறான்.
அலுவலகத்தின்
அவ்வளவு கூட்டத்திலும்,
இரைச்சலிலும் அவன் சொன்ன வார்த்தைகளுக்கு
செவி மடுத்த
நான் நிழலாய் அசைந்தவாறு
சென்ற அவனை
உற்றுப்பார்த்தவனாயும்,
உறைந்து நிற்பவனாயும்
சிறு வயதிலேயே
தந்தையை இழந்த அவனுக்கு
என்னின் ஏகாந்தம்
புரியுமா என்கிற கேள்வியுடன்/
12 comments:
சிறு வயதிலேயே தந்தையை இழந்த அவனுக்கு
என்னின் ஏகாந்தம் புரியுமா என்கிற கேள்வியுடன்/
>>
கண்டிப்பா புரியும்
வணக்கம் ராஜி அவர்களே.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
ஏக்கமாய் இருந்திருக்கும்
கண்டிப்பாக புரியும்
புரிய வேண்டும்...
ஏகாந்தன் புரிந்தவனாய்த்தான் போயிருப்பான்...
அருமை.
வணக்கம் கவியாழி கண்ணதாசன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் சே குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
ஏகாந்தம் புரிந்தவனாய்த் தான் அவன் அவ்விடத்தை விட்டு அகன்றிருக்கக் கூடும்.
அருமையான வரிகள் ஐயா....
வணக்கம் தமிழ்முகில் பிரகாசம் சார்,நன்றி தங்ளின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/
Post a Comment