14 Jul 2013

செய்திச்சுருள்,,,,,,,,


பேப்பர்இன்று வரவில்லை.மணிகாலை ஆறு கடந்து ஏழு தொட்டு ஏழு முப்பது நோக்கிபயணப்படுகிறநேரமாகிப்போனபின்பும்ஏன்இந்ததாமதம்எனத்தெரிய
வில்லை. தாமதங்கள் ஆர்வங்களைவடியச்செய்தோஅல்லதுநீர்க்கச்செய்தோ விடுகிறதுதான்.

இன்று விடுமுறை என்பதால் ரிலாக்ஸாய் பேப்பர்படித்து விட்டும், (முதலில் மனைவிகொடுக்கிறடீயைச்சாப்பிட்டுவிட்டும்சொல்லமறந்துபோனேன் பார்த் தீர்களா?)பின்பேப்பரை விரித்து படிக்கிற சகவாசம் வேறு ஏதேலுமாய் இருப்ப தில்லைதான்இப்போதைக்கு /

ஏன் அப்படி என்கிற மனோநிலை தாண்டி யோசித்ததில்லை, 8முதல்1 0 ,14பக்க ங்களில் குடி கொண்டிருக்கிற செய்திகள் சுவாரஸ்யம்,அசுவராஸ்யம் மற்றும் நிஜம் கலந்துமாய் நிகழ்வுகளாய் காட்சிப்படுகிறவையாய் அப்படிகாட்சிப்படுப வை நிஜங்களையும்,சமுகஅவலங்களையும் விதைத்துச்செல்கிற விதை ப்பு இருக்கிறதே.அது மிகப்பெரியாதாய்/

அப்படியானவைகளைஇன்றுஎப்படியாயினும்அள்ளிஎடுத்துஎழுத்துக்கூட்டியும்மனம் குவித்தும் படித்துவிடலாம் என்கிற முடிவுடனும், ஆர்வத்துடனுமாய் இருந்த நாளன்றில் பேப்பர் போடுவபவர் வராதது ஒரு மிகப்பெரிய குறை பாடகாவே/

பின்புதான் தெரிந்தது.அவர் வருகிற வழியில் இருக்கிற வீட்டின் சுவர் ஓரமாய் நாய் ஒன்று குட்டிபோட்டுப்படுத்துள்ளது என்று/அது அந்த சந்தில் வேற்று மனிதர்கள்யாரையும்நடமாடவிடுவதில்லைஅங்கிருக்கிற அருகாமை வீட்டுக் காரரை தவிர்த்து இந்த இரண்டு நாட்களாய் என தகவலறிந்த வட்டாரங்கள் சொல்லிச்சென்றன.

கருப்புக்கலரில் தோல்போர்த்தி ,அதன் ஊடுபாவாய் வெள்ளைகலந்திருந்த நாய் ஒன்று நேற்றைக்கு முன்தினம் இந்த ஏரியாமுழுவதுமாய் குரைத்துத் திரிந்தது.

ஈன்றஐந்தில் மூன்று குட்டிகளை களவு கொடுத்து விட்டதில் அதற்கிருந்த ஆத்திரமும்,கோபமும்,ஆற்றாமையும்நாலாதிசைகளிலும்தெரித்துத்தெரிய அது அதன்சப்தமாயும்குரைப்பாயும், வெளிப்படுகிறது.

உடல் மெலிந்து எலும்புகள் வெளித் தெரிந்த அது இவன் பல்த்துலக்கிக் கொண் டிருந்த காலை ஏழு மணிக்கெல்லாம் அது மூர்க்கங்கொண்டு கத்தியதை பார்க்க முடிகிறது.

அது ஈன்று படுத்திருந்ததாய் சொல்லப்பட்ட இடத்தைத்தாண்டி வெளிவந்து விட்டிருந்தது. அப்படியானால் அந்த இடம் அருகாமையாகத்தான் இருக்க வேண்டும்.

குட்டிகளுக்குஉணவுஏதேனும்தந்துவிட்டுவந்ததாஇல்லைதான்.ஈன்ற மகவுக ளை காணோமே என்கிற கோபத்தில் மனம் கனன்று எரிய அங்கிருந்து வெளி யேறி வந்து விட்டதா எனத்தெரியவில்லை.

அது குட்டிகள் ஈன்றதாய் சொல்லப்பட்ட சந்து. சந்தின் வலது புற முனை யிலிருக்கிற பச்சைக்கலர் அடித்துக்காணப்பட்ட வீடு,மெயின் ரோட்டிலிருந்து இந்த சந்து வழி கடந்தால் இவனது வீட்டிற்கும்,வீடு இருக்கிற தெருவிற்கு மாய்ஈஸியாய்வந்துவிடலாம். இல்லையானால் ரோடு சுற்றித்தான் வரவேண் டும்.இவனது வீட்டைக்கடந்து வரிசையாய் நட்டு வைக்கப் பட்டிருந்த வீடுக ளின் மற்றும் வெளிகளின் முன்புமாய் அதன் மூர்க்கம் துவங்கி தெரிவதாக/

பரந்து விரிந்திருந்த வெளியது.அந்த வெளியின் நாலாபுறமுமாய் சிதறித் தெரி ந்த வீடுகளின் முன்பாயும்,அங்கிருந்த வெற்று வெளிகளிலுமாய் மூர்க்கம் கொண்டு குரைத்து ஓடித் திரிந்ததாய்/

பல்த்துலக்க ஆரம்பித்திருந்த இவனை நாயின் குரல் ஈர்க்க என்னவென எட்டிப்பார்த்த சமயம்அங்கிருந்த சந்திலிருந்து மூர்க்கம் கொண்டதாய் குறை த்துக்கொண்டு வருகிறது. அப்படி வந்த நாய் தான் ஈன்ற மகவுகளில் மூன் றைக் காணோம்.பார்த்தீர்களா,நீங்கள்,,,,,,,?எனக்கேட்பதுபோல ஒவ்வொரு வீட்டின் முன்பாகவுமாய் நின்று பரிதாப பார்வைப் பார்த்துக் கொண்டும், வீடுகளின்முன்புகாட்சிப்பட்டுத்தெரிந்தவெற்றுவெளியுளுமாய் சுற்றித் திரிந்து குரைத்துக்கொண்டு ஓடுகிறது.ஓட்டமும்,குரைப்பும், மூர்க்கமுமாய் அடையா ளப் பட்டு த் தெரிந்த அதனருகில் அந்நேரம் சென்று போய் ஆறுதல் சொல்வது உசிதமல்ல என்றாலும் கூட மூர்க்கம் கொண்ட அதன் பின் மூர்க்கம் கொள் ளாத நாய் ஒன்று உடன் சேர்த்தும், சிலநேரங்களில் பின் தொடர்ந் துமாய்/

அப்படி ஓடிக்கொண்டிருந்த அவைகளில் மூர்க்கம் கொண்டது அங்கிருந்த சீமைக் கருவேலை முட்களின் ஊடாலும்,புதர்களிள் மண்டியிருந்த செடிகள் எங்கும் நுழைந்து ஓடிய போதும் அதனுடன் சென்று விட்டும் தேடிக்குரைத்துக் கொண்டே இறுதியாய் அது வந்து சேர்ந்த இடம் இவனது வீட்டின் பக்கவாட்டு வெளியாய் இருக்கிறது.

அது அங்கு வரவும் உடன் சேர்ந்து ஸ்னேகம் கொண்டது விலகிக்கொள்ள மூர்க்கம் கொண்ட அது தன் கத்தலைவிடாமல்தொடர்ந்தவாறும், கத்தியவா றும், சுற்றிக் கொண்டே திரிந்தவாறு மாய் அந்த சந்து நோக்கி நகர்கிறது.

ஈன்றெடுத்தகுட்டிகளில்இனிஇருப்பவைகளையாவதுகாக்கவேண்டும்என்கிறஆத்திரத்தில்.

இப்போது பேப்பர் போடவருபவரிடம் ஒன் று சொல்லத்தோணுகிறது. நண்பா, அந்த நாய் தன்மகவுகளைபத்திரமாய்பாதுகாத்துஅழைத்துசெல்கிறநாள்வரை நீங்கள் அந்தப் பக்கம் வர வேண்டாம்.தான் ஈன்ற மகவுகளை பறிகொடுத்த பரிதாபத்துடன்அலைகிறஅதன்மூர்க்கமும்,ஆதங்கமும்,கோபமும்தீர்ந்து போ கிற நாள்வரை நீங்கள் பேப்பர் போடக்கூடவரவேண்டாம். நானே வந்து வாங் கிக் கொள்கிறேன் உங்களிடம்.

முதலில் தீரட்டும் அதன் கோபம். காப்பாற்றிக் கொண்டு போகட்டும் அதன் குட்டிகளை/

6 comments:

 1. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு

  ReplyDelete
 2. பேப்பர் போடுபவரிடம் உடனே சொல்லி விடுங்கள்... அவர் கோபப்படாமல் இருக்க வேண்டும்...!

  ReplyDelete
 3. நேரம் கிடைப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.html

  ReplyDelete
 4. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களதுவருகைக்கும் , கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 6. கண்டிப்பாக படிக்கிறேன்,திண்டுக்கல் தனபாலன் சார். http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.htmlஐ.என்னைப்போல கற்றுக்குட்டிகள் கற்றுக்கொள்ல விஷ்யம் கிடைக்கும்தானே?

  ReplyDelete