தூக்கி ஆற்றுகிற தேநீரின் அடி எது,
நுனி எது என்கிற விபரம் பிடபாடமாலே/
அடி பருத்தும் நுனி சிறுத்தும் இருக்கும்
என்பதுதானே கண்கூடு,
ஆனால் இது விஷயத்தில் அப்படியற்றுப்போயிற்று.
ஒரு தடித்த நூலின் கனத்து விழுந்த சரடாய்
ப்ரௌன் கலர் உருக்காட்டி வட்ட வடிவ கிளாஸில்
கால்,அரை,முக்கால் முழுது,,,, என நிரம்புகிற
கலர் திரவமாய் பட்டுத்தெரிகிறது.
மண்பிளந்து ,துளிர்த்து வளர்ந்து கிளை பரப்பி
மொக்கு விட்டு பூமலர்ந்து நிற்கிற செடியாய்,மரமாய்
நன்றாகத்தான் இருக்கிறது அப்படிப் பார்க்க/
கொதிக்கிற தேநீரின் மணம் நாசியிலேறி
நாவின் சுவையறும்புகளைத் தொட்டு
அது உள் இறங்குகிற கணம் வரை கூடவே
பயணிக்கிற உள் மனதின் ஆனந்தம்
சொல்லி மாளாததாய்/
ஏதோ வாங்கினோம், ஏதோ குடித்தோம்,,,,,,,
என்றில்லாமல் இப்படி அனுபவிக்க வாய்த்து விடுவது
பெரும் பேராகவே எனக்கருதி
மனைவி ஆற்றிக்கொடுத்த தேநீரைகுடிக்க
முற்படுகையில் யாரிடமும் அனுமதி கேட்காமல்
வந்து விடுகிற மழை தூறாலாயும்,
பெரு மழைக்கான முஸ்தீபு காட்டியுமாய்.
சில்லிட்ட பொழுதுகளாய் விரிந்த
மாலை மழையை மட்டுமல்லாமல்
இடியை மின்னலையும் கூடவே
கைகோர்த்துக்கூட்டிவரும் என நாங்கள்
மனக்கணக்கு கூடபோடவில்லை.
அல்லது அப்படி நினைத்துப்பார்க்கக்கூட
இல்லை,
அப்படி நினைத்திராத பொழுதுகளில்
வந்துவிட்ட திடீர் மழை என்னை ,
சில்லிடச்செய்தது போலவே நான் குடிக்கப்போன
தேநீரையும் சில்லிடச்செய்யும் என
மனதால் கூட நினைக்கவில்லை.
தூக்கி ஆற்றிய தேநீரின் அடி எது நுனி எது
என்கிற விபரம் பிடிபடாமலேயே இதுவரை/
6 comments:
தங்கள் டீயின் ரசிப்பை
மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சில நாட்களாக வலை பக்கமே வரஇயலவில்லை.
உங்கள் முதல் கணினி அனுபவம் அல்லது முதல் பகிர்வு யாருக்கு முதலில் பின்னூட்டமிட்டீர்கள். உங்களுக்கு வந்த பின்னூட்டம் பார்த்து உங்கள் உணர்வு இதையே தொடர் பதிவாக நண்பர்கள் எழுதி வருகிறார்கள். அதற்கே நானும் தங்களை அழைத்தேன். நேரம் இருப்பின் எழுதுங்க..
வணக்கம் சசிகலா மேடம்,நன்றி தொடர் பதிவு பற்றி குறிப்பிட்டதற்கு/
மழை மாலையில் தேநீர் ஆற்றுதலை அழகாய் வர்ணித்துள்ளீர்கள். மிகவும் இரசித்தேன்.
தேநீர் இங்கு தேநீராக மட்டுமே பரிமாறப்படுவதில்லை.உழைக்கும் மக்களுக்கு/நன்றி தமிழ் முகில் பிரகாசம் சார்.
Post a Comment