17 Aug 2013

மானபங்கம்,,,,,,


                       
       
அவனுக்குஎன்னவயதிருக்கும்எனத்தெரியவில்லை.நின்றிருந்தான்.அவனுக்குப் பக்கமா க இடது புறத்தில் மர பெஞ்ச் இருந்தது. 

அதில் நான்கைந்து பேர் ஒரே நேரத்தில் அமரலாம்.அவன் நின்றிருந்த சிமெண்ட் தரை வரைபடம் போல கீறல்,கீறலாய் வெடித்து தெரிந்தது.

சிவகாசி ரோட்டின் வலது ஓரமாக இருந்த அந்த வளாகம் மிகப் பெரியதாகக் காணபட்டது.
வளாகத்தின்வளர்ந்திருந்தசுவர்களில்இப்பொழுதுதான்பெயிண்ட் அடித்திருப்பார்கள் போலி ருக்கிறது பளிச்சென்றிருந்தது.

     சுவர் பரப்பு முழுவதும் வெளிர் பிங்க் கலரும், தூண்களிலும்,மேல் பார்டரிலுமாய் அடர் பிங்க் கலர்அடித்திருந்தார்கள்.பார்க்க நன்றாகயிருந்தது.

என்ன தூண்களுக்கோ அல்லது மேல் பார்டருக்கோ வெள்ளைக்கலர் அடித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம்தூக்கித்தெரியும்.பளிச்செனவும் இருக்கும்.

வெள்ளைகென இருக்கிற பிரபலம் சுண்ணாம்பு அடிக்கிற காலத்திலிருந்து,எமெல்ஷன்  அடிக்கிற இப்பொழுது வரை குறையவில்லை.

வெட்ட வெளியில் இருக்கிற சுவர் தூசியும்,அழுக்கும் அதிகமாகப் படியும் எனஇப்படியான கலரைதேர்ந்தெடுத்திருக்கலாம்.பரவாயில்லை,இதுவும் உறுத்தாமல்த்தான்இருக்கிறது.

வீட்டிற்கும்பெயிண்ட்அடிக்கவேண்டும்..வெளிப்புறம்நன்றாக இருக்கிறது. நன்றாக என்றால் பரவாயில்லைதான்,,,,. உள்ளேதான் சுவர்களெங்கும் பெயிண்ட் உதிர்ந்து வர்ணங்கள் காட்டு கிறது. காட்டுகிற உருவங்கள் பேசுகிறது,பாடுகிறது,சொல்கிறது,ஆடுகிறது.உத்தர விடுகிறது.
 ஆள் அரவமற்ற சமயங்களில் மட்டுமல்ல,எத்தனை பேர் நிறைந்திருந்த போதும் கண்சிமிட்டி கூப்புடுகிறது.அந்நேரம் அவிழ்ந்து விடுகிற மனதை கட்டுபடுத்திட மிகவும் சிரமமாய் ஆகிப் போகிறதுதான்.அதற்காகவாவது முத்லில் பெயிண்ட் அடித்து விட வேண்டும், இல்லையெ னில் தப்பாகப் போய்விடக்கூடும். பெயிண்டரை கூப்பிடவேண்டும். என்னென்ன கலர்,
என்னென்னசாமான்கள்எனகேட்கவேண்டும்.எப்பொழுது வருவார்கள்,அவர்களதுதோது, கருப்ப சாமியினது லீவு,எல்லாம்பார்க்கவேண்டும்.

கையில்கொஞ்சம் பணமிருக்கிறது.காணாவிட்டால் நகைஅடமானம் வைத்துக் கொள்ளலாம். தோதுப்பட்டால்இந்த மாதத்திற்குள்ளாக பெயிண்ட் அடித்து முடித்து விடவேண்டும்.

 நட்டு வைத்திருந்ததாய் நீண்ட சுவரும்  வளாகத்தினுள் இருந்த அலுவலகங்களும் ஒன்று போல ஒரே கலரில் தெரிந்தது.மிகப் பெரிய நீர்நிலையில் கட்டிடங்களை முக்கி எடுத் தது போல ஒரு தோற்றம்.

 காவல் நிலையத்தை ஒட்டி அமைந்திருந்த அந்த வளாகத்தில் கருவூலத்துறைஅலுவலகம், கிராமநிர்வாகஅலுவலர் அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம் என சிதறி அமைந்திருந்த து. இதையெல்லாம் தாண்டி போலீஸ் ஸ்டேஷன் சப் ஜெயில் இருந்தது.எத்தனை,எத்தனை கனவுகளோடும்,கதைகளோடும்அவரவரதுவாழ்க்கை பிண்ணனிகளோடும்,மனச்சிரமங் களோடும், உடல் உபாதைகளோடும் எத்தனை கைதிகள் அடைபட்டுக்கிடக்கிறார்களோ?செய்தகுற்றத்திற்காயும்,செய்யாத குற்றத்திற்காயும் சூழ்நிலைகைதியாய் ஆனவர்கள் எத்த னை பேர் எனத் தெரியவில்லை.

பாவம் அவர்களுக்கெல்லாம் இந்த சிறையும்,அதன் நெடித்துயர்ந்த சுவர்களும், சிறைச் சாலை கம்பிகளும்கற்றுத்தருவது.......?

கருப்பசாமிவேலைபார்க்கிறஅலுவகத்தின்டாக்குமெண்டுகளில்ஒட்டஅரசுமுத்திரை பொறி த் த ஸ்டாம்ப் வேண்டும். அதை வாங்கத்தான் வந்திருந்தான்.நேற்று மாலையே அலுவலகம் விட்டு கிளம்புகையில் ஸ்டாம்பிற்கானபணமும்,மேலாளரிடம்கடிதமும்வாங்கி வந்திருந்தான்.

கருப்பசாமி உள்ளே நுழையும் போது காலை மணி 10.30 இருக்கும்.இம்மாதிரி வெளி வேலை அமையும் நாட்களில் எடுத்துக் கொள்கிற அல்லது அமைந்து போகிற சுதந்திர மனோ நிலை யில்இப்படிதாமதமாய் வருவதுண்டுதான்.

 பரவாயில்லை.இதிலொன்றும்பெரியஅபத்தம் தெரிந்து விடுவதில்லை.மிகவும் சடங்குத்தன மான ஏற்பாடுகளில் இது ஒன்றும் பெரிய குறையாக ஆகப் போவதுமில்லை.

 கருத்து நீண்டிருந்த சிவகாசி ரோட்டில் விரைந்த  இரு சக்கர வாகனங்கள் பாதசாரிகள், பஸ்கள்,லாரிகள்,மனிதர்கள்,அவர்களின் உடைகள்,நிறங்கள், அவர்களின் எண்ணங்கள், கூடவே அவர்களுடன் பயணித்த தூசு மண்டலம் என கடந்து வளாகச் சுவரைத்தாண்டி உள்ளே வருகிறான்.
பலமுறை இதே அலுவகத்திற்கு இப்பொழுது வந்திருக்கிற இதேவேலையாகவந்திருந்தாலும் கூட புதிதாக பார்ப்பது போல பார்த்தான்.

“மேலே வானம்,கீழே பூமி,நடுவிலே நாமா?”இந்த வார்த்தை கண்டிப்பாக அந்த காரைக் குடிக்காரருக்குஏற்புடையதாயிருக்காது.வளாகம்,வளாகத்தின் நுழைவாயில் தாண்டி தரையெ ங்கும் பூத்திருந்த மண்,மண்ணில் பாவிக்கடந்த மர இலைகள்,தூசு,குச்சிகள்,அதில் ஒட்டித் தெரிந்த  நேற்றைய முன் பனி இரவின் காயாத அரை ஈரம்,வளாக்கத்தின் ஓரமாய் முளைத்து த் தெரிந்த மரங்கள்,அதில் பழுத்தும்,இளம் பச்சையுமாய் காணப்பட்ட இலைகள் அவை களின் முதிர்ச்சி,வளர்ச்சி,தோற்றம் எல்லாம் தாண்டி அலுவலகத்தின் உள்ளே செல்கிறான் கருப்பசாமி.

போவதற்குமுன்வேப்பமரத்திலிருந்தகுருவிகளிரண்டைப்பார்த்துகண்ணடித்துச் செல்கிறான். அவைகளும்பதிலுக்குடாட்டாக்காட்டிவிடை தருகின்றன.

இவைகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றி முறையாக வளர்த்திருந்தால் இன்னும் எவ்வளவோ வளர்ந்திருக்கும்.பலன் தந்திருக்கும்.

 பத்து வருட சரித்திரம் இருப்பதாய்ச் சொன்னார்கள் அந்த மரங்களுக்கு.அவ்வளவுதான் போலிருக்கிறது “ஊரான் பிள்ளைக்கு குண்டி கழுவிவிட்ட ஏற்பாடாய்தான்.சரியாக கழுவாத நிலையிலும் கூட இவ்வளவு வந்திருப்பதுஆச்சரியம்தான்.அலுவலகத்தின்உள்ளேஆபீஸர்,
அவருகடுத்ததாய்கிளார்க்,அதற்கடுத்ததாய்என,,,,,,,,அவரவரது பதவிக்குத் தகுந்தவாறு  அமர்ந்திருந்தார்கள்.

 அதிகாரியிடம் கடிதத்தை காண்பித்து அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் கட்டுகிற இடத்திற்குச் சென்றான்.

அதிகாரி45வயதிற்குட்பட்டவராய்த்தெரிந்தார்.சேலை பளிச்சென்றிருந்தது. சட்டை சேலை நிறத்திற்கு சற்று பொருத்தமற்றதாய் வயலெட் கலரில்.இன்று முகூர்த்த நாளும் இல்லை, விஷேச தினமும் இல்லை.பின் எதற்கு பட்டுச் சேலையும்,படோடோபமுமாய்?இரண்டு கையிலும், நான்குமோதிரம் கைக்கு மூன்று தங்க வ ளையல்கள் ,செயின் இதர இதர என காணப்பட்டார்.

 பழைய கட்டிடத்திற்கு அவரது ஆடைஅணிகலங்கள் பொருத்தமற்றதாய்.சரி யாராவது மனதிற்கு பிடித்தவர்களுக்காக அணிந்து வந்திருக்கலாம் புது நிற மேனியில் பூனை ரோமங் கள் முளைத்துத்தெரிந்த வலது கையில் பேனா வைத்திருந்தார்.இடது கையில் அடிக்குச்சி வைத்திருந்தார்.

 வெள்ளையர் காலத்து கட்டிடம்.அங்கங்கே காரை பெயர்ந்து உதிர்ந்து தெரிந்தது. மேல் தளத்தை தாங்கி நின்ற உத்திரக்கட்டைகள் வெடிப்புற்று அங்கங்கே பிய்ந்து போய் செதில்,செதிலாய்/

தரை பெயர்ந்து அங்கங்கே ஒட்டுப்பூச்சு பூசியிருந்தார்கள்.அது தனியே தெரிந்தது. அப்படி யே துண்டு,துண்டாக கேக் போல பெயர்த்தெடுத்து வரிசையாக நின்றிருந்த நான்கைந்து பீரோக்களில் அதைஎடுத்து அடுக்கி வைத்துவிடலாம் போலிருக்கிறது.

 காலொடிந்து கல்லோ அல்லது தாங்கு கட்டையோ வைத்திருந்த மரமேஜையில் எல்லோரும் முனைப்பாய் வேலை பார்த்துக் கொண்டிருந்த சதுர ஹாலின் வலது முனையில் உயரமான கதவு வைத்த வாசல் வெளியே செல்ல வழிகாட்டியது.

 அதைத் தாண்டி இடது புறம் இருந்த வாசல் செவ்வகமாய் நீண்ட காசாளர் அறையை காட்டியது.அங்கு போய் படிவம் வாங்கிக் கொண்டு வெளியில் இருக்கும்  இடத்தில்தான் பணம் கட்டவேண்டும்.செவ்வக அறையிலிருந்து படிவம் கொடுப்பவரும் அவரேதான். வெளியிலிருந்து கம்பி வலை வழியாக கட்டும் பணத்தை வாங்குபரும் அவரேதான். அவரைத்தான் காசாளர் என்றார்கள்.

 காசாளரிடம் படிவம்  வாங்கிகொண்டு வெளியில் வந்து பணம் கட்டுவதற்காக நின்ற போது தான் அவனை கவனித்தேன்.

கையில் இறுக்கப் பிடித்திருந்த ரூபாய் நோட்டுக்கள்.முகத்தில் கனமாக அப்பியிருந்த தயக்கம் தன்னுடன் யாராவது பேசி தன்னுடைய பிரச்சனையை தீர்த்து விட மாட்டார்களா என்பது போலிருந்தது.நான் பணத்தை கட்டி விட்டு திரும்பியபோது தயங்கியவனாய் என் பின்னால் நின்றிருந்தான்.சரி பணம் கட்டத்தான் வரிசைக்கு வந்திருப்பான்  என “பணம் கட்டு கண்ணு” என ஒதுங்கி நின்றேன்.

குச்சிகுச்சியாய்கைகளும்,கால்களும்கொண்டமேனிசிவந்துவெளுத்திருக்கஎண்ணெய் வழிந்து வியர்வைபிசு,பிசுப்புடன் காணப்பட்டான்.

அவன்படிக்கிறபள்ளியின்யூனிபார்ம்தான்போலிருக்கிறதுஅதைத்தான்உடுத்தியிருந்தான்.
வெளுத்துப் போன கலரிலிருந்த பேண்டும்,சட்டையும் எப்பொழுது கிழியும் என்கிற உத்திர வாதமில்லாமல்.

அழுக்கேறியிருந்த பாதத்தில் இருந்த செருப்பு இன்னும் எத்தனை நாள் தாங்கும் என சரியா க த் தெரியவில்லை.நின்றிந்த தரையின் வெடிப்பிலிருந்த மண் துகள்கள் தரை முழுவ துமாய் சிதறிபரவியிருந்தது.

 “பணம் கட்டுப்பா”,என கருப்பசாமி விலகி நின்றபின்னும் கூட தயங்கி நின்றான்.என்ன ஏது என கேட்கிறான் கருப்பசாமி.பணம் கட்ட பாரம் வாங்கணும்,பாரம் வாங்கனும்னா காசு கேக் குறாங்க என்றான் அவன்.எதுக்காக் பணம் கட்டவேண்டும் என்றபோதுதான் சொன்னான். அவன் படிக்கும் பள்ளியிலிருந்த தங்கும் விடுதில் சேர வேண்டுமாம்.அதற்காய் அரசு முத்திரை குத்திய ஸ்டாம்ப் ஒன்று வாங்க வேண்டும் எனச் சொன்னான்.

“இதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே வைத்திருக்க மாட்டார்களா”-கருப்பசாமி “இல்லண்ணே என்னன்னு தெரியலண்ணே,பள்ளிக்கூடத்துலதான் சொன்னாங்க,அப்படிவாங்கிட்டு வரச் சொல்லி, நேத்துப்பூராவும்யெடம்தெரியாமஅலைஞ்சு நடந்தே அங்கிட்டு,இங்கிட்டெல்லாம் போயிட்டு இன்னைக்கித்தான் வந்தேன்”.என அவன் அடையாளம் காட்டிய இடம் இங்கிரு ந்து ஒரு கிலோமீட்டர் தள்ளியிருந்தது.

“ஏன் பையங்க, வாத்தியார் யார்கிட்டயாவது கேட்டுருக்க வேண்டியதுதான”? எனக் கேட்ட தற்கு அவுங்க சொன்ன வழிதான் இது என்றான்.

சைக்கிள் எதுவும் இல்லையா உன்னிடம் என அவனிடம் கேட்ட நேரம் அலுவகத்திற்கு வெளியே நின்ற தன்னுடைய புது இருசக்கர வாகனம் ஞாபகத்திற்கு வருகிறது  கருப்ப சாமிக்கு.

“இல்லண்ணே,அந்தளவுக்குவசதிஇல்ல.அப்பாகூலி வேலைக்குப் போறாருண்ணே,அம்மா கெடைக்குற காட்டு வேலக்குப்போறாங்கண்ணே, விவசாயமும் சரியா இல்லாததால அந்த வேலையும் சரியா கெடைக்கலண்ணே, தங்கச்சி உள்ளூர் பள்ளிக்குடத்துல படிக்கிறா,பாதி நாளு பள்ளிக்கூடம் போவா,மீதி நாளு அம்மா கூட வேலைக்குப் போயிருவா”என்றான்.

 அவனதுநடப்பும்,பேச்சும்இன்னும்பிஞ்ச்சுப்பருவத்தை தாண்டாததாகவே. எட்டாம் வகுப்பு படிக்கிறஅவன்படிப்பில்எப்பொழுதும்முதல் இடம்தானாம்.

ஆனால் நடப்பு  வாழ்க்கை அவனை கடைசி நான்கு இடங்களுக்குள்தான் வைத்திருந்தது. அதுதான் அவனை இலவச தங்கும் விடுதி நோக்கி நகர்த்தியிருக்கிறது.

 போட்டி போட முடியவில்லைதான்,நீந்த முடியவில்லைதான்,எதையும் லேசாக கடந்து விட முடியவில்லைதான்.ஆயினும்  எத்தனை  துன்பம் வரினும் படிக்க வேண்டும்,படிப்பு ஒன்றே பிரதானம் என அவன் எடுத்த முடிவே அவனை இங்கு நகர்த்தியிருக்கிறது.

“இங்க  பணம் கட்டி முத்திரை ஸ்டாம்ப் வாங்க லஞ்சம் கேட்குறாங்க, நான் என்ன செய்யட்டும் இப்ப” என கையை பிசைந்து நின்றவனிடம் 'லஞ்சமாக எவ்வளவு கொடுக்க வேண்டும்  எனக்கேள் கொடுத்துவிடலாம் நான்தருகிறேன் பணம் உனக்கு” என்றவாறு அவனருகில் போய் நிற்கிறான் கருப்பசாமி.  

13 comments:

Anonymous said...

வணக்கம்

கதைக் கரு மிக அருமையாக உள்ளது நல்லமொழி நடையில் அமைந்துள்ளது வாழ்த்துக்கள்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Tamizhmuhil Prakasam said...

நல்ல கதை. வாழ்த்துகள் ஐயா.

Yaathoramani.blogspot.com said...

அன்றாடம் நடக்கும் கதை
யதார்த்தம் சொல்லும் முடிவு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

பதிவு மனம் கவர்ந்தது

விச்சு said...

இயல்பான நடை. சிவகாசியின் தூசு மண்டலத்தையும் சொன்னது அருமை. சிவகாசி சென்று வந்தவர்களுக்கே அது தெரியும்.

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார் நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கோமதி அரசு said...

கதை நன்றாக இருக்கிறது.

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

வணக்கம் கோமதி அரசு சார் ,நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/