21 Aug 2013

கிரகப்பிரவேசம்,,,,,,,


ண்மையில் ஒரு கிரகப் பிரவேச வீட்டிற்க்குச் சென்றிருந்தேன்.கிரகப் பிரவேசம் என்பதே ஒருசுபயோக சுபதினத்தின் ராகு காலம் அற்ற காலை வேளையில் நடப்பதுதானே?ஆனால் இவரது வீட்டுக் கிரகப் பிரவேசம் அப்படி யெல்லாம் நடக்கவில்லை. முகூர்த்த நாளும்,முகூர்த்த வேளையும் அற்ற ஒருநாளின் மாலைமயங்கியநேரத்தில் ரிப்பன்கட் பண்ணி கிரகப் பிரவேசம் நடத்தப்படுகிறது. 
தமிழக அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் அவரும்,அரசுப் பள்ளியில் ஆசிரியையாகபணிபுரியும் அவரது துணைவியாருமாக ஒரு தனியார் வங்கி யில்கடன்பெற்றுகட்டியவீடு.வீடுபார்க்கஅழகாகஇருந்தது.செங்கலும்,சிமெண் டும்,மார்பில்தரையுமாய்பளிச்சிட்டவீட்டில் அவர்களது உணர்வும்உதிரமும் கலந்தே தெரிந்தது.   
அந்த கலப்பில் வராண்டா,ரூம்,ஹால் ,கிச்சன் இவற்றோடுசேர்த்து புத்தக அறைஎனதனியாகஒருரூமைஒதுக்கியிருந்தார்கள்.புத்தகஅறைக்குள்இருந்த இருபது புத்தகங்களும் தன்னை வெளிப்படுத்திக்  கொண்டிருந்தன புத்தம் புதிதாக.அதிசயமாக அந்தபுத்தகஅறைக்குள் நுழைந்த மிகக்குறைந்த  வெகு சிலரே அந்த புத்தகங்களை எடுத்து புரட்டுவதும் அப்படியே வைத்து விடுவது மாக இருந்தார்கள். 
மாலை ஆறு மணிக்கு துவங்க இருந்த கிரகப்பிரவேச விழா அரை மணி தாமதத்துடன்ஆரம்பித்தது.அதுவரைபாடிக்கொண்டிருந்தபாடல்களை 
நிறுத்தி விட்ட மைக் செட்க்காரர், மைக்கை சரி பண்ணி டெஸ்டிங்கில் ஒன்,டூ, த்த்திரீ.............,,சொல்லிக் கொண்டிருந்தார். 
தொழிற் சங்கத்தலைவர்களும், முக்கிய பிரமுகர்களுமாய் வாழ்த்திப் பேசப் போகும் மேடை அது.மேடை என்னபிரமாதமாய்.வீட்டைஒட்டிகுரோட்டன்ஸ்  வளர்க்கலாம் என அவர் கட்டியிருந்த முழங்கால் அளவேயான உயரமுள்ள நீளமான நாற்சதுரத் தொட்டியின் மேல் பலகை போட்டு அதையே மேடை யாக்கியிருந்தார்கள். 
மாலை ஆறரை மணிக்கு ஆரம்பித்து ஒன்பது மணிவரை நடந்த அந்த விழாவில் அவரது சொந்தங்கள்,நண்பர்கள்,அக்கம், பக்கம் சக ஊழியர்கள் அவர் சார்ந்திருந்த தொழிற் சங்கத்தினர் என எல்லோரும் வந்திருந்த கிரகப் பிரவேச விழா நகரை ஒட்டிய இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில். 
அவர் கட்டியிருந்த வீட்டின் விழாவிற்கு வரப் போக அவர்சார்ந்ததொழிற்சங்க அலுவலகத்தின் அருகிலிருந்து ஒரு வேன் "சன்டிங்" ஓடிக் கொண் டிருந்தது. அவரது தொழிற்சங்க சாக்கள் யாவரும் இறக்கைகளை புதுப்பித்துக் கொண்டு கிரகப்பிரவேசவேலைகளில்உணர்வையும், ழைப்பையும்  கலந்து விட்டிருந்தார் கள்.  
சமையல், சாப்பாடு .பந்தி ஏற்பாடு இத்தியாதி,இத்தியாதி எனஎல்லாம் முடிந்து கிளம்பலாம் என்றிருக்கும் போதுதான் அந்த அறிவிப்பு வருகிறது காற்று வழியாக மிதந்து.புதிய வீட்டிலிருந்து சிறிது தூரமே தள்ளியிருக்கக் கூடிய கிராமத்து மந்தையில் ஒருகலைநிகழ்ச்சிஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது. 
கலை நிகழ்ச்சி என்றால் ஆடலும்,பாடலும்ரகமோநரிக் குறத்தி,கட்டபொம் மன் நாடகமோ அல்ல.அன்றைய நாட்டு நடப்புகளையும் அரசியல் நிகழ்வுக ளையும், நிலைமையையும் படம் பிடித்து காட்டிய நிகழ்வாய் அந்த கலை நிகழ்ச்சி. 
அந்த கலைநிகழ்ச்சியை ஒட்டு மொத்த கிராமமும் உட்கார்ந்து பார்க்கவில்லை யாயினும் கூட ஐநூறை தொடாத எண்ணிக்கையில் மக்கள் கூட்டமாய் தெரிந்தார்கள். 
நான்கு மணி நேரம் நடந்த கலை நிகழ்ச்சி கிரகப் பிரவேச விழாவின் உயிர் நாடியாய். அந்த கலை நிகழ்சியே அவர்களை ஈர்த்து பெரிதும் பேச வைக் கிறது. அந்த கிராமத்தில்.அந்த நிகழ்வை ஒட்டி வீட்டுக் கிரகப் பிரவேசவிழா நாயகன் மீதான பார்வையும் மதிப்பும் கூடுகிறது அந்த கிராமத்து மண் மத்தியில்.அந்த மண்ணை கை நிறைய அள்ளிப் பார்த்தால் இன்றும் அந்த கிராமத்துப் பேச்சின் பதிவு இருக்கலாம். 
கலை நிகழ்ச்சி,அதை ஒட்டிய ஈர்ப்பு மக்களின் பேச்சு இவை எல்லாம் ஒரு பக்கமாக இருந்த போதிலும் கூட ,,,,,,,,,,,,,சாப்பாடு, உபச்சாரம், விழா சந்தோஷம்,,,,,,,,என்கிற வகையறாக்களுக்குள் மட்டுமாக அடங்கிப் போகாமல் இப்படியானதொரு முற்போக்கு கலைநிகழ்ச்சியை நடத்தும் எண்ணம் அவருக்குள் எங்கிருந்து முளை விடுகிறது?ஏன் அவர் அந்த நிகழ்ச்சியை அவ்வளவு செலவுகளுக்கு மத்தியிலும் சொந்தமாய் நடத்த வேண்டும்?அப்படி நடத்தும் அவரின் உளகிடக்கையும், மனவெளிப்பாடும் எதாய் இருக்கிறது?நாம் வாழும் சமூகத்தில் சமூகம் சார்ந்தும், மக்கள் வாழ்வு சார்ந்தும் ஏதேனும் ஒரு நல்ல நிகழ்வை நிகழ்த்த வேண்டும்.அது மக்கள் மனதில் சிறிய அளவிலான அசைவையாவது ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரின் ஆசையாகவும்,உளக் கிடக்கையாகவும் இருந்திருக்க வேண்டும் அந்த நேரத்தில். 
கிரகப் பிரவேச் செலவோடு இம்மாதிரியான கலைநிகழ்ச்சியை நடத்தும் செலவையும், ஏற்பாடுகளையும் ஒரு சுமையாக கருதாமல் செய்யும் மனம் ஒரு முற்போக்கு தொழிற்சங்க வாதியான அந்த அரசு ஊழியரினுள் மலர்ந்ததைப் போல எல்லோரினுள்ளும் ஏதாவது ஒரு வடிவில் மலர்வது சாத்தியமே என்பதையும் சொல்லி முடிந்தது அவர் வீட்டு கிரகப் பிரவேசம்.

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏதேனும் ஒரு நல்ல நிகழ்வை நிகழ்த்த வேண்டும் எனும் அந்த நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள்...

Tamizhmuhil Prakasam said...

அருமையானதோர் பகிர்வு. பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

மாதேவி said...

கலைகளை மக்கள் மனதில் நிறுத்துவது நல்ல நிகழ்வு. வாழ்த்துகள்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

வித்தியாசமான கிரகப்பிரவேசம். ரசித்தேன்.. யாரோ எவரோ தெரியாது இருப்பினும் விழா நடத்திய அவரை பாராட்டினேன் மனதிற்குள். பகிர்ந்த உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

ராஜி said...

வாழ்த்துக்கும் வணக்கத்துக்கும் உரியவர்

Anonymous said...

பதிவு இனிமையாக இருந்தது. ரசித்தேன்.
வாழ்வின் நெருக்கடிகளின்றி மலரும் உள்ளத்தில்
புதிய எண்ணங்கள் முளைவிடுவது இயற்கையே.
இதை பதிந்ததற்கும் மிக்க நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ஆத்மா said...

நல்லதொரு பகிர்வு சார்

நிலாமகள் said...

நாம் வாழும் சமூகத்தில் சமூகம் சார்ந்தும், மக்கள் வாழ்வு சார்ந்தும் ஏதேனும் ஒரு நல்ல நிகழ்வை நிகழ்த்த வேண்டும்.அது மக்கள் மனதில் சிறிய அளவிலான அசைவையாவது ஏற்படுத்த வேண்டும் //

அவர் யாரென எங்களுக்கும் அறிமுகப் படுத்தி இருக்கலாமே...

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமான கிரஹப்பிரவேச விழா...
விழாவை நிகழத்திக் காட்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நல்ல நிகழ்வை நிகழ்த்டிச்செல்கிற மனங்கள் எப்பொழுமே இருக்கிறதுதான் இங்கு.அவர்கள் உன்மையாகவே இச்சமூகத்தின் மேல் அக்கறை உள்லவர்களாக இருக்கிறார்கள்.

vimalanperali said...

நன்றி தீண்டுக்கல் தனபாலன் சார் வருகைக்கு/

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில் பிரகாசம் சார்.நன்றி தங்களது வருகைக்கும் , கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மாதேவி அவர்களே/
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/ நிற்கட்டும் கலைகள் எப்பொழுதும் மக்கள் மனதில் என ஆசைப்படுகிற தங்களின் சொல் போலவே ஆசைப்பட்டவராய் இருக்கிறார் நிகழ்வின் நாயகர்.

vimalanperali said...

வணக்கம் ஸ்ரீ விஜி மேடம்.நன்றி தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/விழா நடத்தியவர் ஒரு பொது நலவாதி/

vimalanperali said...

வணக்கம் ராஜிமேடம்.நன்றி தஙகளது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/வணக்கத்துக்கும்,வாழ்த்துக்கும் உரியவராய் இருப்பவர் ஒரு பொதுநலவாதி/

vimalanperali said...

வணக்கம் கோவைகாவி அவர்களே/நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கு மாக/வாழ்வின் நெருக்கடிகளின்றி மலர்கிற உள்ளங்கள் இங்கு நிறையவே/

vimalanperali said...

வணக்கம் ஆதமா சார்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வனக்கம் நிலாமகள் அவர்களே.
நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சே குமார் அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Several tips said...

Nandru.