31 Aug 2013

அந்திமம்,,,,,,,


                               
அவரை நாங்கள் அந்நியமாகப் பார்த்ததில்லை.தொந்திரவாகவும் உணர்ந்ததில்லை.
எழுபத்தைந்து வயது கடந்து விட்ட அந்த மூதாட்டியை பாட்டி என்றே அழைத்தோம்அவரும் எங்கள் அனைவரையும் டேய் என்றுதான் அழைப்பார்.

மாதா மாதம் எங்களது வங்கிக்கு வருவார்வட்டிப் பணம் எடுக்க.(மொத்தமாக போட்டிருந்த பணத்திலிருந்து மாதாமாதம் வட்டி எடுக்கிற மாதிரி ஏற்பாடு)

முதுமையை எட்டி விட்ட போதிலும் அவரது உடலிலும்,மனதிலுமாய் ஒட்டிக்கொண்டிருந்த ஆரோக்கியம் எங்களை ஆச்சரியப் படவைத்ததுண்டு.

அந்த வயதிலும் தனது உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சனாதன விதவைத்தாய்.இன்றளவும்  யாருடைய துணையும் அற்று தனியாளாய் இந்திய கிராமங்களி ல் வசிக்கும் ஆயிரக்கணக்கான மூதாட்டிகளை போல இவரும்./

அவரை பார்க்கும் கணங்களில் தனியாளாய் வசிக்கும் எனது தாயின் ஞாபகம் வர மறப்பதில் லை   .

அவர் வங்கிக்கு வரும் போதெல்லாம் சொல்லுவார்.”இப்பொழுதான் களை எடுத்து விட்டு வரு கிறேன்” “ஆட்டுக் குட்டிக்கு  புல்லுப் புடுங்கப் போனேன்.” “வீட்டுலசமையல் வேலைஇ ருந்துச்சிஎன./

விடுங்கடா,ஏந்துன்பம் என்னோடபணத்தக் குடுங்கப்பா நான் போறேன்தலை போற வயசு ல இந்த கெழவியப் பத்திப் பேச என்ன இருக்குடா என்பார்அவரது மகன் பெயரிலும்மரு மக ள் பெயரிலுமாக வங்கியில் டெபாசிட் இருந்தது மாதந்திர வருவாய்த்திட்டத்தில்.

அதில் கிடைக்கும் வருவாயை மாதாமாதம் தனது தாய்க்கு தந்து விடுமாறு ஒப்புதல் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தார்கள் வங்கிக்கு./

அதன் படியே தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருந்தது இந்த ஏற்பாடுபணம் எடுக்க வரும் அந்த மூதாட்டி பணத்தை வாங்கிக் கொண்டு உடனே போவதில்லை.

போடா,வாடா,இந்தக் கெழவிக்கு ஒங்க மத்தியானச் சாப்பாட்டக் குடுங்கடா”......,,என்றெல்  லாம் நிறையப் பேசிக் கொண்டு செல்வார்பெரும்பாலும்மதியநேரம்,அல்லதுகணக்கு முடிக்கப் போகும் நேரமாகப் பார்த்துதான் அவர் வருவார்.

அவரின் பேச்சு பெரும்பாலான நாட்களில் “ஒங்க சாப்பாட்ட எடுத்துசாப்டுரு வேன்டாஎன்ப தாக த்தான் முடியும்.அல்லது அந்தப் புள்ளியில்தான் மையம் கொண்டுநிற்கும்.

ஒரு நாளானால் அவரது கையில் இருந்த “டிபன் பாக்ஸை” எடுத்துக் கொண்டு விட்டேன்மள,மளவென்று அழுதே விட்டார் பாவம்.

இம்மாதிரியன நடைமுறைகள் இன்றுநேற்றல்ல நான் அந்த அலுவலகத்தில் பணியில் சேர்ந்த நாள் முதலாக இதுதான் நடைமுறையாக./   இப்படியான நடைமுறையின் ஊடாக ஒரு நாள் அலுவலகத்திற்கு கணவன்,மனைவியுமாக இருவர் வருகிறார்கள்.  தோற்றத்தில்உடை யில்அலங்காரத்தில் பணக்காரத்தனம்.

டாடா சுமோவில்தான் வந்திருந்தார்கள்.மடிப்புக்கலையாத சூட்,கோட்,டை.சூ எனகணவனு ம்,,,,,,, விலைஉயர்ந்த புடவைக் கட்டு,வாசனை செண்ட் ,பவுடர் பூச்சு,லிப்ஸ்டிக்,நகை அலங் காரம் என மனைவியுமாய் ./
       
வந்தார்கள்,மேலாளரிடம் சென்றார்கள்,இரண்டு பேருடைய டெபாசிட் பத்திரங்களையும் கா ட்டி முடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்கள்இடையில் முடிப்பதால் வட்டி குறையும் என்றோம்பரவாயில்லை.பண்ணிக் கொடுங்கள் என்றார்கள்.

எல்லாம் முடிந்து பணம் வங்கிக் கொண்டு போகும் போதுதான் நான் கேட்டேன்.என்ன சார்திரும்ப பணம் எதுவும் போடுவீங்களா,இல்ல,,,,,,,, ?/ “இல்ல சார் நானும் ஏங் வொய்ப்பும் இதுவரை வெளிநாட்டுல இருந்தோம்.இப்ப இங்கயே செட்டில் ஆயிடலாம்னு ஒருயோச னைசின்னதா ஒரு பேக்ட்ரி வைக்கலாம்னு இந்த பணமெல்லாம் ட்ராப் பண்றேன்மிச்சம்இருந்தா கொணாந்து போடுறான் கண்டிப்பா./ எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

சரியாக அவர்கள் போன அரைமணி கழித்து அந்தப் பாட்டியும் வந்து விட்டார்என்னப்பா வந்தாங்களா ஏங் மகனும்,மருமகளும்.?

பாட்டியின் குரலில் சுதி குறைந்திருந்ததுதேகம் வாடி முகம் கறுத்துக் காணப்பட்டார்.திரு விழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தையின் பரிதவிப்பு அந்த பாட்டியின்முகத்தில்.

ஏங் பேர்ல இருக்குற கணக்க முடிச்சு குடுங்கடா,என அந்த பாட்டி நீட்டிய அவரதுகணக்கு ப்  புத்தகத்தில் 150 ரூபாய் இருந்தது

ஏதாவது இந்த அனாதக் கழுதைக்கு செலவுக்கு ஆயிட்டுப் போகட்டும்டா என கலங்கியவிழி களுடன் நின்றார்.

மகனும் மருமகளும் வந்தார்கள்பணம் கொடுத்தோம்.தாயாரும் வந்தார்கள் பணம் கொடுத் தோம்இனி மேல் யார் வருவார்கள் அந்த தாய்க்கு பணம் போட?இனிமேல் அவர் எங்கு போ வார் மாதா மாதம் பணம் எடுக்க?

அவரது வாழ்க்கையின் அன்றாட நகர்வுக்கானபொருளாதாரத்தைஅவர்எங்கிருந்துஈட்டுவார்?
என்பது போன்ற நிறைந்து போன கேள்விகள் எங்களில் எழாமல் இல்லை.இப்படி விடை தெரியாத கேள்விகள் பல அந்த மூதாட்டியின் கண்ணீருக்குப் பின்னாலும்அவரைப் போன்ற எண்ணற்ற தாய்மார்களின் கண்ணீருக்குப் பின்னாலும்./

2 comments:

Tamizhmuhil Prakasam said...

நெஞ்சை கனக்கச் செய்கிறது மூதாட்டியின் நிலை.

vimalanperali said...

வணக்கம் தமிழ் முகில்பிரகாசம் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/